Announcement

Collapse
No announcement yet.

டெலிவிஷனில் வந்த “சோ” வின் ஒரு நிகழ்ச்சி.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • டெலிவிஷனில் வந்த “சோ” வின் ஒரு நிகழ்ச்சி.

    டெலிவிஷனில் வந்த "சோ" வின் ஒரு நிகழ்ச்சி.

    ஒரு கேள்வி : இந்த ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் உண்மையாகவே நடந்தனவா? எல்லாம் வெறும் கற்பனைதானே?

    பதில் : கற்பனை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

    கேள்வி கேட்பவர் : அப்படித்தான் சொல்கிறார்கள்.


    பதில் : அப்படிச் சொல்பவர்கள் எல்லாம்தான் இதில் அத்தாரிட்டியா? அவர்கள் சொல்வதே இறுதி முடிவா? இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கிறேன். ஔரங்கசீப் என்று ஒருவர் இருந்தாரா?


    கேள்வி கேட்பவர் : ஆமாம்.


    பதில் : ஆமாம் என்று எப்படிச் சொல்கிறீர்கள். அவரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உங்களுக்கு அவர் என்ன உறவா? அதே போல மராத்தி வீரர் சிவாஜி இருந்தாரா?


    கேள்வி கேட்பவர் : இருந்தார்.


    பதில் : எப்படித் தெரியும்?

    கேள்வி கேட்பவர் : புஸ்தகத்தில் படித்திருக்கிறேன்.

    பதில் : ராமாயணம், மஹாபாரதம் போன்றவையும் புஸ்தகங்களில் இருக்கின்றனவே! படியுங்களேன்.

    கேள்வி கேட்பவர் : ஔரங்கசீப், சிவாஜி போன்றவர்களைப் பற்றி சரித்திரத்தில் வருகிறது. நீங்கள் சொல்வது அப்படியா?

    பதில் : சரித்திரம் என்பது என்ன? நீங்கள் நேரில் பார்த்ததா? யாரோ, எப்பொழுதோ எழுதி வைத்ததுதான் சரித்திரம். இன்றைக்கு இருப்பவர், அன்று இருந்ததைப் பற்றி எழுதி வைப்பது சரித்திரம். ஒரு பிரிட்டிஷ் அறிஞர் சொன்னார் – சரித்திரம் என்பது ஒரு பொய் மூட்டை என்று. ஆனால், அந்த சரித்திரத்தை நீங்கள் முழுமையாக ஏற்கிறீர்கள். புராணத்தை ஏற்க முடியாது என்கிறீர்கள். ஏன்? இரண்டுமே நீங்கள் அறியாத விஷயங்கள்தான். அப்படி இருக்க, ஒன்றை ஏற்கிறீர்கள், மற்றொன்றை ஏற்க மறுக்கிறீர்கள். இதில் லாஜிக் இல்லையே? சரி, இவற்றையெல்லாம் விடுவோம். உங்களுடைய தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தா என்று ஒருவர் இருந்தார் அல்லவா?

    கேள்வி கேட்பவர் : ஆமாம்.


    பதில் : அவர் நல்ல மனிதரா?


    கேள்வி கேட்பவர் : ரொம்ப நல்ல மனிதர். நேர்மையானவர்.

    பதில் : உங்களுக்கு அது எப்படித் தெரியும்?

    கேள்வி கேட்பவர் : என்னுடைய தாத்தா சொல்லியிருக்கிறார். அவருக்கு அவருடைய தாத்தா சொல்லியிருக்கலாம்.

    பதில் : உங்கள் தாத்தா சொன்னதை உண்மை என்று நம்புகிறீர்கள். வியாஸர், வால்மீகி இவர்கள் எல்லோருக்கம் முன்னால் வாழ்ந்தவர்கள். எல்லோருக்கும் தாத்தா. அவர்கள் சொன்னால் நம்ப மாட்டீர்களா?

    கேள்வி கேட்பவர் : இதையெல்லாம் விடுங்கள். இந்தப் புராணம், இதிஹாசம் இவையெல்லாம் பிராமணர்கள் மற்றவர்களை டாமினேட் செய்வதற்காக எழுதி வைத்த விஷயங்கள்தானே?
    பதில் : பிராமணர்கள் எழுதி வைத்தது என்று சொல்கிறீர்கள். மஹாபாரதத்தை எழுதிய வியாஸரோ, ராமாயணத்தை எழுதிய வால்மீகியோ பிராமணர்கள் அல்ல. வியாஸர் ஒரு மீனவப் பெண்மணிக்குப் பிறந்தவர். வால்மீகி ஒரு வேடுவர். சரி. பிராமணரில்லாத இவர்கள், யாரைப் பற்றி எழுதி வைத்தார்கள்? வால்மீகி சொன்னது – ராமரைப் பற்றி. ராமரோ ஒரு க்ஷத்ரியன். வியாஸர் சொன்னது – கிருஷ்ணரைப் பற்றி. கிருஷ்ணரோ இடையர் குலத்தைச் சார்ந்தவர். இப்படி பிராமணரல்லாத ராமர், கிருஷ்ணர் இவர்களைப் பற்றி, பிராமணரல்லாத வால்மீகியும், வியாஸரும் எழுதி வைத்ததுதான் ராமாயணமும், மஹாபாரதமும். சொன்னவர்களும் பிராமணர்களில்லை; சொல்லப்பட்டவர்களும் பிராமணர்கள் இல்லை. இப்படிப்பட்ட விஷயத்தை பிராமணர்கள், மற்றவர்களை டாமினேட் செய்வதற்காக எழுதி வைத்தது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

    சரி, வியாஸரோ, வால்மீகியோ கூட பிராமணர்கள் இல்லா விட்டாலும், அவர்களுடைய எண்ணம் ‘பிராமணர்களை உயர்த்திக் காட்ட வேண்டும்’ என்று இருந்திருந்தால், அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு பிராமண கதாபாத்திரத்தை அல்லவா அவர்கள் மிக உயர்ந்ததாகக் காட்டியிருக்க வேண்டும்? ‘ஒரு பிராமணர்; அவர் சக்ரவர்த்தியாக இருந்தார்; அவரை மாதிரி ஒரு அரசர் இருந்ததே கிடையாது; மிகப் பெரிய வீரர்; அது மட்டுமல்ல, நியாயம் தவறாதவர்; எல்லோரிடமும் கருணை காட்டுபவர்…’ என்றல்லவா எழுதியிருக்க வேண்டும்? அப்படிச் சொல்லவில்லையே அவர்கள்?

    Source:harikrishnamurthy
Working...
X