Announcement

Collapse
No announcement yet.

கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

Collapse
This topic is closed.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

    திருமணத்தில் தாலிகட்டும் போது
    கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

    ----------------------------------------------------


    Click image for larger version

Name:	Ketti.jpg
Views:	1
Size:	10.4 KB
ID:	35471
    இருவர் இணையும் நிகழ்ச்சியான திருமணத்தின் முத்தாய்ப்பான விசயமே தாலிகட்டுதல் ஆகும்.அந்த நேரத்தில்,மணவிழாவில் கலந்துகொள்பவர்கள் பலரும் பல விசயங்களை பேசிகொண்டிருப்பார்கள் அதில் கெட்டதும் இருக்கலாம்.

    தேவையற்ற பேச்சுகளையும்,சத்தத்தையெல்லாம் அடக்கும் வகையில், சத்தமாக மேளம் வாசிக்கும்போது, கவனம் மணமேடை பக்கம் திரும்பி விடும். அப்போது அட்சதை தூவி மணமக்களுக்கு ஆசிர்வதிக்க வேண்டும் என்பதற்காக கெட்டிமேளம் முழக்கப்படுகிறது.

    மேலும் கெட்ட சகுனங்களான தும்மல்,தேவையில்லாத சத்தங்கள்,அபசகுனமான வார்த்தைகள் கெட்டிமேளம் அடிக்கும்பொழுது மறைந்துவிடும்.

    அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

  • #2
    Re: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

    ஶ்ரீ:

    பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன் அவர்கள் அன்பான கவனத்திற்கு:

    இதில் உள்ள கெட்டிமேளம் பற்றிய விபரம் சரியானதுதான்,
    ஆனால், திருமணத்தின் முத்தாய்ப்பான விசயம் தாலிகட்டுவதுதான் என்பதை மட்டும்
    ஒப்புக்கொள்ள இயலாது.
    ஏனெனில் வைதீக முறைப்படியான திருமணத்தில்
    தாலிகட்டுவது என்பது ப்ரயோகத்தில் கொடுக்கப்படாத
    இடைக்காலத்தில் நடைமுறையில் ஏற்பட்ட ஒரு இடைச்செருகல்.
    தாலி கட்டுவது பற்றி வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை,
    அந்த நிகழ்ச்சிக்கு வேத மந்திரமும் கிடையாது.
    பாணிக்ரஹணம் என்னும் கைப்பற்றுவதுதான் வேத விதியாகும்.
    இன்றளவும் திருமண பத்திரிகைகளில்
    "பாணிக்ரஹணம் செய்துகொள்வதாய்" என்றும்,
    "கன்னிகாதானம் செய்து கொடுப்பதாய்" என்றுமே
    குறிப்பிடப்பட்டு வருகிறது.
    எனவே தாலிகட்டும் நிகழ்ச்சி முத்தாய்ப்பானது அல்ல
    என்பது அடியேனின் அபிப்ராயம்.
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

      எனது மரியாதைக்குரிய ஸ்ரீ N V S அவர்களுக்கு நமஸ்காரம்,

      தாங்கள் கூ றியுள்ளது போல திரு மாங்கல்யம் அணிவது (தாலி கட்டுவது ) வேறுபட்ட சம்ப்ரதாயங்களிலிருந்து இடைக்காலத்தில் வைதீக முறை திருமணங்களில் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்பதே எனது அபிப்பிராயம் . தவிர இன்றைய திருமணங்களில் பல புதிய சடங்குகள் சேர்க்கப்பட்டுவருவதை காண்கிறோம். ஆந்திரத்திலிருந்து நலங்கு வடக்கிலிருந்து மெஹந்தி (மருதாணி ) அலங்காரம் , சங்கீத் (பாட்டு ) என பல லௌகீக சடங்குகளை நமது திருமணங்களில் காண்கிறோம் .ஆக தாலி கட்டுவதும் அவ்வாறே நமது சடங்குகளில் செர்க்கப்பட்டிருக்கவேண்டும்.
      இதுபற்றி மிகவும் விவரமாக ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் தனது இடுகையில் (Blog - ) மிகுந்த ஆராய்ச்சி செய்து Maangalya DharaNam - Origin and Meaning என்று எட்டு பகுதிகளில் வெளியிட்டு இருக்கிறார்கள் . அவசியம் படிக்கவேண்டிய ஆராய்ச்சிக்கட்டுரைகள் . முழு கட்டுரையும் கீழ் கொடுத்துள்ள web link ல் படிக்கலாம்
      http://www.scribd.com/doc/12856007/M...in-and-meaning

      தங்கள் நலங்கோரும்
      ப்ரஹ்மண்யன்
      பெங்களூரு
      Last edited by Brahmanyan; 03-12-13, 19:11.

