Announcement

Collapse
No announcement yet.

Swapna & sushupti

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Swapna & sushupti

    Swapna & sushupti


    இதற்கு முந்தய அஞ்சலில் அவஸ்தா த்ரயத்தின் முதல் அவஸ்தையான "ஜாக்ரத்" குறிது சில தகவல்களை தெரிந்துகொண்டோம்.
    இந்த அஞ்சலில் அடுத்த இரண்டு அவஸ்தைகளை குறித்து பார்ப்போம்
    சொப்னாவஸ்தை.
    மாண்டூக்யம் சொல்கிறது:
    ஸ்வப்ன-ஸ்தானொ .ந்த: –ப்ரஜ்னா:: சப்தா-ங்க எகொனவிம்ஷதி முக:
    ப்ரவிவிக்த-புக் தைஜசோ த்விதிய பாதா:
    இரண்டாவது அவஸ்தையில் கனவு காண்கின்ற நம் நிலையை குறித்துச் சொல்லப் பட்டிருக்கிறது. கனவு தூங்கும்பொழுதும் காணலாம்;தூங்காமலிருக்கும் பொழுதும் காணலாம்.எப்படியிருப்பினும் கனவு காணும் பொழுது நாம் உள் நோக்கி சிந்தனையைத் திருப்புகிறோம்.இதைத் தான் "அந்த: ப்ரஞ்சய",ப்ரவிவ்க்தா அல்லது சூக்ஷ்ம திருஷ்டி தைஜசாஎன்றெல்லாம் அழைக்கப் படுகிறது.
    கனவிலும் நாம் பௌதிக வஸ்துக்களை தான் காண்கிறோம். நாம் ஏற்கனவே கண்ட பௌதிக வஸ்துக்கள் குறித்து நம்மனதில் எழுந்த,எழுகின்ற விகாரங்களின் வெளிப்பாடுகள் தான் கனவாக நம் உறக்கத்தில் வருகிறது.அல்லது நமதுகடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளின் எதிரொலியாகவும் கனவுகள் அமைகிறது.
    விழித்துக்கொண்டு இருக்கின்றபொழுது காண்கின்ற கனவுகள்,வருங்காலத்தை குறித்த நமது எதிர்பார்ப்புக்கள்;கற்பனைகள்;எதிர்கால திட்டங்கள்.எப்படியிருந்தலும் எல்லாமே நமது மனத்திற்குள் நிகழ்கின்றவை. கனவுகள்உண்டாகின்ற பொழுது நமது கர்மேந்திரியங்கள் மூலம் நாம் அந்த நேரத்தில் காணுகின்ற வெளியுலக வஸ்துக்கள்சம்பந்தப்பட்டதல்ல.
    நமது மனம் சம்பந்தப் பட்டது தான் கனவு .நமது புலன்கள் சம்பந்தப்பட்டது தான் கனவு. நாம் ஏற்கனவே உள் வாங்கி சேகரித்து வைத்துள்ள் அனுபவங்களின் பிரதிபலிப்புக்கள் தான் கனவுகள்.கனவுகளிலும் "நான்" "நீ" "இது" "அது". எங்கின்ற வேற்றுமைகளை உணருகிறோம்.


    "ஜாக்ரத்" அவஸ்தையில் நாம் கண்ட ஏழு அங்கங்களும் பத்தொன்பது வாய் களும் சொப்னாவஸ்தயிலும் இயங்குவதாக நாம் உணருகிறோம்


    நமது ஸ்தூல அறிவு குறைபடுகிறதோ,அங்கெல்லாம் சூக்ஷ்ம புலன்கள் இயங்கி நமது கற்பனா சக்தியினால் அந்த குறைவுகளை நிரப்புகிறோம்.


    அப்படி நிரப்பும் பொழுது ஸ்தூல புரிவுணர்தலிலும் மாற்றம் ஏற்படுகிறது.


    அந்த சூக்ஷ்மமான மாற்றங்கள் பிற்காலத்தில் நமது நடவடிக்கைகளிலும்,பார்வைக் கோணங்களிலும் மாற்றம் ஏற்படுகிது.அது செயல்களின் மீது தாக்கம் செலுத்துவதால் நமது கர்ம பாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் உண்டாகின்றன.


    இப்படி ஏற்படுகின்ற மாற்றங்களினால் நமது புரிது உணர்தல்(perceptions) மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்டு,உருவாகி அழிக்கப்பட்டு புத்துயிர் பெறுகின்றன. இப்படி எரிக்கப்படுவதால் இந்த நிலையை "தைஜசா" என்று அழைக்கிறார்கள்.


    சொப்னாவஸ்தயில் ஆத்மன் சூக்ஷ்ம வஸ்துக்களை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.நமது வாசனைகள் ஜாக்ரத்தில் என்பது போல் சொப்னாவஸ்தயிலும் வெளிப்படுகிறது..


    மேற்கண்ட விவரணங்களிலிருந்து நாம் ஜாக்ரத் அவஸ்தையில் காணுகின்றவை தான் நிஜம்;சொப்னாவஸ்தயில் காண்பவை நிஜமல்ல என்ற முடிவிற்கு வர வாய்ப்பு உண்டு.


