Announcement
Collapse
No announcement yet.
For your information please.
Collapse
X
-
Re: For your information please.
Respected NVS swamin,
I tried and formed a text using BBCode. Please correct if there is any mistake or error. Is there any easy way of keeping all the BBcode handy before us to use instantly without going in and out to refer a code every now and then.
-
Re: For your information please.
ஶ்ரீ:
மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய ஶ்ரீமான் நரசிம்மாச்சார் ஸ்வாமின்,
எப்போதுமே சொல்லிக்கொடுப்பவர்களின் பங்கு மிகச் சிறியதுதான்,
சொல்லிக்கொள்பவர்களின் திறமையால்தான் அந்த விஷயங்கள் பரிமளிக்கும்.
உதாரணமாக த்ரோணர்தான் அர்சுனன் அவன் ஸகோதர்கள், துரியோதனாதிகளுக்கும்
அஸ்த்ர, சஸ்த்ர ப்ரயோகங்கள் சொல்லி வைக்கப்பட்டன:
ஒரு நாள் ஒரு பொம்மைப் பறவையை மரத்தில் வைத்து அம்பெரியும் பரிட்சையின்போது,
த்ரோணர் துரியோதனனைக் கேட்டார் :
த்ரோணர்: - துரியோதனா பறவை தெரிகிறதா?
துரியோதனன் :- தெரிகிறது ஸ்வாமி
த்ரோ:- பறவை உட்கார்ந்திருக்கும் கிளை தெரிகிறதா
துரி:- தெரிகிறது ஸ்வாமின்
த்ரோ:- அந்த மரம் தெரிகிறதா?
துரி:- தெரிகிறது ஸ்வாமின்
த்ரோ:- நான் தெரிகிறேனா?
துரி:- நன்றாகத் தெரிகின்றீர்களே ஸ்வாமின்.
த்ரோ:- நாசமாப்போச்சு, நீ அம்பை எம் மேலயே போட்டாலும் போட்டுடுவே நகந்துக்கோ.
த்ரோ:- அர்ஜுனா நீ அம்மை எடுத்து குறிபார், நாங்கள் தெரிகிறோமா?
அர்:- தெரியவில்லை ஸ்வாமி
த்ரோ:- மரம் தெரிகிறதா?
அர்:- தெரியவில்லை ஸ்வாமின்
த்ரோ:- பறவை அமர்ந்துள்ள கிளை தெறிகிறதா?
அர்:- தெரியவில்லை ஸ்வாமின்
துரி (மனதிற்குள்):- சரியாப்போச்சு, கிளைளே தெரியலைங்கறான், அம்பை எங்கே உடப்போறான்....?!
த்ரோ:- சரி பறவையாவது தெரிகிறதா?
அர்:- தெரியவில்லை ஸ்வாமின்.
த்ரோணர் வியந்து :- சரி வேறு என்னதான் தெரிகிறது உனக்கு?
அர்:- பறவையின் கழுத்து மட்டும்தான் ஸ்வாமி தெரிகிறது - என்றான்
விடு அம்பை என்றார் த்ரோணர், விட்டான், பறவை இரண்டு துண்டாகி கீழே விழுந்தது.
இந்தக் கதையெல்லாம் எதற்கு என்கிறீர்களா?
எல்லோருக்கும் த்ரோணராகிய ஆசிரியர் ஒரே விதமாகத்தான் கற்பித்தார், ஆனால்
அர்ஜுனனைப் போன்ற சீடர்களால் மட்டுமே கவனத்தை ஒரே விஷயத்தில் செலுத்தி,
விடாது பயிற்சி செய்து வெற்றி அடைய முடிகிறது.
அதுபோல்,
சுலபம் கடினம் என்பதெல்லாம் பயிற்சியைப் பொறுத்ததுதான்.
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் ...
என்கிற பழமொழி தாங்கள் அறியாததா?!
நம் காலத்தில் வாய்பாட்டின் உபயோகம் அதிகம் தேவை என்பதால் அதை மனப்பழக்கத்திற்குக்கொண்டுவர, தினமும் மாலை வேளையில் வாய்பாடு பயிற்சி வகுப்பு நடக்கும்.
அப்படி பயிற்சி செய்யவேண்டியதுதான்.
தற்போது தங்களுக்கு ஆரம்ப டேக், முடிவு டேக் எப்படி அமைகிறது என்பது நன்கு புரிந்துவிட்டது.
ஆரம்ப டேக் மாத்திரம் ஒரு நோட்பேடில் எழுதி அருகில் அதன் பயனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள், தேவையானதை தேவையான இடத்தில், தேவையானபோது உபயோகிக்கலாம்.
தாஸன்,
என்.வி.எஸ்
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2025 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2025 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 00:20.
Comment