ஆகாசவாணி என்று இந்தியா முழுவதும் ஒலிக்கும் ஆல் இந்தியா ரேடியோ வானொலியில் சம்ஸ்க்ருதத்தில் தினமும் செய்திகள் ஒலிபரப்பாகின்றன என்று பலருக்கு தெரிந்திராது. “இயம் ஆகாசவாணி! ஸாம்ப்ரதி தின வார்த்தா: ஸ்ரூயந்தாம்!” என்று முழங்கும் சம்ஸ்க்ருத செய்திகள் தினம் இருமுறை ஒலிபரப்பாகின்றன
Information
சம்ஸ்க்ருதம் பேச்சு மொழியாக பேசுகிறவர்கள் என்று பார்த்தால் இந்தியாவில் 2001 சென்சஸ் கணக்குப் படி சுமார் பதினான்காயிரம் பேர்கள் உள்ளனர். (இது தவிர சம்ஸ்க்ருத மொழி அறிந்தவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்). இருந்தாலும் மற்ற டோக்ரி, போடோ போன்ற மொழி பேசுகிறவர்களை விட சம்ஸ்க்ருதத்தில் பேசக் கூடியவர்கள் குறைவுதான்.
ஆல் இந்தியா ரேடியோவின் தில்லி ஸ்டூடியோவிலிருந்து தான் இந்த சம்ஸ்க்ருத செய்திகள் ஒலிபரப்பாகின்றன. இந்தியாவிலேயே சம்ஸ்க்ருதத்தில் நிகழ்ச்சி ஒலி பரப்பாவது ஆல் இந்தியா ரேடியோவில் மட்டும் தான் என்கிறார் ஆல் இந்தியா ரேடியோவில் சம்ஸ்க்ருத செய்திகள் வாசிக்கிற திவ்யானந்த ஜா அவர்கள்.
Notice
“பஹுஜன ஹிதாய, பஹுஜன ஸுகாய!” – பலரது நன்மைக்கும், பலரது சுகத்துக்காகவும் என்பதே ஆல் இந்தியா ரேடியோவின் எழுச்சி வாசகமாக (motto) உள்ளது. இதில் சொல்லாத செய்தியும் ஒன்று உண்டு: மற்றவர்கள் செல்லத் தயங்குகிற நிலைகளுக்கும் செல்ல ஆல் இந்தியா ரேடியோ துணிகிறது. வெறும் பணத்துக்காக, லாபம் சம்பாதிப்பதற்காக என்று மட்டும் இன்றி பாரதத்தின் செழுமையான மொழியியலை (Rich Linguistic Heritate) பாதுகாக்கவும் இந்த வானொலி நிலையம் ஈடுபட்டு வருகிறது.
அரசாங்கத்தின் அதிகார துந்துபியாக ஆல் இந்தியா ரேடியோவை ஒதுக்கி விடுவது நாகரிக பாணியாக இருக்கலாம். ஆனால் திரைப்பட நிகழ்ச்சிகள் ஆக்கிரமிக்கிற எஃப்.எம் ரேடியோக்கள், லாப நோக்கில் செயல்படும் நிறுவனங்கள் சம்ஸ்க்ருதத்தில் ஓரிரு நிகழ்ச்சிகளாவது நடத்த துணிவார்களா?” என்று கேட்கிறார் ஆகாசவாணியில் ஹிந்தி செய்தி வாசிப்பாளர் திரு.ராஜேந்திர சுக் அவர்கள்.
“தில்லி தலைமை செயலகத்திலிருந்து ஒலிபரப்பாகும் சம்ஸ்க்ருத செய்திகள் பழமையான இந்தியாவின் ஆன்மாவை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக மேற்கொள்ளப் படும் ஒரு முயற்சியே” என்கிறார் திவ்யானந்த ஜா. வேதம், உபநிடதம், வால்மீகி ராமாயணம், காமசூத்திரம், வாஸ்து சாத்திரம் என்று சம்ஸ்க்ருதத்திலேயே இயற்றப் பட்ட பல படைப்புகள் நிரம்பிய பாரத பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்கின்றது இந்த ஐந்து நிமிட செய்திகள்” என்கிறார்.
