Announcement

Collapse
No announcement yet.

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இஞ்சியின் மருத்துவ குணங்கள்

    இஞ்சியைப்பற்றி ஆங்கிலத்தில் இத்தளத்தில் வந்திருக்கிறது. தமிழில் இஞ்சியின் மருத்துவ குணங்களை விவரிக்கும் ஒரு வலைப்பதிவை கீழே தருகிறேன்.

    படித்து பயனடைய வேண்டுகிறேன்.
    இஞ்சியை அதிகம் உபயோகியுங்கள்.நலமுடன் வாழுங்கள்.
    வரதராஜன்

    இஞ்சி
    இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?
    தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர், அதாவது சுக்கு என செல்லமாக அழைத்துப் பின்பு சுக்கு முதலியாரே! என்று கூப்பிடுவது நம் நாட்டு பழக்கமாயிற்றே!
    சுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான். சுக்கு, இஞ்சியான உலராத சுக்கு இவைகளை எல்லா மதத்தினரும், இனத்தவரும் விரும்பி மஜ”த் சுல்தான், டேவிட் பிள்ளை மரியதாஸ், போன்ற முஸ்லீம் கிருஸ்துவ நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
    சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை
    சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை
    என்பது பழமொழி அல்லவா?
    நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.
    இஞ்சி பொதுக் குணம்
    இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
    உபயோக முறைகள்
    இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜ”ரணிக்க செய்து விடுகிறது.
    இஞ்சியின் குணமேதென்றால்
    இயல்புடன் உரைக்க கேளீர்
    அஞ்சிடும் கன்னியாவும் அகன்றிடும்
    பித்ததோடம்
    நெஞ்சினில் இருமல் கோழை
    நெகிழ்ந்திடும்
    கபங்கள் தன்னை
    மிஞ்சினி வருமேவென்றும் விளம்பிடும்
    வேதநூலே (ஓலைச் சுவடி)
    சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.
    இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை! ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் புட்டி புட்டியாக எங்குதான் போகின்றனவே? முருகன் தான் அறிவார் இந்த பிளாக் மார்க்கெட்டை!
    இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.
    இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!
    இஞ்சி முறபா
    மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
    ஆஸ்துமா இருமலுக்கு
    இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)
    இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.

    .

    .

    .

  • #2
    Re: இஞ்சியின் மருத்துவ குணங்கள்

    Sri:
    This question was made through email.
    Originally posted by soundararajan50@gmai
    ஸார்
    கடைசி பாராவில் முதல் வரியில் வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 என்றும் 5ஆவது வரியில் இதில் பூ மூன்றும் மிளகு 10 ம் என்று உள்ளது
    பூ 3ஆ 5ஆ எது சரி?

    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    • #3
      Re: இஞ்சியின் மருத்துவ குணங்கள்

      Sorry Sir,
      Did not notice the discrepancy. Have sought clarification from the person who posted the write up in wordpress. Immediately on getting the reply,will post it here.
      Once again sory.
      varadarajan

      Comment

      • #4
        Re: இஞ்சியின் மருத்துவ குணங்கள்

        இஞ்சி பற்றி எழுதும்போது அதே வம்சத்தில் உள்ள மற்றொரு தண்டு கிழங்கையும் தெரிந்துகொள்வோம். அதுதான் மாங்காய் மணமுள்ள "மாங்காய் இஞ்சி" , இது மாவடு இஞ்சி, மா இஞ்சி என்றும் அழைக்கப் படுகிறது. மா இஞ்சியின் தாவர இயர் பெயர் குர்குமா அமாடா "Curcuma amada (mango ginger)" இதுவும் Zingiberaceae என்ற இஞ்சி மற்றும் மஞ்சள் வம்சத்தை சேர்ந்தது மாங்கா இஞ்சிக்கு பல மருத்துவ குணங்கள் உண்டு . .முக்கியமாக வயிறு சம்பந்தமான உபத்திரவங்களை எளிமையாக தீர்த்துவைக்கும் குணமுண்டு.சீராக உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை குறைப்பதால் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லதொரு மருந்தாகும் .
        மாங்கா இஞ்சியை பல வகையில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம் ஊறுகாய், சாலட் , சட்னி, தொக்கு, வத்தக்குழம்பு மற்றும் தயிர்பச்சடி இதில் அடங்கும்.

