Announcement

Collapse
No announcement yet.

புதிய உலகம் செய்வோம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புதிய உலகம் செய்வோம்

    நான் படித்த வலைப்பூ ஒன்றிலிருந்து கீழே தந்து இருக்கிறேன்.
    திரு.சக்திவேல் பாலசுப்ரமணியன் என்பவருடைய பதிவு இது.
    எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
    வரதராஜன்


    சக்திவேல் பாலசுப்ரமணியன் - புதிய உலகம் செய்வோம்


    நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்

    01. தன்னைத்தானே வெற்றி கொள்வதுதான் சாதனைகளில் சிறந்தது. இந்த வெற்றியை அறிந்தவர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது.

    02. என் அப்பா இந்த சதுப்பு நிலத்தை வாழ்நாள் முழுவதும் வெட்டினார் அதை வயலாக்க முடியவில்லை. அவர் வழியில் நானும் தோண்டினேன் முடியவில்லை. ஆனால் நம் இருவருக்குமே தெரியும் போதிய ஆழம்வரை தோண்டாமல் ஒரு வயலை உருவாக்க முடியாது என்பது. தொடர்ந்து போராடுவோம் என் மகன் காலத்திலாவது அது சாத்தியமாகும்.

    03. பிரகாசமான எதிர்காலம் இல்லாத நிலையில் இருளும் சோர்வுமே மிதமிஞ்சி நிற்கிறது. இதை மாற்ற ஒரே வழி நாம் செய்யும் வேலையில் தொடர்ந்து இருப்பதுதான். அந்த வேலை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் தொடர்ந்து செய்து முடிப்பதுதான் சிறந்த வழி.

    04. மாணவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் அவர்கள் முன் வந்து இன்னமும் 20 நிமிடங்களில் உலகம் அழியப்போகிறது என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். எல்லோரும் தேவாலயத்தில் சென்று வழிபடுவோம் என்று கூறினார்கள். ஆனால் ஒரேயொரு சிறுவன் மட்டும் நான் தொடர்ந்து விளையாடி முடிப்பேன் என்றான். அவனே வாழ்வில் வெற்றிபெற்ற இக்னோயஸ் ஆகும்.

    05. அடுத்தவரை வெற்றி கொள்பவன் பலசாலி ஆனால் தன்னைத்தானே வெற்றி கொள்பவன் சர்வ சக்தி உள்ளவன்.

    06. இறுக்கமான சூழலை எதிர் கொண்டு எல்லாமே உங்களுக்கு எதிராக இருந்தால், இன்னும் ஒரு நிமிடம் நீடிக்க முடியாது என்று தோன்றினாலும் கூட, கைவிட்டு விடாதீர்கள். ஏனெனில் அந்த இடத்தில் அந்த நேரத்தில்தான் வாழ்வு திசை திரும்புகிறது.

    07. மிகவும் தாழ்மையான உயரம்தான் அலை திசை மாறுவதைக் காட்டுகிறது.

    08. ஞானி என்பவன் தொடர்ந்து முயற்சி செய்யும் சக்திதான். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே இருக்கும் கோடு மிக நுட்பமாக இருப்பதால் அதை எப்போது கடக்கிறோம் என்று நமக்கு தெரியாது. அது மிகவும் நுட்பமாக இருப்பதால் அதன் மேலேயே இருக்கும்போது கூட நமக்கு தெரிவதில்லை.

    09. மேலும் ஒரே நொடி முயற்சித்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற நிலையில் வெற்றியை கோட்டைவிட்டவர்கள் பலர் உண்டு. முயலாமல் இருப்பதைவிட பெரிய தோல்வி எதுவும் இல்லை. நமது நோக்கத்தின் இயல்பான பலவீனத்தை எவராலும் காப்பாற்ற முடியாது.

    10. நீங்கள் செய்ய வேண்டிய காரியத்தை செய்ய வேண்டிய காலத்தில் நீங்கள் செய்ய விரும்புகிறீர்களோ இல்லையோ அதைச் செய்யக்கூடிய திறமைதான் கல்வியின் உயர்ந்தபட்சமாகும்.

    11. நம்மிடம் இருப்பதை வைத்துக்கொண்டு நம்மால் முடிந்ததை சிறப்பாக செய்ய வேண்டும்.

    12. உனது பலவீனங்களை மறந்துவிடு, வாய்ப்புக்களை.. உனது பலங்களை.. பயன்படுத்திக் கொண்டு உனது இலட்சியத்தை நிறைவேற்று.

