ஒரு கோத்ரத்தில் பிறந்த அனை-வருக்குமே ரத்த சம்மந்தமுண்டு. அவர்கள் சகோதர, சகோதரிகளாகிறார்கள். எனவேதான் ஒரே கோத்ரத்தைச்சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், பிள்ளைக்கும் திருமணம் செய்வதில்லை.மேலும் ஒரே கோத்ரத்தைச்சேர்ந்தவர்கள் திருமணம் புரிந்துகொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊனத்துடன் பிறக்க வாய்ப்புண்டு. ஆனால் இன்று அநேகமாகக்காதல் திருமணங்களே நடக்கின்றன. ஒருவரை காதலிக்கும்முன்பு என்ன கோத்ரம் என்று கேட்டா காதலிக்க முடியும். ஆகவே பெண்வீட்டார், பெண்ணின் தாய் மாமனைக் கொண்டு கன்னிகாதானம் செய்யச்சொல்லி நடத்துகின்றனர். இது மிக தவறு. ஏனென்றால், சாஸ்த்ரபூர்வ-மாக அக்னி வளர்த்து, மந்திரம் ஜபித்து ஒரு குழந்தையை ஸ்வீகாரம் எடுத்துக்-கொண்டால்தான் கோத்ரம் மாறும். குறைந்த பக்ஷம், திருமணத்திற்கு முதல் நாளோ, அன்று காலையோ நடக்கும் விரதத்தையாவது பெண்ணின் தாய்மாம-னைக்கொண்டு செய்வித்து, பிறகு அவரை கன்னிகாதானம் செய்து கொடுக்கச் சொல்லலாமே!
சிந்திப்பீர்களா.
courtesy
oigaiadian
சிந்திப்பீர்களா.
courtesy
