புதுடில்லி:சீனாவுக்கு ஆண்டுக்கு ரூ.82 லட்சம் கொடுக்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த ஒப்பந்தப்படி,பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் வெள்ளம் குறித்த தகவல்களை பெறுவதற்கு, சீனாவுக்கு இந்தியா ரூ.85 லட்சம் தர வேண்டும்.சீனத் தலைநகர் பீஜிங்கில் துணைத் ஜனாதிபதி ஹமீத் அன்சாரி முன்னிலையில், இதற்கான ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையே நேற்று முன்தினம் கையெழுத்தாகியுள்ளது.
ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்:
பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் வெள்ளம் குறித்த தகவல்களை பெறுவதற்கு, ஆண்டுதோறும் சீனாவுக்கு ஏப்ரல் மாதம் ரூ. 82 லட்சம் இந்தியா வழங்க வேண்டும்.
சீனாவும், இந்தியாவும் தங்கள் பகுதிகளில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதிப் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கு, நதி தொடர்பான நிபுணர்களை அனுமதிக்க வேண்டும்.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் உருவாகி அங்கிருந்து இந்தியாவில் உள்ள பகுதிகள் வழியாக பிரம்மபுத்திரா நதி பாய்கிறது. ஆண்டுதோறும் மே 15மாதம் முதல் அக்டோபர் 15மாதம் வரை பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால், வடகிழக்கு இந்தியப் பகுதியில் அதிக சேதம் ஏற்பட்டு வருகிறது.எனவே, வெள்ளம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதற்காக சீனாவுடன் கடந்த 2002ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது.
அதனைத் தொடர்ந்து 2002ஆம் முதல் பிரம்மபுத்திரா நதி வெள்ள நிலவரம் குறித்த தகவல்களை இந்தியாவுக்கு சீனா வழங்கி வருகிறது. முதலில் இலவசமாக அந்த தகவல்களை வழங்கி வந்த சீனா, 2008ஆம் ஆண்டு முதல் அதற்கு இந்தியாவிடம் கட்டணம் பெற்று வருகிறது.இந்தியாவிற்கு கூடுதலாக தகவல்கள் தர சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.