Announcement

Collapse
No announcement yet.

தாய்மாமன் மகள்,அத்தை மகளை திருமணம் செய்ய

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தாய்மாமன் மகள்,அத்தை மகளை திருமணம் செய்ய

    தாய்மாமன் மகள்,அத்தை மகளை திருமணம் செய்யலாமா?
    ----------------------------------------------------------------------------
    ஒருவருக்கு இல்லற வாழ்வு இனிமையாக இருக்கவும்,ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கவும் நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்யக்கூடாது என இந்து சாஸ்திரம் கூறுகிறது.

    இதை விஞ்ஞானமும் ஏற்றுகொண்டுள்ளது.இந்த உறவுமுறையில் திருமணம்செய்தால் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கிய குறைவாகவே இருக்கும்.பெரும்பாலும் மனவளர்ச்சி போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகள் நெருங்கிய உறவு முறையில் திருமணம் செய்தவர்களுக்கே பிறக்கிறது.

    ஜோதிடத்தையும்,இந்து சாஸ்திரத்தையும் கூறுகின்ற,மகாகவி காளிதாசரின்,”உத்திர காலாமிர்தத்தில்” ஒருவன் சொந்த தாய் மாமன் மகளையோ,சகோதரி மகளையோ,தந்தையின் சகோதரி(அத்தை)மகளையோ திருமணம் செய்வது மிகப்பெரிய தோஷத்தை கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

    இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால்,நெல் விவசாயம் செய்யும் விவசாயிகள்(நானும் தான்)அதே நிலத்தில் விளைந்த நெல்மணிகளை விதைக்கு வைக்கமாட்டார்கள்,ஏனென்றால் அந்த விதையை அதே வயலில் விவசாயம் செய்தால் வீரியம் இருக்காது.அதேபோல்தான் ஒரே குடும்பத்தில் தோன்றியவர்களுக்கு மரபணுக்கள் ஒன்றாக இருக்கும்.

    வெவ்வேறு குடும்பத்தின் மரபணுக்கள் சேரும்பொழுதுதான் பிறக்கும் குழந்தை ஆரொக்கியமாக இருக்கும். இந்த திருமணத்தால் ஆரோக்கிய குறைவு என்றாலும் கடைபிடிப்பவர்கள் குறைவு.என்னதான் இருந்தாலும் பெரும்பாலும் சொந்த விட்டு போகக்கூடாது என்பதற்க்ககாக உறவுமுறைகளில் திருமணங்கள் நடக்கிறது.

    அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.


    NOTE: This Thread is a sort of Advice Applicable to all communities.
    Last edited by Padmanabhan.J; 06-12-13, 20:11.
Working...
X