Announcement

Collapse
No announcement yet.

வெறும் காலில் நடப்பது நல்லதா??

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வெறும் காலில் நடப்பது நல்லதா??

    சாப்டறப்ப கூட கால்ல செருப்பு போடறத அந்தஸ்து பாக்ற தலைமுறைல வாழறோம் நாம்.....
    பாதரட்சைகள் இருந்த காலத்திலும் வெறும் காலில் நடப்பவர்களை நன்மையுள்ளவர்களின் கணத்தில் உட்படுத்தியிருந்தனர்.
    ஒருவர் அணிந்திருக்கும் செருப்பின் விலையிலிருந்து அவருடைய சமுக நிலையை மதிப்பது இன்றைய சமூகம். உடற்பயிற்சிக்காக நடக்றப்பகூட டைட் ஷீ போட்டுட்டு நடக்றது.. வெறும் காலில் நடந்தால் பார்ப்பவர்கள் தங்களை எளியவர்கள் என மதிப்பிடுவார்களே என்ற தாழ்வு மனப்பான்மையே பலரையும் கவலைக்குள்ளாக்குகின்றது. வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் இன்றியமையாதது என்று நவீன மருத்துவ இயல்அண்மையில் வெளிப்படுத்தியுள்ளது.

    கரடுமுரடான தரையில் நடக்கும் போது பாதத்தின் கீழ் பாகம் நேரடியாக அழுத்தம் ஏற்கின்றது. இது உடற்செயல்பாட்டை ஊக்குவிக்கும் என்பதும் பாதத்துக்கு அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை அமைந்திருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள், மூளை இருதயம், விறுநீரகம் முதலிய எல்லா உறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. இதனால் ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் அழுடத்தம், அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உறுப்பின் செயலாற்லை துரிதப்படுத்தும். பாதத்துக்கடியில் ஊசிகள் குத்திச் செய்யும் அக்யுப்பங்சர் என்னும் சீன சிகிட்சையின் மறு உருவமே செருப்பில்லாமல் வெறும் காலில் நடப்பதில் இயற்கை நமக்களிக்கின்றது.
    (அதிலும் செம்மண்ல வெறும் காலில் நடந்தா ரொம்ப நல்லது நானே கண்டுபிடிச்சது நோ கால் ஆணி நோ பித்த வெடிப்பு)
    (பிளைட்லல்லாம் செருப்பை கொண்டு வந்து இறக்றவங்களுக்கு இது பற்றி ரகசியம்லாம் சொல்லாதிங்க ஒகே..
    - சுபா வள்ளி.
Working...
X