      Comment


      • #4
        Re: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

        ஶ்ரீ:
        அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய இனிய நண்பர் திரு.ப்ரஹ்மண்யன் அவர்களுக்கு,
        தாங்கள் குறிப்பிட்ட கட்டுரையைப் படித்தேன்,
        மிகவும் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.
        இதுபற்றிய அடியேனுடைய ஒரு கட்டுரை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக "ஆன்மீகம்"
        என்னும் மாத இதழில் வெளியாகி உள்ளது. அதை கீழே பி.டி.எப் ஆகக் கொடுத்துள்ளேன்.
        இதன் காரணமாகவே, பரம்பரையாக செய்து வரும் வழக்கத்தை மாற்றக் கூடாது
        என்று பெரியோர் கூறுவர்.
        தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி தற்போது, மெகந்தி, சங்கீத், ரிஷப்ஷன் (ஜான்வாஸம் கோவிந்தா!),
        எல்லாம் வந்திருக்கிறது.
        'நலங்கு' ஒரு நல்ல விஷயமே - இது மிக நெடுங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
        ஆனால் இது வைதீக கர்மாவின் நடுவில் இடம்பெறாததால் இதனால் எந்தத் தொல்லையும் இல்லை.

        ஒரு காலத்தில், குழந்தைப் பருவத்தில் திருமணம் நிகழ்த்தப்பட்டது,
        குழந்தைகள் யாரையும் வெறுக்காது, பிடிக்காத்தனம் என்பது இருக்காது,
        வக்ரம், குதர்க்கம் இவை தோன்றாது. எனவே அந்தப் பருவத்தில் திருமணம்
        செய்து வைத்தால் மணமகன் மற்றும் இல்லத்தார் அனைவரிடமும்
        இயல்பாக ஒரு நட்பு ஏற்பட்டுவிடும் என்பதாலேயே நடத்தப்பட்டது.
        பெண்களை அடிமைத்தனம் செய்தவர்களும் இருந்தபோதிலும், எல்லாக் காலத்திலும்
        பெண்களுக்கு மதிப்பு இருக்கத்தான் செய்தது. ஆனால், பெண்கள் தாமாகவே முன்வந்து
        தாங்கள் தன் கணவருக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று சமுதாயத்தில் வெளிப்படுத்துவார்கள்.
        அதில்தான் மகிழ்ச்சி இருப்பதாக நினைத்தார்கள்.
        எது எப்படியோ,
        நலங்கு என்பது, குழந்தை மணமக்களுக்குள் ஒரு நெருக்கத்தை உருவாக்குவதற்காக ஏற்பட்டது.
        சுமார் மூன்று மாத காலம் வரை கூட (திருமணத்திற்குப் பின் பெண் ருதுவாகும்வரை)
        நலங்கு நடக்கும்.
        நல்ல தகவலுக்கு நன்றி,
        என்.வி.எஸ்


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

          பேரன்புக்குரிய ஸ்ரீ NVS அவர்களுக்கு நமஸ்காரம் ,


          "ஆன்மீகம் " இதழில் வெளியிட்டுள்ள தங்களுடைய கருத்தாழமிக்க கட்டுரையயை சில மாறுதல்களுடன் தனியாக அச்சிட்டு திருமணங்களில் கொடுத்தால் நமது திருமண சடங்குகளின் விவரம் எல்லோரும் அறிய உதவும் . சமீபத்தில் அமெரிக்காவில் இருக்கும் மணமகன் தனது திருமண அழைப்பிதழில் சிலமுக்கிய சடங்குகளின் விவரங்களை ஒருபக்கத்தில் கொடுத்திருந்தார். இது ஒரு புதிய முயற்சி.


          தங்கள் நலங்கொரும்
          ப்ரஹ் மண்யன்
          பெங்களூரு .
          Last edited by Brahmanyan; 04-12-13, 10:05.

