Announcement

Collapse
No announcement yet.

ஓணம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஓணம்

    கேரளாவின் மிக பழமையும், பாரம்பரியமும் மிக்க, மிக பெரிய மற்றும் முக்கிய திருவிழாவாக ஓணம் கொண்டாடப்படுகிறது.இப்பண்டிகை அனைத்து சமூகத்தினராலும் அறுவடை திருநாளாக மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் கொண்டாடப்படுகிறது. புராணக்கதைகளில் கூறுவது போல் ஓணம் திருநாள் அன்று அரசர் மஹாபலியின் ஆன்மாவை வரவேற்க்கும் பொருட்டு இத்திருவிழா கொண்டாடப்படுகிறது என்பது ஐதீகம்.

    அசுர ராஜாவான மஹாபலி கேரளாவை ஆண்டபோது, கேரள நாடு எல்லா வழமும் பெற்று நாடு சுபிட்சமாகவும் மக்கள் சந்தோஷமாக எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்தார்கள். ராஜா மஹாபலி சிறப்பாக ஆட்சி புரிந்தாலும், அவர் அகங்காரம்மிக்கவராக இருந்தார். இந்த பலவீனமே அவ்ர் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ஸ்ரீமன் நாராயணன் பயன்படுத்திக்கொண்டார் என்கிறது புராணம்

    மலையாள மாதத்தின் முதல் மாதமான சிங்கம் மாதத்தின் தொடக்கத்தில் ஓணம் கொண்டாடப்படுகிறது.இத்திருவிழா நான்கு முதல் பத்து நாட்களுக்கு கொண்டாடபடுகிறது.ஓணத்தின் முதல் நாள் அதம் என்றும் மற்றும் பத்தாம் நாள் திருவோணம் ஆகும்.திருவோணத்தன்று புத்தாடை உடுத்தி, வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்து, கோவிலுக்குச்சென்று வழிபாடுகள் செய்தும், ஒருவருக்கு ஒருவர் வாழ்துக்கள் பரிமாறிக்கொள்வர்.

    பூக்கலம்(பூக்கோலம்) வண்ண வண்ண மலர்களால் வாசலில் பூக்கோலமிடுவதும்,ஓணசாத்யா எனும் மதிய விருந்து தயாரிப்பதும்,வலம்கலி அல்லது பாம்பு படகு போட்டியும்,அலங்கார யானைகளின் அணிவரிசையும் ஓணத்தின் சிறப்புகளாகும்

    சர்வதேச அளவில் ஓணம் பண்டிகை ஊக்குவிக்கப்படுகிறது. இந்திய அரசு இந்த வண்ணமயமான இத்திருவிழாவை ஊககுவிக்கும் வகையில் ஓணத்தின் போது “சுற்றுலா வாரம்”என்று அறிவித்துள்ளது. ஓணத்தின் போது ஆயிரகணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் இவ்விழாவினை காண கூடுவர்.



    Click image for larger version

Name:	Thirupunitra.jpg
Views:	1
Size:	83.0 KB
ID:	35132

    Thripunithura Athachamayam is a colorful festival that takes place on Atham (10 days before Onam) in Thripunithura, near Ernakulam in Kochi.

    Picture Source:http://goindia.about.com/od/festivalpictures/ig/Kerala-Onam-Pictures/Thripunithura-Athachamayam.htm


    Source: Nagarathar
Working...
X