Announcement

Collapse
No announcement yet.

ஹெல்மெட் இல்லாவிட்டால், பெட்ரோல் கிடையா&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஹெல்மெட் இல்லாவிட்டால், பெட்ரோல் கிடையா&

    அகமதாபாத்: ஹெல்மெட் அணியாத, இருக்கை பெல்ட் போடாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விநியோகிக்க கூடாது என பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலம், அகமதாபாத் போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதற்கு புதுமையான முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளது.

    கடந்த இரண்டு நாட்களாக, போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரிகள் குழு, பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள், நிர்வாக மற்றும் சங்க உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டத்தில், 148 பெட்ரோல் நிலையங்களைச் சேர்ந்த 133 உரிமையாளர்கள் பங்கு பெற்றனர்

    பேச்சுவார்த்தையின் இறுதியில், இருக்கை பெல்ட்களோ, ஹெல்மெட்டோ அணியாதவர்கள் ஓட்டிவரும் வாகனங்கள், ஹெல்ப்லைன் எண்கள் எழுதப்படாத ஆட்டோக்கள், ஆடம்பரமான எண் பலகைகள் கொண்ட இரு சக்கர வாகனங்கள், கண்ணாடிகளில் அடர்த்தியான பிலிம் பேப்பர் ஒட்டப்பட்ட கார்கள் போன்றவற்றிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்க வேண்டாமென்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

    மேலும், வாகனம் ஒட்டுபவர்களிடம் ஓட்டுனர் உரிமமும், மூன்றாம் நபர் காப்பீடும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


    Source:http://news.vikatan.com/article.php?module=news&aid=19735
Working...
X