எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அப்பாக்களுக்கு??
பிறந்தவுடன் கைகளில் சுமக்கையில் அழகு..
முகம் பார்த்து சிரிக்கையில் அழகு...
கை பிடித்து நடக்கையில் அழகு...
தரை கூட்ட பட்டுப்பாவாடை கட்டி தத்தி தத்தி நடக்கையில் அழகு...
ரெட்டை சடையிட்டு துள்ளி துள்ளி வருகையில் அழகு...
தவறு செய்துவிட்டு தன் சிரிப்பால் தவறை மறைக்கையில் அழகு...
தாவணி கட்டியபோது வந்த நாணத்திலும் அழகு...
கைகளை சுட்டுக்கொண்டு எனக்காக சமைக்கையில் அழகு...
என் மகளாய் இருந்து வேறொருவர் மனைவியான போதும் அழகு...
என் மகள் என்னும் குட்டி தேவதை அவளின் குட்டி தேவதையை பெற்றெடுத்தபோதும் அழகு...
அப்பாக்களுக்கும் மகள்கள் என்றுமே அழகு தான்.
#நந்தமீனாள்

Comment