        இந்த இஞ்சியை சிறு வட்டங்களாக நறுக்கி சீரகத்தூள் தூவி சாலடக சாப்பிட்டு ஒரு தம்ளர் மோர் குடித்தால் பித்தம் குணமாகும் .

        மாவடு இஞ்சியும் பச்சை குரு மிளகும் சேர்த்து எலுமிச்சை சாருடன் ஊறுகாயாக சேர்த்து தயிர் சாதத்தை சாப்பிடுவது ஓர் அனுபவமே.

        ப்ரஹ்மண்யன்,
        பெங்களூரு
        Last edited by Brahmanyan; 25-11-13, 10:33.

        Comment

        • #5
          Re: இஞ்சியின் மருத்துவ குணங்கள்

          ஸார்
          கடைசி பாராவில் முதல் வரியில் வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 என்றும் 5ஆவது வரியில் இதில் பூ மூன்றும் மிளகு 10 ம் என்று உள்ளது
          பூ 3ஆ 5ஆ எது சரி?

          Read more: http://www.brahminsnet.com/forums/showthread.php/6032-இஞ்சியின்-மருத்துவ-குணங்கள்#ixzz2lf8oI2OG

          Comment

          • #6
            Re: இஞ்சியின் மருத்துவ குணங்கள்

            Originally posted by R.Varadarajan View Post
            இஞ்சியைப்பற்றி ஆங்கிலத்தில் இத்தளத்தில் வந்திருக்கிறது. தமிழில் இஞ்சியின் மருத்துவ குணங்களை விவரிக்கும் ஒரு வலைப்பதிவை கீழே தருகிறேன்.

            படித்து பயனடைய வேண்டுகிறேன்.
            இஞ்சியை அதிகம் உபயோகியுங்கள்.நலமுடன் வாழுங்கள்.
            வரதராஜன்

            இஞ்சி
            இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?
            தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர், அதாவது சுக்கு என செல்லமாக அழைத்துப் பின்பு சுக்கு முதலியாரே! என்று கூப்பிடுவது நம் நாட்டு பழக்கமாயிற்றே!
            சுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான். சுக்கு, இஞ்சியான உலராத சுக்கு இவைகளை எல்லா மதத்தினரும், இனத்தவரும் விரும்பி மஜ”த் சுல்தான், டேவிட் பிள்ளை மரியதாஸ், போன்ற முஸ்லீம் கிருஸ்துவ நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
            சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை
            சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை
            என்பது பழமொழி அல்லவா?
            நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.
            இஞ்சி பொதுக் குணம்
            இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
            உபயோக முறைகள்
            இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜ”ரணிக்க செய்து விடுகிறது.
            இஞ்சியின் குணமேதென்றால்
            இயல்புடன் உரைக்க கேளீர்
            அஞ்சிடும் கன்னியாவும் அகன்றிடும்
            பித்ததோடம்
            நெஞ்சினில் இருமல் கோழை
            நெகிழ்ந்திடும்
            கபங்கள் தன்னை
            மிஞ்சினி வருமேவென்றும் விளம்பிடும்
            வேதநூலே (ஓலைச் சுவடி)
            சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.
            இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை! ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் புட்டி புட்டியாக எங்குதான் போகின்றனவே? முருகன் தான் அறிவார் இந்த பிளாக் மார்க்கெட்டை!
            இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.
            இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!
            இஞ்சி முறபா
            மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
            ஆஸ்துமா இருமலுக்கு
            இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)
            இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.

            .

            .

            .
            No doubt, this is a very useful information. Ginger has been used for medicinal
            purposes for more than thousand years in Ayurvedic medicines. Ginger is used
            in tea preparation too. In the patti vaidyam, fresh juice of ginger was used to
            treat skin burns. It was also used for getting relief from pain. In South,
            in foods and beverages, ginger is used as a flavoring agent. Those days, if
            one had any problem of stomach upset, people used to buy ginger beer and
            drink. This product is not available these days, perhaps it is not manufactured,
            I hope.

            Balasubramanian NR

            Comment

            Working...
            X