Announcement

Collapse
No announcement yet.

ஆடு புலி ஆட்டம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆடு புலி ஆட்டம்

    ஆடு புலி ஆட்டம்

    ஆடு புலி ஆட்டம் என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும்.


    Click image for larger version

Name:	Aadu.jpg
Views:	1
Size:	57.0 KB
ID:	35270

    இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இவ்வாட்டம் விளையாடப்படுகிறது. இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது. ஊர்புறங்களில் தரையில் இந்தக் கட்டங்களை சுண்ணாம்புக் கட்டி அல்லது சாக் பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்கள், குன்றி (குந்து) மணிகள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களை அதில் நகர்த்தி விளையாடப்படுகிறது. ஆடுபுலி ஆட்டத்தை வெட்டும்புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு. சங்கப்பாடல் இதனை ‘வங்கா வரிப்பாறை’ என்று குறிப்பிடுகிறது. இது சிறுபாடு விளையாட்டு என்பது தமிழர் கொள்கை.

    ஆடு/புலியை காய்களை சொடிக்கி, கட்டங்களின் சந்தியைச் சொடுக்கி காய்களை நகர்த்த வேண்டும். கோடுகள் கூடும் சந்திகள் காய்கள் வைக்குமிடம். தனக்கு அருகில் உள்ள ஆட்டை புலி வெட்டித் தாண்டும். வெட்டுப்படாதவாறு ஆடுகளை வைத்து நகர்த்தி புலியை சிறை பிடிக்க வேண்டும். ஆடுகள் எல்லாம் வெட்டப்பட்டால் புலி வென்றதாககும். புலியை நகரவிடாமல் மறித்தால் ஆடு வென்றதாகும். ஆட்டத்தின் தொடக்கத்தில் முன்று புலிகளும் களத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆடாக நீங்கள் விரும்பிய சந்திகளில் களமிறக்கலாம். ஆடு,புலி என மாறி காய்கள் நகர்த்த வேண்டும்

    ஆடுபுலி ஆட்டத்தின் ரூல்ஸ் என்று கேட்டால்,

    1)புலியும் ஆடும் நான்கு புறத்திலும் ஒரு கட்டம் தான் நகரும். ஆனால் புலி தனக்கு அருகில் ஒரு ஆடும் அதற்கு அடுத்த சந்தி காலியாகவும் இருந்தால் ஆட்டை வெட்டிவிட்டு இரண்டு கட்டம் நகரும்.

    2) ஓரங்களில் உள்ள ஆட்டை புலியால் வெட்டமுடியாது காரணம் புலி வெட்ட வேண்டுமானால் புலி-ஆடு-காலிஇடம் என்று வரிசையில் இருந்தால் மட்டுமே வெட்டமுடியும். புலி-ஆடு-ஆடு என்று இருந்தால் புலியால் வெட்டமுடியாது.

    3)புலியை மடக்க மிகக் குறைந்த பட்சம் எட்டு ஆடுகளாவது வேண்டும். அதற்கு குறைவான ஆடு களத்தில் இருந்தாலும் ஆடு தோற்றதாகவே கருதப்படும். 11 ஆடுகளுக்குக் கீழ் குறைந்தாலே வெல்வது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.


    source:Anathanarayan Ramaswamy
Working...
X