வாகனங்கள் ஓட்டும் போது செல்போன்களில் பேசாதீர்! அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்!' - இது காவல் துறையின் எச்சரிப்பு. இப்படி எத்தனையோ வாசகங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறது
வாகனங்கள் ஓட்டும் போது செல்போன்களில் பேசாதீர்!
அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்!'
- இது காவல் துறையின் எச்சரிப்பு. இப்படி எத்தனையோ வாசகங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறது தமிழக காவல் துறை. எச்சரிக்கைகள் எத்தனை வந்தாலும் எதையும் காதில் வாங்கிக்கொள்வதில்லை இன்றைய இளைஞர் சமுதாயம் (இரு பாலரையும் சேர்த்துதான்).
பெரும்பாலானோர் காதுகளில் கட்டாயமாகிப் போனது ஹெட்போன்கள். குறிப்பாக நம் பெண்களின் காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ, ஹெட்போன் நிச்சயம் இருக்கும்.
சாலையில் நடந்து செல்வதில் ஆரம்பித்து, இரு சக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள், ரயில்கள் என தொடர்கிறது இந்த செல்போன் கலாசாரம். செல்போன்களில் பேசிக்கொண்டே அல்லது பாடல்கள் கேட்டுக்கொண்டே வாகனங்களில் பயணிப்பதை கெüரவமாகக் கருதுகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.
இதனால் நடந்து செல்லும்போது பின்னால் வரும் வாகனங்கள் ஒலி எழுப்பினாலும் அவர்கள் காதில் விழுவதில்லை. வாகனங்களில் செல்லும்போது பின்னால் வரும் வாகனங்கள், வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் ஒலி எழுப்பினாலும் கேட்பதில்லை. இதனால் வளைவுகளில் திடீரென்று வாகனங்கள் வரும்போது விபத்தில் சிக்கி அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன.
இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது போலீஸôரிடம் சிக்காமல் இருப்பதற்காக நூதன முறையை கையாள்கிறார்கள் நமது இளைஞர்கள். ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்து பேசுவது இவர்களின் இப்போதையை டெக்னிக்குகளில் ஒன்று. இது மட்டுமல்ல ப்ளூ டூத் மூலமும் பேசுகிறார்கள். இதனால் ஏற்படும் விபரீதங்கள் இவர்களுக்கு மட்டுமல்ல. எதிரே வருபவர்களுக்கும் சேர்த்துதான்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பது ஆக்கப்பூர்வமானதாக இருந்தாலும் ஏனோ நாம் அழிவுக்கே பயன்படுத்துகிறோம்.
வரும் காலத்தில் ஆட்சியராக வரவேண்டும், பொறியாளராக வரவேண்டும் என்ற கனவுகளோடு பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் காத்திருக்கிறார்கள் பெற்றோர்கள். ஆனால் இளைஞர்களோ பெற்றோர்களின் கனவுகளைப் பற்றி மட்டுமல்ல, தங்களின் உயிரைப் பற்றிக்கூட கவலைப்படுவதில்லை.
எத்தனையோ விஷயங்களில் நவீனமாகி வரும் நமது இளைஞர்கள் வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் விஷயத்தில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கலாமே. பயணத்தின் போது செல்போன்களில் பேசுவதையும், பாடல்கள் கேட்பதையும் தவிர்த்தால் நலம் பயக்குமே! கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் எதற்கு?
Source:Anathanarayan Ramaswamy