Announcement

Collapse
No announcement yet.

பிட்காயின் = நாணயமான நாணயமா?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பிட்காயின் = நாணயமான நாணயமா?

    பிட்காயின் என்றால் என்ன?

    information

    Information

    பிட்காயின் ( Bitcoin ) ஒரு மெய்நிகர் ( Virtual ) பணம். கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம். 2009-ல் சந்தோஷி நகமோடோ என்ற புனைபெயரில் அடையாளம் தெரியாத ஒருவரால் பிட்காயின் உருவாக்கப்பட்டது. இதனை கணினியில் உள்ள அல்கோரிதம் ( algorithm )





    notice

    Notice

    வகை கணிதத்தை பயன்படுத்தி யார் வேண்டுமானாலூம் உருவாக்கலாம். இந்த வழிமுறையில் பிட்காயின் உருவாக்குவதை மைனிங் ( mining) என்று குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு கூடுதல் பிட்காயின் உருவாக்கும்போதும், இந்த கணக்கு முறை சிக்கலாகிக் கொண்டே போகும். இவ்வாறு தொடர்ந்து பிட்காயின் உருவாக்க முடியாது. அதிக பட்சமாக 21 மில்லியன் பிட்காயின்தான் உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.






    பிட்காயின் வைத்திருப்போர் அதற்கென ஒரு மெய்நிகர் பணப்பையையும் உருவாக்கி அதில் பிட்காயினை வைத்திருப்பர். இந்த மெய்நிகர் பணப்பைக்கு நமது ஈமெயில்போல ஒரு முகவரியும் கடவுச்சொல்லும் ( password ) உண்டு. இதில் பிட்காயின் போட ஒரு வழி, எடுக ஒரு வழி உண்டு. நான் உங்களிடமிருந்து ஒரு பொருளை வாங்கி அதற்கென பிட்காயினை உங்களுக்கான கடவுச்சொல்லை பயன்படுத்தி என்னுடைய மெய்நிகர் பணப்பையிலிருந்து உங்கள் மெய்நிகர் பணப்பைக்கு மாற்றிவிடுவேன். என்னுடைய மெய்நிகர் பணப்பையிலிருந்து பிட்காயினை எடுக்கும் வழிக்கான கடவுச்சொல் யாருக்கும் தெரியாத வரையில் என்னுடைய மெய்நிகர் பணப்பை பாதுகாப்பாக இருக்கும்.




    -- இராம சீனுவாசன். பூச்செண்டு.
    -- ' தி இந்து ' நாளிதழ்.திங்கள், டிசம்பர் 9, 2013.
Working...
X