Announcement

Collapse
No announcement yet.

Vidhi valiyathu !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vidhi valiyathu !

    அவரவர் விதி வழி - ஒரு குட்டி கதை


    ஒரு அரசன் தன பெண்ணுக்கு ஸ்வயம்வரம் நடத்திக்கொண்டு இருந்தார். அதில் அவளுக்கென ஒருவன் அமைவான் என உறுதியுடன் பின் நிகழவிருக்கும் திருமண ஏற்பாடுகளில் தன மக்களை ஈடுபடுத்தினான். அனைவரும் முடுக்கிவிடப்படவர் போல் இதையே காரியமாக கொண்டிருந்தனர்.


    கல்யாண காலம் நெருங்கும் வேளையில், தாயார், எம்பெருமானிடம் "இவள் என்னை போல் அழகாக உள்ளாள், ஆக உம்மை போன்றதோர் மணாளனை இவளுக்கு அளிக்க வேண்டும்" என, எம்பெருமான் தெரு முனையில் இருந்த ஒரு அஷ்டகோணலான பிச்சைகாரனை காண்பித்து அவள் விதிப்படி இவனே அவள் கணவனாக வேண்டும், அதை நான் மாற்ற இயலாது" என கூறி விட்டான்.


    இந்நிலையில் பெண்ணுக்கு அண்டை நாட்டு இளவரசனுடன் மணம் நிச்சயம் செய்யப்பட்டு மண நாளும் நெருங்கியது. எம்பெருமான் நிலை மாறாதது கண்டு பிராட்டி முசிந்து கொண்டு பூலோகத்தில் எழுந்தருளி கருடனை வரவிட்டு இந்த பிச்சைக்காரனை 7 கடல் 7 மலை தாண்டி எங்கேனும் விட்டு விடும் படி ஆணை பிறப்பித்தல். அவரும் அவ்வாறே செய்தார். தாயார் "இனி இவர்கள் திருமணத்தில் அந்த பிச்சைக்காரனால் எந்த தொந்தரவும் இல்லை" என நிம்மதியுற்றாள்.


    இதற்கிடையே, அவனை அங்கே கருடன் இறக்கி விட பசியென அழுதான். கருடனும் "பாவம் இவன், அங்கிருந்தால் இன்று பெரிய விருந்து கிடைத்து இருக்கும், இல்லை, இலைகளை பொருக்கியேனும் இவன் பசியாரியிருப்பான். இவனுக்கு உணவளிக்க வேண்டும்" என எண்ணி மீண்டும் அரசன் மாளிகைக்கு வந்தான். இந்நிலையில், அரசனின் குல வழக்கப்படி பெண் கூடைக்குள் இருந்து மணாலனை பார்க்க வேண்டி இருந்ததால் அவள் ஒரு கூடைக்குள் வைக்கபட்டாள். கருடனும் அங்கிருந்த ஒரு லட்டு கூடையை கொண்டு இவன் முன் வைத்தான்.


    அங்கு சென்று கூடையை திறக்க, சரியாக அப்போது அந்த 'மணாளனை பார்க்கும்' சடங்கு நடக்க வேண்டிய நேரம் வர, இவள் அந்த பிச்சைக்காரனை கண்டாள். இறைவன் இட்ட வாழ்க்கை இதுவென அவனையே உவந்து மணந்தாள்.


    எம்பெருமான் புன்னகைத்தான்.


    As usual, தாயாருக்கு "ணங்கு" நு வெக்க காபி டம்ளர் இல்லை


    courtesy :sadagopa
    ramanujam raghavan
    Last edited by sridharv1946; 14-09-13, 16:16.

  • #2
    Re: Vidhi valiyathu !

    As usual, தாயாருக்கு "ணங்கு" நு வெக்க காபி டம்ளர் இல்லை. This is the highlight of the post

    Comment

    Working...
    X