Announcement

Collapse
No announcement yet.

Sinthikka - 25

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sinthikka - 25

    சிந்திக்க - 25.
    “ சுகம், துக்கம்“ இவை இரண்டும் இரட்டை. லாபம், நஷ்டம்; வரவு , செலவுஎன்பன போல. இவற்றில் முதலில் இருப்பவைகளை சம்பாதிக்க, தேட நாம் மிகவும் அலையவேண்டும். உதரணமாக சுகமாகவாழ சொந்தவீடு தேவையென்றால், நாம் நன்றாக சம்பாதிக்க வேண்டும், இல்லை கடன் வாங்கஅலையவேண்டும்.

    அதுவே இரண்டாவதாக உள்ளது தானே நம்மைத்தேடிவரும். உதாரணமாக, துக்கம் நம்வாழ்வில் நேரவேண்டும் என எவரும் விரும்பமாட்டார்கள். ஆனால் அது அழையா விருந்தாளியாக நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்ளும்.

    அதாவது நாம் தெரு வில் போய்க்கொண்டு இருக்கும்போது ஒரு காரோ, சைக்கிளோ நம் மீது மோதுகிறது என்றால் அதைநாமாகவா தேடிப்போகிறோம். துன்பம் வந் தால் கடவுளின் படத்திற்கு முன்பாக, இல்லை கோயிலுக்குச் சென்று கடவுளே ஏன் எனக்கு இந்த தண்டனை என்று கோபிக்கின்றோம் அல்லது வேண்டுகின்றோம். ஏதோ கடவுள் நம்மை பழிவாங்கிவிட்டது போல்.

    அதேசமயம் நம் வாழ்வில் சுகம் ஏற்பட்டால், அது நம் முயற்சியால், நம் உழைப்பிற்குக்கிடைத்த பரிசாக எண்ணிமகிழ்கிறோம். கடவுளுக்கு நன்றி கூட சொல்வதில்லை. காரணம் நமக்குள் இருக்கும் அகம்பாவம்.

    ஆனால் சுகமோ துக்கமோ எதுவுமே கடவுளால் வழங்கப்படுபவையல்ல. அதற்கும் அவருக்கும் எந்தசம்பந்தமுமில்லை. அவை நாம் பூர்வ ஜென்மத்தில், ஏன் இந்த ஜென்மத்தில் கூட செய்யும் பாவ, புண்ணியங் களுக்கு ஏற்பவழங்கப்படுபவை.

    அப்படியென்றால் நாம் ஏன் கடவுளை வணங்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா ? அதற்கு இந்தக் கதையைப்படியுங்கள். பலஆண்டுகள் கழித்து, தன் அத்தை குந்தியைப் பார்க்கவந்த கண்ணன், ” அத்தை உனக்கு எதுவேண்டுமானாலும்கேள் தருகிறேன் “ என்றான். கண்ணன் வேறுயாருமில்லை அவனே பரம புருஷன் என்று அறிந்த குந்தி, “ புருஷோத்தமா, எனக்கு எப்போதும் துன்பத்தையே அளித்துக்கொண்டிரு. அப்போதுதான் உன்நினைவே எனக்கு வருகிறது. உன்னைத்தொழ கை எழும்புகிறது “ என்றாள்.

    காரணம் அந்த பரந்தாமன் நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை. நம்மை புண்யம் செய்யத்தூண்டுவதும், பாவம் செய்யவைப்பதும் அவன் செயலே. ஆகவே அவனை எப்போதும் நினைக்கும் குணத்தை நமக்கு அளிக்க அவனையே சரணடையவேண்டும் சிந்திப்பீர்களா ?
    courtesy:Poigaiadiyan
    Last edited by sridharv1946; 12-09-13, 09:39.
Working...
X