கலியுகம்
ஸ்ரீபகவானின் காலசக்கரத்தின் படி தற்போது கலியுகம் நடந்து கொண்டு உள்ளது..இதன் அடையாளங்களே ஸ்ரீமத் பாகவததில் 12ம் காண்டம் 2ம் அத்தியாயம்
ஸ்ரீமத் பாகவதம் 12ம் காண்டத்தில் கலியுகத்தின் அடையாளம் பற்றி பகவான் ஸ்ரீபரமாத்மா தெளிவாக விபரிக்கின்றார்.அவைகளை இன்றைய நிலையோடு ஒப்பிட்டு பார்க்கையில் இத்தீர்க்கதரிசனத்தின் உண்மை நிலை புலப்படும்..
கலியுகமானது பின்வரும் நடவடிக்கைகளை கொண்டு இருக்கும்
1.தர்மம்,சத்தியம்,தூய்மை,பொறுமை,கருணை,ஆயுள்,தேகபலம்,ஞாபகசக்தி, ஆகியன குறைந்து கொண்டே வரும்
2. செல்வம் மட்டுமே ஒருவனின் நற்குணத்திற்கும்,பிறப்பிற்கும்,நடத்தைக்கும் அடையாளமாக கருதப்படும்
3. சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்திற்கு கீழ் நடத்தப்படும்
4. புறக்கவர்ச்சியால் (உடல் அழகு) மட்டுமே ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வார்கள்
5. வியாபரத்தில் வஞ்சகம் நிறைந்து இருக்கும்(ஊழல்)
6. பெண்மையும் ஆண்மையும் உடலுறவின் திறமையினால் மட்டும் தீர்மானிக்கப்படும்(உடலுறவில் கூடுதல் நாட்டம் உள்ளவர் அதிக ஆண்மை அல்லது பெண்மை உள்ளவர் என கணிக்கப்படும்)
7. காம இச்சையே திருமணத்தின் பிரதான நோக்கமாக இருக்கும்
8. மதம் அல்லது ஆன்மீகம் ஒருவனின் புற அடையாளங்களுக்காக தீர்மானிக்கப்படும்
9. மக்கள் ஒரு ஆன்மீக பிரிவில் இருந்து இன்னோர் மதத்திற்கு மாறிச்செல்வார்கள்
10. ஒருவன் அதிக பொருள் சம்பாதிக்கவில்லை என்றால் அவனின் தகுதி அதிகமாக விமர்சிக்கப்படும்
11. மேலும் வார்த்தை ஞாலங்களால் மட்டுமே ஒருவன் அறிஞர் மற்றும் ஞானி என்ரு அழைக்கப்படுவார்
12. பொருளற்றவன் புனிதமற்றவனாக கருதப்படுவான்
13. கபட நாடகமே சீரிய பண்பாக கருதப்படும்
14. வெறும் பேச்சளவு ஒப்பந்ததினால் மட்டுமே திருமணம் நிச்சயிக்கப்படும்
15. ஸ்நானம் செய்வது மட்டுமே பொது இடங்களில் தோற்றம் அளிக்கும் தகுதி என நினைப்பான்(நகை,ஆடை ,மற்றும் குளித்தல் மட்டுமே சபைக்கு தேவையானது என நினைப்பான்)
16. தூரத்தில் உள்ள தீர்த்தம் புண்ணிய ஸ்தலமாக ஏற்றுக்கொள்ளப்படும்
17. அழகு என்பது பெரும்பாலும் சிகை அலங்காரத்தை பொறுத்ததாக இருக்கும்(தலை முடி அலங்காரம்)
18. வயிற்றை நிரப்புவதே வாழ்வின் நோக்கமாக இருக்கும்
19. இருமாப்பு உள்ளவன் சத்தியவானாக ஏற்றுக்கொள்ளப்படுவான்