    13. படையில் இருந்த இராஜகுமாரனிடம் நீளமான கத்தியிருப்பதைப் பார்த்த கோழை தன்னிடம் இருக்கும் உடைந்த கத்தியை நிலத்தில் குத்திவிட்டு பயந்து ஓடிவிட்டான். தனது நீனமான கத்தி உடைந்து காயமடைந்த இராஜகுமாரன் கோழை போட்டுவிட்டு ஓடிய உடைந்த கத்தியை எடுத்து போராடி வெற்றி பெற்றான். ஆயுதமும், ஆட்பலமும் அல்ல வெற்றிக்கு அறிவும், முயற்சியுமே அவசியம்.

    14. ஒருவன் அறிந்ததை சிறப்பாக செய்யாத ஒன்றுதான் வாழ்வில் தோல்வி.

    15. சிறிதுதான் செய்ய முடியும் என்பதால் ஒன்றும் செய்யாதிருப்பது தவறு, சிறிதாக இருந்தாலும் நம்மால் செய்ய முடிந்ததை செய்தே ஆகவேண்டும்.

    16. நாம் என்னவாக இருக்கிறோம் என்பது தெய்வாதீனமாக ஏற்படுத்தப்பட்டது. மனிதனின் தவறுகூட கடவுளின் செயல்தான். உங்கள் பலவீனங்களை நேரடியாகப் பார்த்துக் கொண்டு அவற்றை வைத்து எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்வதே விவேகம்.

    17. அடுத்தவர்களால் செய்ய முடியாததை நம்மால் செய்ய முடியும்..! அதுபோல அடுத்தவரால் தர முடியாததை நம்மால் தர முடியும்..! என்று உணர வேண்டும்.

    18. நம்மை நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது சாதாரண வாழ்வை மேம்படுத்த நமது திறமைகளை வைத்து எதையாவது செய்ய வேண்டும்.

    19. எப்போதுமே இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. தோல்வி என்பது கீழே விழுவதல்ல கீழே இருப்பது.

    20. நமது சொந்த அனுபவத்தில் பாதையின் முடிவு என்று நாம் நினைப்பதெல்லாம் பாதையின் திருப்பம்தான். புதிய, மேலும் அழகான ஒரு பயணத்தின் துவக்கம்தான்.

    21. இன்று ஒரு புதிய நாள் நீங்கள் எதைத் தருகிறீர்களோ அதையே பெறுவீர்கள். நீங்கள் தவறு செய்தாலும் சோர்ந்துவிடாதீர்கள் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது.

    22. நீங்கள் கைவிட்டால் தவிர எப்போதும் நீங்கள் தோற்பதில்லை. எப்போது நீங்கள் நினைத்தாலும் புதிதாக ஆரம்பிக்கலாம்.

    23. விழுவதில் இல்லை விழும் ஒவ்வொரு முறையும் எழுவதில்தான் பெரும் சிறப்பு வெளிப்படும்.

    24. முற்றிலும் புதிதாக ஆரம்பிப்பது அவமானமில்லை அது ஒரு வாய்ப்பு.

    25. ஒருவன் சண்டையைக் கைவிட்டால் ஒழிய தோற்பதில்லை.

    26. தோற்கவே முடியாது என்பதுபோல செயற்படுங்கள். இதுதான் சோர்வையும் எரிச்சலையும் குணப்படுத்த வல்லது. இதுதான் தோல்வியில் இருந்து உங்களை வெற்றிக்கு திருப்பும் சுக்கான் ஆகும்.

    27. வேறு யாரோ ஒருவரைவிட உயர்வாக இருப்பதில் சிறப்பு எதுவும் இல்லை. உன் பழைய காலத்திற்கு சிறப்பாக இருப்பதுதான் உண்மையான சிறப்பு.

    28. எந்த மனிதனும் அவன் இருக்கும் வழியில் தொடர்ந்து இருக்கத் தேவையில்லை. அதிர்ஷ்டம், வாழ்வு, தலைவிதி போன்றவை அவன் யில்தான் உள்ளது. ஆகவே புதிய தளங்களில் செயற்பட முயல
    .

  • #2
    Re: புதிய உலகம் செய்வோம்

    Dear Varadarajan Sir,

    மிகவும் பிடித்திருந்தது. கடைபிடிப்பது சிறிது கடினம் என்றாலும் உண்மை இதுதான் என்பதை மறுப்பதற்கில்லை. நல்லவைகள் என்றும் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் பலன் மிகவும் இனிப்பாக இருக்கும் என்பதே நிஜம்.
    சங்கர நாராயணன்
    RADHE KRISHNA

    Comment

    Working...
    X