          Comment


          • #6
            Re: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

            ஶ்ரீ:
            அன்பிற்கினிய திரு.ப்ரஹ்மண்யன் அவர்களுக்கு,
            தாங்கள் தெரிவித்துள்ளபடி, அந்த கட்டுரை வெளிவந்த புதிதில் சில காலம் அதுபோல
            விநியோகம் செய்யப்பட்டது.
            தற்போதும் யாரோ ஒரு சிலர் செய்கின்றனர்.
            திருமணங்களில் பாணிக்ரஹணத்திற்கு முன்பு கைகொடுக்கக் கூடாது என்ற
            விழிப்புணர்வு ப்ரசாரம் டி.வி வாயிலாக அடியேனால் மேற்கொள்ளப்பட்டு
            தற்போது, 75 சதவீதத்திற்கும் அதிகமானவர்களால் (சென்னையில்) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

            இதுபோலவே,
            வரதக்ஷிணை வந்தவழி
            பெண்ணின்தோஷம் மணந்தால் நீங்கும்
            போன்ற விழிப்புணர்வு கட்டுரைகள் சிலவும் வெளிவந்துள்ளன.
            நன்றி,
            என்.வி.எஸ்.


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              Re: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

              Is it possible at this present age for a priest to conduct a South Indian Brahmin marriage without the need for a Thali?
              Will it be accepted by both sides of the Girl?

              I do not think anyone would be prepared to do that!! it will be difficult to eliminate this practice.

              It might be possible in other regions of India.

              We can talk so many things as wrong/ right, but when it comes to practice in our own family, we simply follow what is being practiced, nothing less.

              Sounds have their own effects and vibrations. In a marriage ceremony the various sounds and the sound of people talking at times create negative vibrations. In order to nullify all such Negative vibrations the Nadaswaram reaches a crescendo or Kettimelam.

              The Thread is about Kettimelam and significance of it.
              Last edited by Padmanabhan.J; 04-12-13, 19:43.

              Comment


              • #8
                Re: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

                There are so many Rituals introduced in South Indian Brahmin Function like Janavasam , Nitchayathartham one day before Marriage and on the marriage day Kasi Yatra , the Bride's father offering his daughter to Bride groom.

                Having done Janavasam, Nichayathartham, earlier, Kasi Yathra has no meaning!! But how many from Brahmin community will fore go Kasi Yatra.

                Many additional rituals are introduced in South Indian Brahmin marriage rituals only to enable Guests to see the Boy and Girl and if they know any bad back ground about any of them, they can communicate with the parents.

                In these busy days all guests are not attending all rituals, so it will help them to see the boy/girl , if they could attend any of these.

                About Thali and related Mantra associated with it, is seen as a sacred Ritual not only from Brahmin Community but also from others.

                Thali takes a center Stage in many Tamil Movies.

                Those who say, it was not there in Vedic Marriage rituals etc can they perform their own family function without Thali?


                We are not living in Vedic age, we are living now, and we are following what is followed by every other Brahmin in their marriage rituals; who knows ,in course of time, these rituals might Change, and those living at that time will surely embrace it.
                Last edited by Padmanabhan.J; 04-12-13, 06:18.

                Comment


                • #9
                  Re: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

                  அன்பர் ஸ்ரீ பத்மநாபன் அவர்களுக்கு, நமஸ்காரம்,
                  தங்கள் கூறியுள்ளது முற்றிலும் உண்மையே.
                  இந்நாட்களில் விவாக சடங்குகள் சாஸ்திரமும் சம்ப்ரதாயமும் கலந்தே அவரவர் தேவைக்கேற்ப செய்யப்படுகின்றன .அநேகமாக நடைமுறை விவாகங்களில் திருமண வரவேற்ப்பு விருந்து விவாகத்திற்கு முதல் நாளிலேய மாப்பிள்ளை - பெண் சேர்ந்து வைக்கப்படுகிறது. தவிர பல வெளிநாட்டிலிருந்து வரும் மாப்பிள்ளை மணமானவுடன் (பெண்ணை) மனைவியை தன்னுடன் அழைத்துச்செல்ல ஏதுவாக திருமணமாவதற்கு பல வாரம் முன்னமேயே பெண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து பதிவு விவாகம் (Registered Marriage ) செய்துகொள்வது சாதாரணமாகிவிட்டது.
                  இவையெல்லாம் நடை முறை வாழ்க்கை அவசியத்திர்க்கேற்ப அமைந்துவிட்டன.

                  நீதி சாஸ்த்திரத்தில் எண் (8) முறை விவாகங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன . அந்தந்த கால-தேச அவசியத்திற்கேற்ப மாறுதல்கள் தவிக்கமுடியாதவை என்பது எனது அபிப்பிராயம் .
                  தங்கள் நலங்கொரும் ,
                  ப்ரஹ்மண்யன்,
                  பெங்களூரு.

