Announcement

Collapse
No announcement yet.

டாக்டர். இராசா சர் முத்தையா செட்டியார்:

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • டாக்டர். இராசா சர் முத்தையா செட்டியார்:

    டாக்டர். இராசா சர் முத்தையா செட்டியார்:


    Click image for larger version

Name:	Muthya.jpg
Views:	1
Size:	50.1 KB
ID:	35064

    இவர் அண்ணாமலை செட்டியாரின் முதல் புதல்வராவர். 1905-இல் பிறந்த இவர் மிகச் சிறந்த வணிகர்,கல்வியாளர்,கொடை வள்ளல். தவிர, அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர். சென்னை பாரிமுனையில் உள்ள இராசா அண்ணாமலை மன்றம் இவரால் கட்டப்பட்டதாகும். ஒன்பது பாடப்பிரிவுகளுடன் செயல்பட்டு வந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை 48 பாடப்பிரிவுகளைக் கொண்ட மாபெரும் பல்கலைக்கழகமாக உருவாக்கினார். மேலும் தனது சொந்த ஊரான கானாடுகாத்தானில் அண்ணாமலைத் தொழில்நுட்பக் கல்லூரி என்னும் கல்லூரியையும் நிறுவினார்.

    சென்னை மாகாணத்தின் முதல் மேயராக 1934இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசு 1973-ஆம் ஆண்டு இவருக்குப் பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. 1982-இல் நியூயார்க் பல்கலைக்கழகம் இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. தமிழிசை மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் கொண்ட ஈடுபாடு காரணமாக இவருக்குத் தமிழக அரசு தமிழிசைக் காவலர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.


    source: nagarathar
Working...
X