Announcement

Collapse
No announcement yet.

ஆடி மாதத்தின் சிறப்புகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆடி மாதத்தின் சிறப்புகள்

    ஆடி

    தமிழ் நாள்காட்டியின்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆடி ஆகும். சூரியன் கடக ராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 நாள், 28நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே இம்மாதமாகும்.

    முற்காலத்தில் தமிழர் ஆடிப்பிறப்பை சிறப்பாகக் கொண்டாடினார்கள். தற்காலத்தில் இவ்வழக்கம் சுருங்கி விட்டது. ஆடி மாதத்திற்கு பல்வேறு சிறப்பு உள்ளன.

    ஆடி மாதத்தில் தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை தொடங்குகிறது. இது மழைக்காலத்தின் தொடக்கத்தை குறிக்கும்.

    இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும்.காற்றும் மழையும் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமையும், செவ்வாய்க் கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பது பழமொழி.அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களைகட்டும்.ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்தது என்றாலும், குறிப்பாக மாரியம்மன் வழிபாடு இன்னும் சிறப்பாகும்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

    ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நதிகளில் நீர்ப்பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரையில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது.

    புதுமண தம்பதிகள் நதிக்கரையில் நிலாச்சோறு சாப்பிடுவார்கள். அன்றைய தினம் தாலி, மாற்றிப் புதுத்தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

    ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும்.விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில் தான் தொடங்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால் தான் உருவாயிற்று.

    ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கமே ஏற்படுகிறது. ஆடி தொடங்கினால் போதும் பண்டிகைகளின் பட்டியலும் தொடங்கி விடும். பூமாதேவி அவதரித்த ஆனந்த மாதமும் இந்த ஆடி மாதம் தான். அதாவது ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள் தான் ஆடிப்பூரமாகக் கொண்டாடப்படுகிறது.

    ஆடி மாதத்தில் கிராமத்தில் காவல் தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறும் தபசு விழா ஆடி மாதத்தின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கும் விழாவாகும்.


    Source:http://www.maalaimalar.com/2012/07/15131809/the-special-of-aadi-month.html
Working...
X