Announcement

Collapse
No announcement yet.

Never give your Bank Account Details by mail

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Never give your Bank Account Details by mail

    Never give your Bank Account Details by mail


    வங்கி கணக்கு விவரங்களை இ–மெயில் மூலம் கேட்டு அவர்களின் பணத்தை அபேஸ் செய்யும் ஆசாமிகள் பற்றி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    போலி இணையதளங்கள்


    வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் அவர்களின் வங்கி கணக்கு எண், நெட்பாங்கிங் வசதி உள்ளவர்களின் பாஸ்வேர்டு எண் மற்றும் ஐ.டி. எண் ஆகியவை வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும். இந்த ரகசிய எண் வங்கி கணக்கு வைத்திருப்பவரை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் ஆன்லைனில் மோசடி செய்யும் ஆசாமிகள் வங்கி வாடிக்கையாளரின் கணக்கு எண்ணை மிகவும் சாமர்த்தியமாக பெற்று விடுகிறார்கள.

    வங்கி வசதிகளை கொண்டே மோசடி ஆசாமிகள் வங்கி வாடிக்கையாளர்களை பற்றிய விவரங்களை பெற்று விடுகிறார்கள். இதன் மூலம் வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு எண் போன்ற ரகசிய தகவல்களை கூட மோசடி ஆசாமிகள் பெற்று விடுகிறார்கள்.


    அதிகரித்து வரும் மோசடிகள்



    இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:–


    வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளின் பெயர்களில் இ–மெயில் அனுப்பப்படுகின்றன. இதற்காக வங்கிகளின் பெயர்களில் இணையதளங்களை உருவாக்கி அவற்றிலிருந்து வங்கி வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் என்ற அடிப்படையில் (நோ யுவர் பாங்க் கஸ்டமர்) உங்களை பற்றிய சமீப கால விவரங்களை வங்கி கணக்கில் சேர்க்க வேண்டும் என்று மோசடி ஆசாமிகள் தகவல்கள் அனுப்புகிறார்கள். அந்த தகவல் வங்கியிலிருந்து தான் வந்திருக்கிறது என்று நம்பி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பெயர், வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு எண். ஐ.டி.எண் ஆகியவற்றை அந்த இணையதளத்துக்கு அனுப்புவார்கள். ஆனால் அந்த இணைய தளம் போலியானது என்பது பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு தெரியாது.


    வாடிக்கையாளர் அனுப்பும் தகவல்களை கொண்டு மோசடி ஆசாமிகள் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணத்தை மோசடி ஆசாமிகள் கறந்து விடுகிறார்கள்.இத்தகைய மோசடிகள் கோவையில் சமீபகாலமாக அரங்கேறி வருவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே வங்கி கணக்கு பற்றிய விவரங்களை கேட்டு இ–மெயில் தகவல் வந்தால் அதை நம்பி தகவல்களை அனுப்பக் கூடாது. போலியாக உருவாக்கப்பட்ட வங்கி இணைய தளங்களின் மேல் கூர்ந்து பார்த்தால் அது போலியான இணையதளம் என்றும் பணம் மோசடி செய்வதற்காக உருவாக்கப்பட்ட மோசடி இணையதளம் என்று தெரியும். ஆனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மோசடி ஆசாமிகளின் வலையில் சிக்கிக்கொண்டு தங்கள் பணத்தை இழந்து விடுகிறார்கள்.


    உஷாராக இருக்க வேண்டும்


    எந்த சூழ்நிலையிலும் வாடிக்கையாளர்களின் கணக்கு எண் போன்ற விவரங்களை தேசிய மயமாக்கப்பட்ட, தனியார் வங்கிகள் கேட்பதில்லை. இது தொடர்பாக வங்கிகள் வாடிக்கையாளர்களை எச்சரித்து வருகின்றன.எனவே மோசடி ஆசாமிகளின் வலையில் வங்கி வாடிக்கையாளர்கள் விழாமல் உஷாராக இருக்க வேண்டும்.


    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


    Source:http://www.dailythanthi.com/2013-11-01-Coimbatore-Rising-crime%25253A-Bank-account-Details-E---mail-Asking-for-money-Fraud-that-deprives

  • #2
    Re: Never give your Bank Account Details by mail

    Dear Padmanabhan Sir,

    Very useful Information. When we check the bank web site in the address bar it will https which means it the real one and not the fake one. and also it will appear in green colour. No bank asks for the password from the customer. If at all any such request comes from the bank even for the other details it is safer to give such details in person going to the bank. For people like me who are abroad, the advise is that we can call the bank manager and confirm whether the request is from them and reply through phone as much as possible or through sms to the manager.

    With Best Regards

    S. Sankara Narayanan
    RADHE KRISHNA

    Comment

    Working...
    X