                  Comment


                  • #10
                    Re: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

                    ஶ்ரீ:
                    திரு.பத்மநாபன் அவர்களின் பதிவில் சற்று கோபம் தெரிகிறது.
                    தங்கள் இடுகையில் ஏதும் குறை சொல்லவில்லை, மேலும், தாலி தேவையற்றது என்ற வாதத்தை
                    யாரும் ஒரு இடத்தில்கூட முன்வைக்கவில்லை, தாங்கள்தான் அதுபற்றி கூறியுள்ளீர்கள்.

                    தாலி - திருமணத்தின் முத்தாய்ப்பு - அதாவது பொருள்செரிந்த - அனைத்தைக்காட்டிலும் முக்கியமான ஒரு வைபவம் என்ற வாதத்தைத்தான் முன் வைத்துள்ளோம்.
                    கெட்டிமேளம் அதன் முக்கியத்துவம் ஒத்துக்கொள்ளபட்டு தொடர்ந்து இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                    மாங்கல்யதாரணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், அதைவிட பலமடங்கு முக்கியமானதான
                    பாணிக்ரஹணம் என்கிற சடங்கு முக்கியத்துவம் இழந்துபோகிறது என்பதே எங்களது ஆதங்கம்.

                    நடைமுறையில் உள்ள ஒரு தவறான பழக்கத்தைச் சுட்டிக்காட்டினால்
                    உங்களால் அவ்வாறு நடந்து காட்ட இயலுமா? என்று கேட்பது சரியான பதில் வாதமாக இருக்கமுடியாது.

                    இன்றும் அடியேன் ப்ருஹஸ்பதியாக அமர்ந்து செய்துவைக்கும் திருமணங்களில்
                    மாங்கல்யதாரணம் முடிந்தவுடன் கைகொடுக்க அநுமதிப்பதில்லை, மற்றும்
                    பாணிக்ரஹணம் முடியும்வரை, வது - வரன் இருவர் இல்ல முக்யமான பெரியவர்கள்
                    அனைவரையும் மேடையில் அமரச்செய்து, பாணிக்ரஹணத்தை ஆசீர்வாதம் செய்தபின்தான்
                    அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.

                    தயவுசெய்து, ஒரு விஷயத்தில் மேல் விபரம் தெரிவிக்கும்போது,
                    கோபித்துக்கொள்வேண்டாம் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
                    தாஸன்
                    என்.வி.எஸ்


                    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                    Encourage your friends to become member of this forum.
                    Best Wishes and Best Regards,
                    Dr.NVS

                    Comment


                    • #11
                      Re: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

                      Sri NVS Sir

                      It is not only Brahmins but also other community members pay more attention ONLY during Thali Kattum Pothu..(மாங்கல்யதாரணம்)
                      Explanations about பாணிக்ரஹணம் or 7 Steps started about 30 -35 years back only, and in those days even Sasthrigal never explained about these rituals to Guests; These have become a regular feature only in Brahmin Marriage functions; Even in Brahmin Marriages, after Mangalya Tharanam Guests go for the Lunch!!

                      Majority Community people think and believe that THALI KATTUTHAL is most important and பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் is from majority community; So his postings about the importance of Mangalayam is to be read in that way only, and not to imagine as if his post has some major mistakes!!

                      Even the Pictures in Kalyana Mandapam only depicts Mangaya Tharanam, not any other rituals.

                      If other Rituals are more important than Mangaya Tharanam, ( which is only known to Brahmins) Post another Thread.

                      Regards

                      Padmanabhan.J
                      Last edited by Padmanabhan.J; 04-12-13, 23:24.

                      Comment


                      • #12
                        Re: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

                        Sri NVS Sir

                        Before posting any additional information on any thread,one should understand the purpose of the original Thread; Adding any additional information is appreciated as long as it is not undermining the Purpose for which the original thread was posted.

                        You may think that other rituals are more important than மாங்கல்யதாரணம் and have the support of Scripture, but you should post that as a Separate Thread; only Brahmins may think other Rituals are more important, but it is not the case with majority of the community;No where in Movies, or Dramas show the importance of other Rituals.



                        The person posted that thread is also a learned man from other community; Their views are to be respected and appreciated.

                        Regards

                        Padmanabhan.J
                        Last edited by Padmanabhan.J; 04-12-13, 23:19.

