* " If an individual wins a company does not win . But if a team wins a company also win ". -- இதுதான் டீம் ஸ்பிரிட்டின் மகத்துவம்
Source: க. சந்தானம்
* ஒரு ஒளி ஆண்டு என்பது , ஒளி ஓராண்டில் எவ்வளவு தூரம் பயணம் செய்யுமோ அந்த அளவிவிலான தூரம் . ஒளி , ஒரு நொடிக்கு 3 லட்சம் கி. மீ., பயணிக்கும் ; ஓராண்டில் 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கி. மீ., பயணிக்கும் . இந்த தூரம்தான் ஒரு ஒளி ஆண்டு . இதைவிட அதிகமான தூரத்தை அளக்க ' பார்செக் ' என்ற அலகு உள்ளது ஒரு பார்செக் என்பது 3. 26 ஒளியாண்டுகள் !
* ஒரு விஷயம் குறித்து வெவ்வேறு விதமான கருத்து கொண்டும் , வெவ்வேறான முடிவும் எடுத்து தடுமாறிக் கொண்டிருப்பவர்களை ஆங்கிலத்தில் ' ப்ளோயிங் ஹாட் அண்டு கோல்டு ' ( Blowimg Hot and Cold ) ( வெப்பத்திற்கும் , குளிர்ச்சிக்கும் இடையே தாவிக் கொண்டு இருப்பவர்கள் ) என்பார்கள்
* நிலநடுக்கம், வெள்ளம், புயல் என்று அதிகம் இயற்கை பேரழிவுக்கு உள்ளாகும் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாக்களின் பெயர் ' அழிவுச் சுற்றுலா '
Source: க. சந்தானம்