Announcement

Collapse
No announcement yet.

டிப்ஸ்...டிப்ஸ்...

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • டிப்ஸ்...டிப்ஸ்...

    டிப்ஸ்...டிப்ஸ்...



    * பாகற்காயின் கசப்பை நீக்குவதற்காக காயை வேகவைத்து நீரை வடித்தால் காயின் கசப்போடு சத்துகளும் போய்விடும் . எனவே பாகற்காயை நறுக்கி உப்பு , மஞ்சள் பொடி , வெல்லத்தூள் , எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்கி அரைமணி வைத்திருந்தால் கசப்பு காணாமல் போய்விடும்


     * பெரிய அளவில் காபி தயாரிக்கும் போது டிகாஷன் சீக்கிரம் இறங்க வேண்டுமா ? காய்கறி வடிகட்டும் வடிதட்டை, ஒரு அகலமான பாத்திரத்தின் மேல் வைத்து, தட்டின்மீது ஒரு சுத்தமான, மெல்லிய வெள்ளைத் துணியைப் போடுங்கள் . கால் கிலோ காப்பிப் பொடி போட்டு லேசாக அழுத்தி, கொதிக்கும் வெந்நீரைக் கரண்டியால் ஊற்றுங்கள் . ஒத்தாற்போல ஸ்டிராங்கான டிகாஷன் விரைவில் தயார் 


    * மாறுதலாக தயிர் பச்சடி செய்ய வேண்டுமா ? ஜவ்வரிசியை சிறிது நெய்யில் வறுத்து ஆறியதும் தயிர், உப்பு, நறுக்கிய கொத்துமல்லி, கீறிய மிளகாய் சேர்த்துக் கடுகு தாளியுங்கள் .ஜவ்வரிசி சற்று ஊறிய பின் சூப்பர் பச்சடி தயார் .
    * என்ன ' ஃபிரிட்ஜ்' ஜில் வைத்த சப்பாத்தி மாவு கறுத்து விட்டதா ? அடுத்தமுறை சப்பாத்தி மாவை பிசந்து எவர்சிவர் பாத்திரத்தில் வைப்பதற்குப் பதிலாக பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துப் பாருங்களேன் . நேற்று வைத்தாற்போல மாவு வெளுப்பாக இருக்கும் !

    * கொசுவை விரட்ட உபயோகிக்கும் மேட் தீர்ந்து விட்டதா ? முதல் நாள் உபயோகித்த மேட்டின் மேல் சில துளிகள் வேப்பெண்ணெயை விட்டு, மறுபடி மிஷினில் வைத்து விடுங்கள் .கொசு வராது .
    * மண் தொட்டிகளில் செடி வளர்ப்பதானால் இரண்டு வாரங்களுக்கு முன் தொட்டியில் காய்கறி, பழத் தோல்களை போட்டுக் கொண்டே வாருங்கள் . பாதி தொட்டி நிரம்பியதும் தேவையான அளவு மண், பிடி ஆம்பல் கலந்து விட்டு செடி நட்டால் தள தளவென வளரும் . தோல்களின் மேல் மண்ணைப் போட்டு மூடவும் . இல்லையென்றால் ' நாற்றம் ' எனக் கத்துவார்கள், வீட்டிலுள்ளோர் !
    * வீடு பெருக்கும் துடைப்பம் கட்டையாகிப் போனால், நாம் உடனே தூர எறிந்து விடுவோம் . அப்படிச் செய்யாமல் அவற்றை ஒரே அளவு சீராக வெட்டி ( ஹேர் -- கட் செய்வது போல ) வைத்துக் கொண்டால், வீட்டு ஜன்னல், அலமாரி போன்ற இடங்களைச் சுத்தம் செய்ய உபயோகமாக இருக்கும்


    -- மங்கையர் மலர் / நவம்பர் 2000
Working...
X