                        Comment


                        • #13
                          Re: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

                          Re: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

                          மேற்படி தலைப்பில் பல அறிங்ஜர்கள் பலவிஷயங்களை தெரிவித்துள்ளார்கள். அடியேனுக்கு அவ்வளவு தெரியாது. இருந்தாலும் எனக்கு ஒர் சந்தேகம். அது ஏன் 'கெட்டி மேளம்' .கெட்டி என்பது தமிழ் சொல்தான். ஆனால் அதன் அர்த்தம் வேறல்லவோ. தமிழ் அகராதியின் படி
                          கெட்டி(பெ)
                          1. உறுதி
                          2. இறுக்கம்
                          3. சாமர்த்தியம்
                          4. கஞ்சத்தனம்
                          5. அழுத்தம்
                          6. மிக நன்று!

                          ஆங்கிலம்
                          1. firmness, hardness, strength, durability,solidity
                          2. denseness, as of a liquid
                          3. cleverness, skill, ability
                          4. close-fistedness
                          5. profundity
                          6. (interjection) well done, bravo!

                          இங்கே எதற்க்காக கெட்டி மேளம் என்று சொல்ல வேண்டும். சரியான வார்த்த 'கொட்டு மேளம்'. என்று அல்லவா இருக்கவேண்டும். இந்த கெட்டி மேளம் என்ற வார்த்தை அந்த காலத்திலிருந்தே வருகிறது என்று சொல்லிவிடலாம். கோதை நாச்சியார் 'மத்தளம் கொட்ட' என்று தான் பாடிஉள்ளாரே தவிர மத்தளம் கெட்டி என்று பாடவில்லையே. சரி மேலும் இதை பற்றி ஆறாயும்போது
                          கொட்டுமுழக்கு(பெ)

                          ஆங்கிலம் {{பெ}

                          என்று தான் இருக்கிறது. ஆகையால் மேலே விவாதித்த பண்டிதர்கள் இதை பற்றியும் விவாதித்து எது சரியான வார்த்தை எது என்று முடிவு செய்தால் அடியேனைப்போன்றவர்கள் தெரிந்துகொள்ள முடியுமே?

                          Comment


                          • #14
                            Re: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

                            ஶ்ரீ:
                            மதிப்பிற்குறிய திரு.பத்மநாபன் அவர்களுக்கு,

                            "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
                            அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" - என வள்ளுவரின் வாக்கிற்கிணங்க,

                            சொன்னவர் யார், அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதையெல்லாம் பார்த்து
                            ஒரு முடிவிற்கு வரக்கூடாது, அதன் கருத்து என்ன, உட்பொருள் என்ன என்பதை மட்டுமே பார்க்கவேண்டும் என்றே வள்ளுவர் கூறுகிறார்.

                            எனவே சுமார் 8000 அங்கத்தினர்களைக் கொண்ட இந்த பொது மன்றத்தில் ஒரு விஷயம்
                            இடம் பெற்றால், அதைப்பற்றிய தங்கள் தங்கள் கருத்தைத் தொடர்ந்து தெரிவிப்பதற்காகவே
                            பின்னூட்டம் இடுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

                            எனவே, கருத்து மாறுபாடு இருந்தால் அங்கத்தினர்கள் மற்றொரு அங்கத்தினரின் பதிவின்கீழ்
                            தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் உரிமையை யாராலும் தடுக்க இயலாது என்பதை அறியவும்.
                            நன்றி,
                            என்.வி.எஸ்


                            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                            Encourage your friends to become member of this forum.
                            Best Wishes and Best Regards,
                            Dr.NVS

                            Comment


                            • #15
                              Re: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

                              Sri NVS Sir

                              I Totally disagree with your view Sir

                              Today Brahmins form 6.75% of Tamil nadus population. You are talking about a minority population in Tamilnadu, but the Thread is for majority population of Tamilnadu

                              http://en.wikipedia.org/wiki/Tamil_Brahmin

                              Majority of the Tamilnadu’s other Communities, do not follow, many of the rituals followed by Brahmins in their marriage Rituals, and it is fact. They contain many un necessary rituals like Janavasam, Nichayathartham, and then KASI YATRA? There is no sense in conducting Kasi yatra after Nichaya Thartham, and You, yourself must have conducted these rituals in a marriage!!

                              They give more importance only to Thali Kaduthal (Mangala Tharanam) and not to other rituals; you should have seen in TV or Temples/ Mantapams, the large free marriages conducted by Political leaders.

                              Even otherwise, other communities do not pay or follow most of the rituals followed by Brahmins of Tamilnadu.

                              So what is written by பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் about Ketti Melam and Thali is as the Prathana Ritual in a Marriage is right.

                              Regards

                              Padmanabhan.J

                              Please see the below link

                              http://www.prokerala.com/news/photos...t-a-46591.html








                              Comment

                              Working...
                              X