courtesyoigaiadian
சிந்திக்க - 27
“ கந்தையானாலும் கசக்கிக்கட்டு ”“ கூழாலானும் குளித்துக்குடி “ இவையிரண்டுமே முதுமொழிகள்.
இவற்றின் பொருள், ஒருவர் ஏழையாகயிருந்து
அவர் கட்டுவது கிழிசலாக இருந்தாலும் அவ-ற்றை துவைத்து பளிச்சென்று கட்டிக்கொள்ளவேண்டும். அதுபோல் ஒருவர் தாம் உண்பது கூழாகவே இருப்பினும் அதனைக் குளித்து விட்டே உண்ணவேண்டுமென்பதாம்.
இவையிரண்டுமே சுகாதார அடிப்படையில் நம்முன்னோர்களால் கூறப்பட்டவை. ஆனால் இன் றையத்தலைமுறையினர் இந்த இரண்டையுமே காற்றில் பறக்க விட்டுவிட்டனர். அதனால் சிறுவயதிலேயே வியாதிகளால் கஷ்டப் படுகின்றனர்.
முதலில் நம் துணிகளைத்துவைக்காமல் பயன் படு த்துவதால் அதில் படிந்திருக்கும் வியாதிகிருமிகளால் தோல் சம்பந்த ப்பட்ட வியாதிகள்வரும், மேலும் அந்தக்கிருமிகள் நம் உணவுடன் கலந்து நம் வயிற்றிர்குள் சென்று வியாதிகளை உண்டு பண்ணலாம்.
அதுபோல்தான் குளிக்காமல் உணவு உண்பதும் வியாதிகளை உண்டு பண்ணும். ஏனென்றால் காற்றில் பரவிக்கிடக்கும் கண்களுக்குத் தெரியாத வியாதி கிருமிகள் நம்உடலிலும் தலைமயிரிலும் படிந்து விடும். அவை நம் உணவுடன் உடலுக்குள் சென்று வியாதிகளை உண்டுபண்ணும். ஆனால் இன்றையத்தலைமுறையினர், ஜீன்ஸ் என்ற பெயரில் ஒரு சட்டையையும், பேண்டையும் பலநாட்கள் துவைக்காமல் அணிவதையே பேஷன் என்று நினைக்கிறார்கள்.
ஆகவே பெரியோ-ர்கள் சொல்லும்போதெல்லாம் ஏதோ ஆச்சாரத்-தைப் போதிக்கிறார்கள் , திணிக்கின்றார்கள் என்று அலக்ஷியமாக இருந்து விடுகிறார்கள் இவையெல்லாமே தவறு என என்று அவர்-கள் உணர ஆரம்பிக்கிறார்களோ அன்றுதான் வியாதிகள் குறைந்து ஆரோக்யமாக வாழ ஆரம்பிப்பார்கள்.சிந்திப்பார்களா ?