Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரார்தம், திவஸம், திதி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரார்தம், திவஸம், திதி

    சிந்திக்க - 26.

    ஸ்ரார்தம், திவஸம், திதி எல்லாமேஒன்றையே குறிக்கின்றன. அவை நாம் நம் முன்னோர்களுக்குச் செய்யும் கைங்கர்யம். அதை நன்றிக்-கடன் என்று கூடச்சொல்லலாம்.

    ஒருவருடைய தாயாரோ, தகப்ப-னாரோ இறந்து விட்டால், அவர்கள் உடலை சில மணி நேரங்களுக்குள் தகனம் செய்து விடவேண்டும். நாட்கணக்கில் அந்த பூதவுடலை வீட்-டில் வைத்திருக்கக்கூடாது. நம் சாஸ்த்திரங்களின்படியும், விஞ்ஞான ரீதியாகவும் அது தவறு. வாத்யாரை ( ப்ரோகிதரை ) க்கொண்டு சாஸ்தி-ரப்படி எல்லா மந்திரங்களையும் சொல்லி மகன் தகனம் செய்யவேண்-டும்.


    பிறகு மறுநாள் அவருடைய அஸ்தியை எடுத்துச்சென்று நதிக-ளிலோ இல்லை சமுத்திரத்திலோ கரைக்கவேண்டும். அத்துடன் முடி-ந்துவிட்டதாகக் கருதவேண்டாம். உடல்தான் எறிந்தது, ஆனால் அதனு-ள்ளே இருந்த ஆத்மா இந்தவுலகிலேயேதான் சுற்றிவரும், நாம் அதை பித்ருலோகத்திற்கு அனுப்பிவைக்கும் வரை. அதற்காகத்தான் பதின்-மூன்று நாள் காரியங்களைச்செய்யவேண்டும்.


    அதன்பிறகுதான் அந்த ஆத்மா மேலுலகம் சென்று நம்முன்னோர்கள் கூட்டத்துடன் சேரும்.. அதற்கான கர்மாக்களையும், தானங்களையும் கண்டிப்பாகச்செய்தே ஆகவேண்டும். தானங்களைமட்டும் சக்திகேற்ப செய்யலாமே தவிர வைதீக கார்யங்களை நிச்சயமாக, சிரத்தையாக செய்தே ஆகவேண்டும்.

    பிறகு ஒவ்வொரு வருடமும் அவர்கள் இறந்த திதியில் திவஸம் தவறாமல் சிரத்தையாகச் செய்யவேண்டும். ஒரு வாத்யாரைக்கூப்-பிட்டு வெற்றிலைபாக்கு தக்ஷிணையுடன் ஒரு வாழைக்காய்,வெல்லம் கொடுப்பதோ, ஒரு கோயிலில் தளிகைவிடுவதோ, இல்லை ஊனமுற்ற-வர்க்கு, வயோதிகர்களுக்கு அன்னதானம் செய்தாலோ மட்டும் போதாது. அதுமகாபாபம். ஸ்ரார்தத்தையும் செய்துவிட்டு உங்கள் மனச்சாந்தி-க்காக வேண்டுமானால் மற்றவைகளையும் செய்யலாம்.

    சிலர் கயா ஸ்ரார்தம் செய்து விட்டால் பிறகு செய்யவே வேண்டாமென்று இருந்து விடுகிறார்கள். அதுவும் மிகத்தவறு. ஒவ்வொரு அமாவைக்கும் தர்ப்பணம் செய்தே ஆகவேண்டும்.

    மேற்படிக்கர்மாக்களை செவ்வனே செய்யாமல்விட்டால் நம் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடையாது. அதனால் நமக்கு பாவங்கள்தான் வந்துசேரும். அது நம்சந்ததிகளையும் பாதிக்கும். மேலும் நாம் செய்து காட்டினால்தான் நம் சந்ததியினரும் செய்வர். நம்மை, பெற்று, வளர்த்து, ஆளாக்கின நம் பெற்றோர்களுக்கு நாம் நன்றிகடனாக இவைகளை செய்யலாமே.

    சிந்தியுங்கள்.

    courtesyoigaiadian
    Last edited by sridharv1946; 03-10-13, 22:06.
Working...
X