Announcement

Collapse
No announcement yet.

நான் பாவி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நான் பாவி

    வயசான மனிதர் ஒருத்தர் சாகும் நிலையில் இருந்தார் அவர் தன்னோட குடும்ப டாக்டர், வக்கீல், பாதிரியார் மூணு பேரையும் கூப்பிட்டார். ”என்னோட மொத்த சொத்து மூணு லட்சம்

    ரூபாய், இதை யாருக்கும் தர எனக்கு இஷ்டம் இல்லை. இந்தப் பணத்தை என்னோடவே கொண்டு போகணும்-னு ஆசைப்படறேன். இதை உங்க மூணு பேரிடமும் ஆளுக்கு ஒரு லட்சமா

    தர்றேன். நான் செத்ததும் என் சவப்பெட்டியில் இந்தப் பணத்தையும் போட்டுப் புதைச்சிடுங்க”-னு குடுத்துட்டு கொஞ்சநாள்ல அவர் செத்துப் போய்ட்டார்.

    அவரது சவப்பெட்டியில் மூணு பேரும் ஆளுக்கொரு கவரைப் போட்டாங்க. கொஞ்ச நேரம் கழித்துப் பாதிரியார் அழுதுக்கிட்டே, ”நான் எழுபதாயிரம் ரூபாய்தான் போட்டேன்.
    ஒரு அநாதை குழந்தையோட கல்விக்காக அதிலிருந்து முப்பதாயிரம் ரூபாயை எடுத்துட்டேன்” னு குற்றவுணர்வோடு சொன்னார்.


    இதைக் கேட்டதும் டாக்டரும் “நான் நாற்பதாயிரம் ரூபாய்தான் போட்டேன். மருத்துவமனையில் ஒரு மெஷின் வாங்கறதுக்காக அறுபதாயிரம் ரூபாயை எடுத்துட்டேன். நான் பாவி”-னு

    ரொம்ப அழுதார். அதைக் கேட்டுட்டிருந்த வக்கீலுக்குக் கோபம் வந்தது. ”ச்சே நான் உங்களை மாதிரி ஏமாத்து ஆசாமி கிடையாது. சுளையா ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி அந்த

    சவப்பெட்டிக்குள்ள போட்டுட்டேன்னார் !!


    நன்றி திரு கேசவ பாஷ்யம் கூகுள் + பாலாஜி திருப்புல்லாணி

  • #2
    Re: நான் பாவி

    அது தான் வக்கீல் புத்தி என்ன ஒரு நேர்மை

    Comment

    Working...
    X