சென்னையில் திடீரென தவறி விழுந்து மயங்கிய ராம்ஜெத்மலானி
சென்னை: பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானிக்கு சென்னையில் தவறி விழுந்து திடீரென மயங்கியதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் சீரடைந்ததை அடுத்து பிற்பகலில் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்காக ஆஜராகி வாதிட்டு வரும் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வெள்ளிக்கிழமை சென்னை வந்தார். சென்னையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த ராம்ஜெத்மலானி, இன்று காலை திடீரென தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்து மயக்கம் அடைந்த அவர், உடனே ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து தங்கியிருந்த ஹேட்டல் அறைக்கு திரும்பிய அவர், பின்னர் பிற்பகலில் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றார்.