Announcement

Collapse
No announcement yet.

Why do Women wear Kolusu ?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Why do Women wear Kolusu ?

    Why do Women wear Kolusu ?



    Click image for larger version

Name:	Kolusu.jpg
Views:	1
Size:	26.9 KB
ID:	35141

    பெண்கள் காலில் கொலுசு போட வேண்டும் என்று பெரியவர்கள் எழுதாத சட்டமாக வலியுறுத்தி ஏன் கூறினார்கள், தெரியுமா?

    கொலுசை காலில் அணிந்து நடக்கும் போது அந்த சலங்கை ஒலி கண் திருஷ்டியை அண்டவிடாது. கொலுசின் ஒலியைக் கேட்ட கஜலட்சுமி ஆனந்தம் அடைந்து வாழ்க்கையை ஆனந்தமாக வைத்திருப்பாளாம்.

    கொலுசை வெள்ளியில்தான் அணிய வேண்டும். தங்கத்தில் கொலுசை அணியவேக் கூடாது.

    ஒரு கேள்வி எழலாம்…
    “தங்கத்திலும் வெள்ளிலும் ஸ்ரீ மகாலஷ்மி இருப்பதாகதானே சாஸ்திரம் சொல்கிறது. அப்படி என்றால் வெள்ளி கொலுசிலும் ஸ்ரீமகாலஷ்மி இருக்கிறாரே… அதுவும் தவறுதானே?“ என்று சிலருக்கு கேள்வி எழும்.
    தங்கத்தின் நிறம் மஞ்சள். ஜாதகத்தில் குரு பிராப்தம் இருந்தால்தான் திருமணமே நடக்கும்.

    அதனால்தான் தங்கத்திலும், மஞ்சளிலும் மாங்கல்யத்தை அணிகிறார்கள். மஞ்சள் குரு பகவானுக்குப் பிடித்த நிறமும் கூட. அப்படிப்பட்ட தங்கத்தை காலில் அணிவதுதான் தவறு.

    வெள்ளியின் நிறம் வெள்ளை. அது சுக்கிரனின் ஆதிக்கம். சுக்கிரன் அசுரகிரகம். குரு பகவான் தேவர்களுக்கெல்லாம் குரு. சுக்கிரன் அசுரர்களுக்கெல்லாம் குரு. அதனால் சுக்கிரனுக்குரிய வெள்ளியில் செய்த கொலுசை காலில் அணிந்தால் முகம் பொலிவு பெறும். உடல் வலிமை பெறும்.

    மேலே சொன்னதெல்லாம் பெரியவர்கள் சொல்லக் கேட்டது...

    ஆனால் நிஜத்தில் நாம் மூட் அவுட்டாக இருக்கும் போது பெண்கள் நடந்து வரும் கொலுசு சத்தத்தைக் கேட்கும் போது மனம் அப்படியே லேசாகி விடுவது தான் ஆச்சர்யமான விஷயம்..

    அதே போல பெண்கள் கொலுசுடன் நடப்பதைப் பார்க்கும் போது நம்மை அறியாமலேயே நம் மனம் உற்சாகத்தில் திளைப்பதையும் கவனிக்கலாம்...



    Source:ரவிதங்கதுரை
Working...
X