Announcement

Collapse
No announcement yet.

புதிய கருவி கண்டுபிடிப்பு !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புதிய கருவி கண்டுபிடிப்பு !

    கோவை இன்ஜினிய்ர் சாதனை .
    குடிபோதையில் இருந்தால் பைக் , கார் ஸ்டார்ட் ஆகாது


    information

    Information

    கோவை கல்வீரம்பாளையம் நால்வர் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் ( 27 ) பி. இ எலக்ட்ரிக் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்தவர் . பல கருவிகளை இவர் கண்டுபிடித்துள்ளார் . தற்போது , ' டிரங்கன் டிரைவ் கன்ட்ரோல் சிஸ்டம் ' என்ற புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார் . இக்கருவியை பைக் , கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களில் பொருத்தலாம் . கருவி சீல் வைக்கப்பட்டிருக்கும்





    notice

    Notice

    டிரைவர் சீட்டில் அமர்ந்தவுடன் , கருவியிலுள்ள ஆல்கஹால் சென்சார் தானாக செயல்படும் . டிரைவர் குடித்திருந்தால் ' மன்னிச்சிடுங்க பாஸ் ... நீங்க குடிச்சிருக்கீங்க... உங்களால வண்டி ஓட்டமுடியாது ' என்று எச்சரிக்கை வரும் . மது குடிக்காவிட்டால் , டிஸ்பிளேவில் 3 இலக்க எண் தோன்றி மறையும் . அந்த எண்ணை நம்பர் பட்டனில் அழுத்த வேண்டும் . அத்துடன் ஓட்டுபவரிடம் உள்ள ரகசிய எண்ணை சேர்த்து அழுத்தினால் வண்டி ஸ்டார்ட் ஆகிவிடும் . வண்டியை ஸ்டார்ட் செய்த பிறகு மது குடித்தாலும் , 30 வினாடியில் கண்டுபிடித்து வண்டி நின்றுவிடும்





    இதற்கு முன் இவர் 2004ம் ஆண்டில் , ' ஆட்டோமேட்டிக் ரூம் கன்ட்ரோலர் ' என்ற கருவியை உருவாக்கினார் . வீட்டு பூட்டை உடைத்து திருடர்கள் உள்ளே வந்தால் , இந்த கருவி சத்தமிடுவதுடன் அனைத்து விளக்குகளையும் எரிய வைக்கும் . இதற்கு போபாலிலுள்ள தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர் என்ற அமைப்பு தங்கப்பதக்கம் வழங்கியது


    --- தினமலர் .27 . ஆகஸ்ட் 2010 .
Working...
X