Announcement

Collapse
No announcement yet.

கண் தானம் பற்றிய தகவள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கண் தானம் பற்றிய தகவள்

    கண் தானம் பற்றிய தகவள்

    கண் தானம் பற்றிய தகவள்

    எப்படி செய்ய வேண்டும் கண் தானம்!



    Click image for larger version

Name:	Kan.jpg
Views:	1
Size:	23.3 KB
ID:	35241


    அனைத்து கண் வங்கிகளிலும் கண் தான விண்ணப்பங்கள் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து கொடுக்கனும். கண் தானத்தின் முதல் படி இது. அதுக்கும் முன்னால நீங்க செய்ய வேண்டிய முக்க்யமான விசயம் என்னவென்றால் “என் காலத்துக்கு பின்னாடி என் கண்கள் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் எனவே நான் இறந்த பிறகு அருகிலுள்ள கண் வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உங்கள் குடும்பத்தினரிடம் சொல்லி இந்த நல்ல விசயத்துக்கு தயார் படுத்த வேண்டும். இது ரொம்ப முக்கியம்.

    ஒருவர் முறைப்படி கண் தானம் அளித்திருந்தாலும் அவருடைய இறப்பிற்கு பின் அவரின் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தால் கண்களை பெற முடியாது. அதே நேரத்தில் ஒருத்தர் கண்களை தானமாக எழுதிக் கொடுக்காமல் இருந்திருந்தாலொம் கூட அந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் தானம் வழங்க முன் வந்தா தானமா பெறலாம். இது நம் நாட்டின் சட்டம்.

    எல்லா கண்களையும் தானம் கொடுக்களாமா?

    கண்களை அப்படியே எடுத்து பொருத்த மாட்டோம் கண்ணின் கருவிழியை {cornea} மட்டுமே மற்றொருவருக்கு பொருத்த முடியும். இதில் எச்.ஐ.வி., மஞ்சள் காமாலை,கேன்சர்,நாய்க்கடி போன்ற காரணங்களால் இறந்து போனவர்களின் கண்களை தானமாக பெற மாட்டோம். மற்றபடி அனைவரின் கருவிழிகளும் தானமாய் பெற தகுதியானதே.

    இறந்தவர்களின் கண்களை எடுத்தால் விகாரமாக இருக்குமா?

    இல்லை அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. வெறும் 10 நிமிசத்தில் கண்களை மறு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்வதை டாக்டர்கள் செய்து விடுவார்கள். இதில் கண்ணின் கருவிழியை மட்டும் எடுப்பது ஒரு வகை. மற்றொரு வகை மொத்த கண்ணையும் எடுப்பது. இது முடிந்தபின் கண் பகுதியில் காண்டாக்ட் லென்ஸை ஒட்டி கண்களை பழையபடி செட் பன்னிட்டு போயிருவாங்க. முகத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது. 10.நிமிடங்களில் இந்த வேலை முடிய. நீங்கள் வழக்கம் போல் செய்ய வேண்டிய ஈம கிரியைகள் செய்யலாம். கண் தானம் வழங்கும் நேரத்தில் தேவையற்ற பயம் சந்தேகம் இருந்தால் அதை ஐ பேங்க் டீமில் இருக்கும் ஐ.டொனேட் கவுன்சிலர் தீர்த்து வைப்பார்.

    உடனே தகவல் கொடுக்கனுமா?


    நிச்சயமா... ஏன்னா ஒருத்தர் இறந்த 6.மணி நேரத்திற்குள்ள எடுத்தாகனும். கார்னியா ட்ரை ஆகாம தாக்குப் பிடிக்கிற நேரம் 6 மணி நேரம்தான்.

    இறந்தவரை ஃபேன் கீழே கிட்த்தக் கூடாது. அப்படி கிட்த்தினா 4 மணி நேரத்தில் கண்கள் வறண்டு விடும். ஏசி,ஃப்ரீசர் பாக்சில் வைக்கலாம். கண்களின் மேல் சுத்தமான தண்ணீரில் நனைந்த பஞ்சினால் வைக்கலாம். காற்று உஷ்னத்தால் கருவிழிகல் காய்ந்து போகாமல் இருக்கும்.

    எடுக்கும் கருவிழிகள் எவ்வளோ நேரத்தில் பயனாளிக்கு போய்ச் சேரும்.?

    24.மணி நேரத்தில் இருந்து அதிகபட்சம் 4.நாட்களுக்குள் பயனாளிக்கு கருவிழி பொருத்தப்படும். சீனியாரிட்டி,ப்ரையாரிட்டிப்படியும் இது வழங்கப்படும்.

    நீங்கள் கன் தானத்திற்கு எழுதி வைப்பதை காட்டிலும் முக்கியமானது உங்களைச் சுற்றி நடக்கும் துயர நிகழ்வில் நீங்கள் முன் நின்று கண்களை தானமாக பெற்றுத் தருவதே...

    நன்றி
    கண் மருத்துவர்கள் – ராஜரத்தினம்,ஆன்ந்தபாபு
    குமுதம் ஸ்நேகிதி.




    NOTE: I have already pledged my eyes to be donated after my Death; How about you ?



    Source:Swarnagiri Vasan
Working...
X