சூரியசக்தியை முழுமையாகப் பயன்படுத்தி வருகிற சிற்றருவிப்பட்டி
விடாது கருப்பு’ என்பது மின்சாரத்துக்குத்தான் சரியாகப் பொருந்துகிறது. மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்த மின்வெட்டு, மீண்டும் தலைதூக்கி இருப்பதால் நொந்து கிடக்கின்றனர், தமிழக மக்கள். இத்தகைய இருட்டுக்கு நடுவேயும், ஒரே ஒரு கிராமம் மட்டும் எப்போதும் போல் பளீரிட்டுக் கொண்டிருக்கிறது தமிழகத்தில் என்றால்... ஆச்சர்யம்தானே!
மதுரைமேலூர் சாலையில், அழகர்கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள சிற்றருவிப்பட்டிதான் ...அந்த ஆச்சர்ய கிராமம். இங்குள்ள குழந்தைகள், 12 மைல் தூரம் நடந்துதான் தினமும் பள்ளிக்கூடத்துக்குச் செல்கிறார்கள். அந்தளவுக்குப் பின்தங்கிய கிராமங்களில் ஒன்று இது. ஓராண்டுக்கு முன்பு வரை தீக்குச்சி மற்றும் தீபம் இவற்றை வைத்து, வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த, இக்கிராம மக்களுக்கு முதன்முறையாக மின்சாரத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது, 'செல்கோ’ என்கிற அமைப்பு. நபார்டு வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் உதவியுடன், நிறைவேற்றப்பட்ட இத்திட்டத்தின் மூலம், சூரிய ஒளியில் இயங்கும் மின்விசிறி, தெரு விளக்கு... என சூரியசக்தியை முழுமையாகப் பயன்படுத்தி வருகிறார்கள், மக்கள்.
Source:Balaji Thirupullani