Announcement

Collapse
No announcement yet.

ஜீன்ஸ் கதையைக் கேளுங்க...

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஜீன்ஸ் கதையைக் கேளுங்க...

    ஜீன்ஸ் கதையைக் கேளுங்க...

    பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றினாலும் இன்றைய நவநாகரீக உலகிலும் தனது தனித்தன்மையைக் கொண்டிருக்கும் ஒரே ஆடை - ஜீன்ஸ்!
    இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரத்தில் கார்டுராய் எனப்படும் தடித்த, சொரசொரப்பான பருத்தி இழைகளைத் தயாரித்த தொழிற்சாலையில் ஜீன்ஸ் தோன்றியது. ஜீன் அல்லது ஜீயன் என்றுதான் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. இதனை இத்தாலிய முதலாளிகள் ஐரோப்பா முழுவதும் ஏற்றுமதி செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து, பிரான்ஸிலுள்ள நிமே நகர் நெசவாளிகள் ஜீன்ஸ் போன்ற ஒருவகை இழையை உருவாக்கிப் பார்த்துத் தோற்றுப் போயினர். அந்த முயற்சியும் தோல்வியும் ஒரு புதுவிதமான ஜீன்ஸ் துணி - டெனிம் - உருவாகக் காரணமாக அமைந்தது.
    பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஜீன்ஸ் தனது ஆதிக்கத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உருவாக்கியது. நீல வண்ண ஜீன்ஸ்களை அவர்கள் பெரிதும் விரும்பினார்கள்.

    இதில் ஜேக்கப் டேவிஸ், கால்வின் ரோஜர்ஸ், லெவி ஸ்ட்ராஸ் ஆகியோர் 1873-ஆம் ஆண்டுவாக்கில் விதவிதமான வடிவங்களில் ஜீன்รปஸ வடிவமைத்தனர்.

    ஆரம்பத்தில் குதிரைகளில் அமர்ந்து கால்நடைகளை மேய்ப்பவர்களால் (கௌபாய்) விரும்பி அணியப்பட்ட ஜீன்ஸ் ஆடைகள், பின்னர் அனைத்து இளைஞர்களையும் கவர ஆரம்பித்தன.

    அமெரிக்கா வாழ் ஸ்பானிஷ்காரர்களையும் இந்த ஆடை விட்டுவைக்கவில்லை.

    இடையில் சிறிது காலம் திரையரங்குகள், பள்ளிகள், உணவு விடுதிகளில் ஜீன்ஸ் ஆடைக்குத் தடைகள் விதிக்கப்பட்டன.
    சிறிது காலத்துக்குப் பிறகு மக்களின் ஆடையாக இதே ஜீன்ஸ் மகுடம் சூட்டிக் கொண்டது.



    Source:dinamani.com
Working...
X