இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் புதுக்கோட்டை ஒரு தனி நாடாகவே இருந்தது. தொண்டைமான் மன்னர்கள் ஆட்சியில் தனி சமஸ்தானமாய் விளங்கிய புதுக்கோட்டைக்கு என தனி நாணயம் வெளியிடப்பட்டது.
இந்திய நாணயத்தை எப்படி "ரூபாய்" என்கிறோமோ அதுபோல் அந்த நாணயம் "அம்மன் காசு" என்று அழைக்கப்பட்டது.
1738 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்ட இக்காசுகள் தொடக்கத்தில் உள்ளூர் கைவினைஞர்களால் கையால் வெட்டித் தயாரிக்கப்பட்டு பின்னர் இயந்திரம் கொண்டு தயார் செய்யப்பட்டது.
சுமார் 1.2 கிராம் எடை கொண்ட இந்த செப்புக் காசுகளின் முக்கிய பக்கத்தில், தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவமும், அதன் பின்புறம் தெலுங்கு மொழியில் "விஜயா (வெற்றி என்று பொருள்)" என்றும் பொறிக்கப்பட்டிருக்கும்.
புதுக்கோட்டை அம்மன் காசு வழக்கப் பேச்சில் "புதுக்கோட்டை அம்மஞ்சல்லி" என்று அழைக்கப்பட்டது.
Source:nagarathar

Comment