Announcement

Collapse
No announcement yet.

மற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்!

    Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik

    மற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்!


    சூரிய ஒளி, பேட்டரி, பெட்ரோல் என, மூன்று எரிசக்திகளையும் ஒரே காரில் பயன்படுத்தும் விதமாக தயாரித்த, கல்லூரி மாணவன் தினேஷ் குமார்: இவர் கூறுகிறார்:

    நான், எம்.இ., "அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்' படிக்கிறேன். பெட்ரோல் விலை உயர்வு, மின்சார தட்டுப்பாடு, 24 மணி நேரமும் சூரிய ஒளியை பெற முடியாது என, ஒவ்வொரு எரிசக்திக்கும், ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கிறது. இக்குறைபாட்டை நீக்க முடியாது. ஆனால், மூன்று எரிசக்தியையும், தேவைக்கு ஏற்ப ஒரு சேர பயன்படுத்தினால், குறைந்த செலவில் அதிக தூரம் செல்ல முடியும். இந்த எண்ணத்தில் தான், பி.இ., படிக்கும் போது, பைக் தயாரித்தேன்.

    இந்த ஆர்வம், கார் செய்ய வேண்டும் என்ற ஆசையை தூண்டியது. இதனால், மூன்று எரிசக்தியையும் பயன்படுத்தும் விதமான காரை தயாரித்து, அதற்கான காப்புரிமையை பெற விண்ணப்பித்திருக்கிறேன். பகல் நேரங்களில் சூரிய ஒளி நன்கு கிடைப்பதால், காரின் மேல் பகுதியில், "சோலார் பேனல்'கள் பொருத்தினேன். அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை, "பேட்டரி'யில் சேமித்து காரை இயக்கலாம்.

    இவ்வகை மின்சாரத்தை, எவ்வித செலவும் இன்றி, இலவசமாக தயாரிக்கலாம். சூரிய ஒளி கிடைக்காத போது, மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தை பயன்படுத்தலாம். காரில் உள்ள, 10 பேட்டரியை, 2 யூனிட் மின்சாரத்தால் நிரப்பினால், 200 கி.மீ., வரை பயணம் செய்யலாம். இரண்டுமே கிடைக்காத நேரத்தில், பெட்ரோல் மூலம் மின்சாரத்தை உருவாக்கி, 1 லிட்டருக்கு, 50 கி.மீ., தூரம் செல்லும் வகையில், மின்சாரத்தில் இயங்கும் இன்ஜினை பொருத்தி, காரை வடிவமைத்திருக்கிறேன்.

    மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில், 10 பேர் செல்லும் இக்காரை தயாரிக்க, வீட்டிலேயே, "ஒர்க் ஷாப்' அமைத்து, இரண்டு ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். காரில் ஏதாவது பிரச்னை அல்லது பழுது ஏற்பட்டால், "சென்சார்' மூலம் எச்சரிக்கை ஒலி எழுப்பும். தொடர்ந்து ஓட்டினால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு கார் தானாகவே, "ஆப்' ஆகிவிடும். தீ விபத்து ஏற்படுவதையும் முற்றிலும் தவிர்த்து, பாதுகாப்பாக தயாரித்து உள்ளேன்.

    இத்தகைய மேதைகட்கு நம் நாட்டில் இடமில்லை.


    Source:harikrishnamurthy
Working...
X