ஆகாசவாணியின் டைரக்டர் ஜெனரல் திரு,ஜி. மொஹந்தி “பொது ஊடகமாக இருக்கிற நாங்கள், தேவைப் படுகிறவர்களுக்கு லாப நோக்கில் செயல்ப்படும் சந்தையில் கிடைக்கப் பெறாத விஷயங்களையும் கிடைக்கச் செய்கிறோம்” என்கிறார்
மதிப்பிற்குரிய பலதேவானந்தசாகர் தான் இறுதியாக இருந்த முழுநேர செய்தி வாசிப்பாளர். பகுதிநேர ஊழியர்கள் பலரும் இவர் பெயரை மரியாதையுடன் உச்சரிக்கிறார்கள். வாரணாசி சம்ஸ்க்ருத பல்கலைக் கழகத்தில் சாஸ்திரி பட்டம் பெற்ற இவர், ஆல் இந்தியா ரேடியோ முழுநேர செய்தி வாசிப்பாளராக அமர்த்திய மூவரில் ஒருவர். அவர் ஒய்வு பெற்ற பின்னர் உஜ்ஜையினி காளிதாச சம்ஸ்க்ருத அகாதமியில் இயக்குனராக பணிபுரிகிறார். ஆனாலும் இன்னமும் தில்லி வரும்போதெல்லாம் வானொலியில் செய்தி வாசிக்கிறார்.
குஜராத்தி பிராமணரான இவர் “சம்ஸ்க்ருதத்தைப் பற்றிய ஒரு பொதுவான எண்ணம் அது மேல்சாதி இந்துக்கள் குறிப்பாக பிராமணர்களைச் சார்ந்தது என்று இருந்து வருகிறது” என்று கூறுகிறார். இந்த கட்டுரை எழுத நான் சந்தித்த நபர்கள் அனைவருமே பிராமணர்களாக இருக்கிறார்கள் என்பதும் ஒரு பக்கம் நினைவுக்கு வருகிறது. “ஆனால் இது போன்ற குறுகிய வட்டத்தைக் கடந்து பலரையும் சென்று அடையவேண்டும் என்பதே வானொலி செய்திகளின் நோக்கம்.” என்கிறார் அவர். இதுவும் ஒரு சாதனை தான், சமயம் சார்ந்த சடங்குகளில் இருந்து மொழியை வெளியே கொணர்ந்து, அதன் சொல்லின் நயம், ஒலியின் அழகு, பேசி கேட்டு கிடைக்கும் மகிழ்ச்சி அனைவரும் உணரச் செய்வது ஒரு சாதனையே.
வாரத்துக்கு மூன்று நான்கு முறை செய்தி வாசிக்கும் திவ்யானந்த ஜா, தனக்கு இந்தியாவில் மட்டும் அல்லாது ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற உலக நாடுகளில் இருந்தும் “ரசிகர்கள்” கடிதங்கள் அனுப்புவதாகக் கூறுகிறார். “எங்கள் செய்திகளில் இருந்து பலரும் சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்கின்றனர் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்” என்று கூறுகிறார். வானொலி நிலையம் செய்தியை ஒலி பரப்புவதொடு மட்டும் அல்லாமல், அந்த செய்திகளின் வரி வடிவத்தை பி.டி.எப். கோப்பாக தினமும் அளித்து வருகிறது என்பதால் இது சாத்தியம் என்றே தோன்றுகிறது. “செய்திகளைக் கேட்டும், வாசித்தும் உச்சரிப்பை தெளிவாகக் கற்றுக் கொள்ள முடியும்” என்று கூறுகிறார் இவர்
வாரத்துக்கு மூன்று நான்கு முறை செய்தி வாசிக்கும் திவ்யானந்த ஜா, தனக்கு இந்தியாவில் மட்டும் அல்லாது ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற உலக நாடுகளில் இருந்தும் “ரசிகர்கள்” கடிதங்கள் அனுப்புவதாகக் கூறுகிறார். “எங்கள் செய்திகளில் இருந்து பலரும் சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்கின்றனர் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்” என்று கூறுகிறார். வானொலி நிலையம் செய்தியை ஒலி பரப்புவதொடு மட்டும் அல்லாமல், அந்த செய்திகளின் வரி வடிவத்தை பி.டி.எப். கோப்பாக தினமும் அளித்து வருகிறது என்பதால் இது சாத்தியம் என்றே தோன்றுகிறது. “செய்திகளைக் கேட்டும், வாசித்தும் உச்சரிப்பை தெளிவாகக் கற்றுக் கொள்ள முடியும்” என்று கூறுகிறார் இவர்
Notice
தினமும் காலை 6:55AM மணிக்கும் 7:10PM மணிக்கும் செய்திகள் ஒலிபரப்பாகின்றன
• நன்றி (செய்தி மற்றும் படங்கள்): www.livemint.com