20. வெறும் நற்பெயருக்காகவே மதக்கொள்கை அனுஷ்டிக்கபடும்(பக்தி உள்லவன் நல்லவன் என்னும் கருத்து நிலவும்)
21. பூமி பூமியற்றதால் சனத்தொகையால் நிரம்பி இருக்கும்
22. ஒரு சமூகப்பிரிவில் உள்ளவன் தன்னை வலிமை மிக்கவன் என்று காட்டினால் அவனே அரசியல் அதிகாரத்தை பெறுவான்
23. சாதாரண திருடர்களை போல நடந்து கொள்ளும் இத்தலைவர்களிடம் மக்களையும்,மனைவிகளையும் ,உடமைகளையும் இழந்து பிரஜைகள் மலைகளுக்கும் காடுகளுக்கும் ஓடிவிடுவர்
24. பஞ்சம் அதிக வரி என்பவற்றால் பாதிப்புற்ற மக்கள் மாமிசம் மற்றும் இலை,தேன்,வேர்,மரம் என்பவற்றை தின்று வறட்சியாலும் இறப்பர்
25. பசி,மழை ,காற்று,புயல்,வெப்பம்,என்பவற்றாலும் நோய்,பசி,சண்டை சச்சரவுகள் என்பவற்றாலும் மக்கள் சித்திரவதைப்படுவர்
26. சமயக்கோட்பாடுகள் அழியும்
27. ஒருவன் பூணூல் அணிந்து இருப்பதால் மட்டுமே பிராமணர் என்று சொல்லப்படுவார்கள்
28. கலியுக முடிவில் கெடும்.மனித சமூகம் வேத மார்க்கத்தை முழுவதுமாக மறப்பர்
பல இன்னல்கள்,திருட்டு பொய் ,களவு.என்பவை அதிகரிக்கும்
மிருகங்கள் அளவில் சிறுக்கும்,மாடுகள் எல்லாம் ஆடுகளை போல சிறியதாய் தோற்றம் பெறும்,மூலிகைகள் அழிந்து விடும் .
29. இத்தைகைய காலத்தில் பரமபுருசன் கல்கி பகவான் பூமியில் அவதர்ப்பார்.அவர் தூய ஆன்மீக ஞானத்துடன் செயற்பட்டு பூமியில் நித்திய தர்மத்தை நிலை நாடுவார்\
30. பரம புருசரான விஸ்ணு பகவான் கர்ம பலன்களில் இருந்து விடுவிப்பதற்காகவும் தர்மத்தை காக்கவும் பக்தர்களை காக்கவும் பிறவி எடுப்பார்
31. இவர் "சம்பல" என்னும் கிராமத்தில் பிறப்பார்
32. இவர் விஸ்னியசரின் என்னும் பிராமணர் வீட்டில் தோன்றுவார்
33. அவர் தனது "தேவதத்தம்" என்னும் குதிரையில் கடுமையான வேகத்தில் பூமி முழுவதும் பயணிப்பார்.தனது எட்டு விஷேஷ குணங்களையும் வெளிப்படுத்தியபடி அரசர்களாய் உடையணிந்து அக்கிரமம் செய்யும் ஆட்சியாளர்களையும் அக்கிரமம் செய்வோரையும் கொன்று குவிப்பார்
34. வேஷ்தாரிகளை கொன்ற பின்பு சந்தனப்பசை நறுமணம் உலகெங்கும் பரவும்.மக்களின் மனம் தெய்வீகத்தன்மை நிறைந்ததாக மாறும்
35. கல்கி பகவான் பூமியில் தோன்றும் போது சத்ய யுகம் தோன்றும்
36. பெண்களின் வயிற்றில் சாத்வீகமான குணஙளுடன் கரு உண்டாகும்
அதை பின்பு மீண்டும் சத்ய யுகம் ஆரம்பமாகி கலியுகத்தின் அடையாளம் மறைந்து தெய்வீக சூழலும் இயல்பும் தலை தூக்கும்.
Source;Narada Vijayam