Announcement

Collapse
No announcement yet.

மன்னிப்போம்! மறப்போம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மன்னிப்போம்! மறப்போம்

    பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பிறருக்கு தண்டனை தரும் அதிகாரம் எந்த மனிதனுக்கும் கிடையாது.
    * பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம் இருந்தால், உங்களை நல்லவர் என நீங்களே முடிவு கட்டிக்கொள்ளலாம். மன்னிப்பது மனிதகுணம். மறப்பது தெய்வீக குணம்.
    * சொல் வலிமை மட்டுமின்றி, ஆள்பலம், பொருள்பலம் போன்ற வலிமைகளைக் கொண்டிருப்பவனே வல்லவன்.
    * சுயநலம் கருதி தனக்கு சாதகமான விஷயத்தை அங்கீகரிப்பது கூடாது. இயற்கையின் வழியில் நியாய தர்மத்தைப் பின்பற்றுவதே நல்லது.
    * பெரும்பாலான மனிதர்கள் தன் குற்றத்தை சுண்டைக்காயாகவும், பிறர் குற்றத்தை பூசணி காயாகவும் எண்ணுகிறார்கள்.
    * செயல் வீரனையே உலகம் போற்றுகிறது. காரியம் செய்யாதவனை யாரும் விரும்புவதில்லை. வேலையின்றி சோம்பித் திரிபவனைக் காண்பது கூட தீமை தான்.
    * வேலை செய்யாமல் ஒருவனிடம் பணம் பெற முயற்சிப்பது பிச்சை எடுப்பதற்குச் சமமானது.
    - பாரதியார்

  • #2
    Re: மன்னிப்போம்! மறப்போம்

    நல்ல சிந்தனைதான் படிப்பதற்கும் போதனைக்கும் ஆனால் தனக்கென வருங்கால்................ மறப்போம் மன்னிப்போம்

    Comment


    • #3
      Re: மன்னிப்போம்! மறப்போம்

      ஸ்ரீ,

      தாங்கள் சொல்வது முற்றிலும் சரியே. ஆனால் இப்படி பூடகமாக சொன்னால் எப்படி ? நாம் பிராமணர்கள் எதற்க்காக,யாருக்காக பயப்படவேண்டும்..யாராய் இருந்தாலும் தையிரியமாக ,ஏன் நானும் அதற்க்கு விதிவிலக்கல்ல,,சொல்லுங்கள் திருத்திக்கொள்ளலாம் ,இப்படி சொல்லாமல் இருந்தால் அவர்கள் எப்படி திருந்திக்கொள் வார்கள் .நான் சொல்வது சரிதானே ?!!!!!

      Comment

      Working...
      X