Announcement

Collapse
No announcement yet.

விவேகசிந்தாமணி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விவேகசிந்தாமணி

    குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினி லடைத்து வைத்துமி்க்கவே மஞ்சள் பூசி மிகுமணம் செய்தா லுந்தான்அக்குலம் வேற தாமோ அதனிடம் புனுகுண் டாமோகுக்கலே குக்கல் அல்லாற் குலந்தனிற் சிறந்த தாமோ


    கருத்துரைதெருநாயைப் பிடித்துப் புனுகுப்பூனையை அடைக்கவேண்டிய கூண்டினில் அடைத்து வைத்து அதற்குத் தினந்தோறும் அதிகமான மஞ்சளைப்பூசி மிக்க மணமுடையதாக அதனை ஆக்கினாலும், அந்நாயானது வேறாக ஆகிடுமோ? அதாவது புனுகுப்பூனையாக ஆகுமோ? அதனிடத்தில் மணம்மிகுந்த வாசனைப்பொருளான 'புனுகு' உண்டாகுமா? நாய் என்றும் நாய்தான், அது என்றும் உயர்ந்த புனுகுப்பூனை ஆகாது என்று அறியவும். அததற்கு உள்ள இயல்புதான் வரும் என்பதாம்.

  • #2
    Re: விவேகசிந்தாமணி

    பசுவினைப் பாம்பென்று சாட்சி சொல்லக்கூடும் காம்பினில் விஷமென்ன கறக்கவா முடியும்?

    Comment

    Working...
    X