    அது சரியான முடிவல்ல என்ற வாதத்தையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஏனென்றால் யார் அந்த முடிவிற்கு வருகிறார்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.யாரோ ஒருவர் சொப்னாவஸ்தயிலும் ஜாக்ரத்திலும் சாக்ஷியாக இருந்தாலொழிய இரு அனுபவங்களையும் ஒத்து நோக்கி, இது நிஜம்,அது நிஜமல்ல என்று கூற முடியும்.அதையும் தவிர எப்பொழுது அந்த ஸாக்ஷி அப்படிப்பட்ட முடிவிற்கு வருகிறான் என்பதும் முக்கியம்.


    நாம் 'ஸொப்னாவஸ்தை" நிஜமல்ல என்ற தீருமானத்திற்கு வருவது ஜாகரத் அவஸ்தையில்த் தான். ஆகவே ஜகரத் அவஸ்தயில் சாக்ஷி ஒருதலைபட்சமான முடிவிற்கு வர சாத்தியக் கூறுகளுள்ளது.


    இரண்டுமே நிஜமல்ல என்பதுதான் நிஜம்.'ஸொப்னாவஸ்தையின் தைர்க்யம் –காலயளவு ஜகரத் அவஸ்தையை விட குறைவாக உள்ளது என்பது மட்டும் நிச்சயம்.


    இந்த இரு அவஸ்தையிலும் நாம் இன்ப துன்பங்களுக்கு ஆளாகிறோம் என்பதும் உண்மை.


    சொப்னத்தில் நடக்கின்ற பொழுதும் நமது ஸ்தூல சரீரமானது,ஜாகரத்தில் எவ்வாறு நிகழ்வுகளினால் உந்தப்பட்டு பிரதிகரிக்குமோ அதே போல் பிரதிகரிக்கிறது. கனவிலும் பயப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடக்கும் பொழுது உடல் வியர்க்கிறது;நிஜத்திலும் வியர்க்கிறது.காணக்கிடைகாத ஒரு கா ட்சியை காணுகின்ற பொழுது நமது உள்ளம் உவகை எய்துகிறது.





    சுஷுப்தி
    கனவு நிலையில் நாம் ஸ்தூல பொருள்களின்,,ஸ்தூல பொருள்கள் சம்பந்தமான விகார விசாரங்களின் தாக்கத்திற்கு ஆளாகிறோம். சில நேரங்களில் நமது உறக்கத்தில் இம்மாதிரியான எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் உறங்குகிறோம்.அம்மாதிரியான் நிலையை சுஷுப்தி என மாண்டுக்யொபனிஷத் கூறுகிறது.


    யத்ர சுப்தோ ந கஞ்சன் காமம் காமாயதே ந கஞ்சன்ஸ்வப்னம்


    பஸ்யதி தத்


    ஸுஷுப்தம் ! ஸுஷுப்த ஸ்தான் ஏகீபூத: ப்ரஞானகன:


    ஏவானந்தமயோ!!


    இந்த நிலையில் எந்த விதமான ஆசைகளும் இல்லை.ஆசைகள் நிறைவேறததால் ஏற்படுகின்ற ஏமாற்றங்களும் இல்லை.அமைதி! எந்த விதமான சஞ்சலங்களும் இல்லாமல் பூரண அமைதி.ஏக ப்ரக்ஞ்சை !மனம் ஒரு விதமான சலனமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது.


    ந கான்சன காம்யதே-எதற்கும் ஆசைப்படுவதும் இல்லை,ந காஞ்சன ஸ்வப்னம் பஸ்யதி-எதுவும் வேண்டும் என்று கனவு காண்பதுமில்லை. ஆகவே தத் சுஷுப்தம். இது ஒரு அனிச்சையான செயல். இது தான் ஆன்மாவின் மூன்றாம் பாதம். .மனம் ஒரு முகப்பட்டு உள்வாங்கி விடுகிறது.வெளியுலகு குறித்து எந்த விதமான பிரக்ஞ்சையும் இல்லாமல் ஆனந்தமயமான ஒரு நிலையில் இருக்கிறது.


    சொப்னாவஸ்தைக்கும் ஜாக்ரத் அவஸ்தைக்கும் இடைப்பட்ட ஒரு நிலை தான் இந்த சுஷுப்தி.ஆனால் இது நிரந்தரமல்ல.இது ஒரு இடைவெளி தான்.


    மனம் இகலோக மாயயில் சிக்கி அல்லல்ப் பட்டு அசரும் பொழுது அது தூக்கத்திற்காக ஏங்குகிறது;சுஷுப்தியில் தன்னை அறியாமல் அமழ்ந்து விடுகிறது.


    மேற்கண்ட மூன்று நிலைகளையும் நமது மூன்று சரீர ஸ்திதிகளோடு ஒப்பிடலாம்-ஸ்தூல சரீரம்,சூக்ஷ்ம சரீரம்,காரண சரீ.ரம்


    முதல் நிலை பஹிஷ் ப்ரஞ்ச்யா,ஸ்தூல,வைஸ்வானர.


    இரண்டாம் நிலை அந்த: ப்ரக்ஞ்ச்யா,சூக்ஷ்ம,ப்ரவிவ்க்தா ,தைஜசா


    மூன்றாம் நிலை சர்வஞ்ச்யா,அன்டர்யாமி,யோனிஷ் சர்வஸ்யா


    ஆனால் இவை மூன்றுமே தாற்காலிகமானவைதான்
Working...
X