சொல்லு! ராம,ராமா...சிவ சிவா!
ஆந்த்ராவைச் சேர்ந்த ஒரு சம்ஸ்க்ருத பண்டிட் ஒருவர் பெரியவாளை தர்சனம் பண்ண தஞ்சாவூர் அருகில் ஒரு கிராமத்துக்குப் போனபோது, சந்த்ரமௌலீஸ்வரர் சன்னிதியில் தீப நமஸ்காரம் நடந்து கொண்டிருந்தது. அது முடிந்ததும் அங்கு வந்திருந்த மாணவர்களைப் பார்த்து,
"எல்லாரும் ராம,ராமா...சிவ, சிவா...ன்னு சொல்லுங்கோ!" என்று சொல்லிவிட்டு குறிப்பாக ஒரு பையனைப் பார்த்து,
"சொல்லு! ராம,ராமா....சிவ சிவா!" என்றார். பையன் விழித்தான்! பக்கத்தில் இருந்தவர் பெரியவாளிடம்,
"பெரியவா....அவன் ஊமை...பொறவிலேர்ந்தே !..."
"அதுனால என்ன? அவன் சொல்லட்டும்...சொல்லுடா கொழந்தே! ராம,ராமா...சிவ சிவா...." என்று பரம பாக்யம் செய்த அந்த குழந்தைக்கு பெரியவா திருவாக்கால் நாமோபதேசம் வந்ததும்......
"ராம,ராமா.....சிவ சிவா....." பிறவி ஊமை அழகாக பகவானின் நாமத்தை சொன்னது!
அதைக்கண்ட சம்ஸ்க்ருத பண்டிதர் "எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாதோ, எந்த மஹானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ, அந்த சந்த்ரிகா மௌளீயான என் குருநாதனை நமஸ்கரிக்கிறேன்" என்ற அழகாகப் பொருள்படும் ஸ்லோகத்தை சம்ஸ்க்ருதத்தில் தக்ஷணமே கல்பித்துப் பாடினார். அதுதான் முதன்முதலாக அவர் மனஸில் ஸ்புரித்த ஸ்லோகமாம்!
------------------------------------
"குரு" என்ற ஈரெழுத்து "ராம" நாமத்துக்கு சரி நிகர் சமானம்.குரு என்றால் இருளைப் போக்குபவர் என்ற அர்த்தமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் ஆழ்ந்து பார்த்தால், கு, ரு என்ற இரண்டெழுத்துமே எழுதும் போதே மேலே இடது பக்கம் ஆரம்பித்து, வலமாக சுழித்து, கடைசியில் ஆரம்பித்த மேல் ஸ்தானத்துக்கே சென்று முடியும். இது 'குரு' என்ற மிக உன்னதமான சொல்லுக்கு தமிழ் செய்த நமஸ்காரம்.
சத்குருவின் திருவடிகளை சிந்திப்பவர், அவ்வளவு ஏன்? சத்குருவின் கடாக்ஷத்தில் விழுந்தவர்கள் மேன்மையைத்தான் அடைவர் என்று உணர்த்துகிறது.
அதே போல், சத்குருவானவர், தன்னுடைய உயர்ந்த ஸ்தானத்திலிருந்து [ஆத்மஸ்வரூபம்] இறங்கி, பொய், புரட்டைத் தவிர எதுவும் தெரியாத அல்லது தெரிந்தும் அலக்ஷியமாக கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று கெக்கே பெக்கே என்று அலையும் நம்மை மாதிரி ஜீவன்களை [ஈ, எறும்பும் இதில் அடங்கும்] யானை தன் தும்பிக்கையால் வழிப்பது போல், ஒரே வழியாக வழித்து, வாரி சுருட்டி எடுத்துக் கொண்டு போய், மேலே தன் ஸ்வரூபத்தில் சேர்த்துக் கொண்டு விடுவார். அல்லது அல்லாக்காகத் தூக்கி பகவானின் சரணத்தில் போட்டு விடுவார்.
யாருக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் குருவே தெய்வம்; இதில் நம்முடைய அடம், அஹம்பாவம் எதுவுமே செல்லுபடியாகாது. ஒழுங்காக ஒத்துழைத்தால் [அவர் சொன்னபடி நடந்தால்] நம்முடையது உண்மையான ஸுகஜீவனம்; இல்லாவிட்டாலும் அவர் எப்படியும் நம்மை சுருட்டி இழுத்துக் கொண்டுதான் போகப்போகிறார். அடம் பிடித்தால், நமக்குத்தான் படு கஷ்டம்.
நமக்கு கீழ்வாலக்கமாகப் போகும் குர..ங்கு என்ற வார்த்தை மிகவும் பொருந்தும். கு என்ற எழுத்துக்கு அப்புறம் இரண்டாவது எழுத்தாக ரு அல்லது ர....எதில் சேரப்போகிறோம் நாம்?
"காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்" என்று சொல்லுவார்கள். நமக்கும் "குரு காமாலை" பீடித்து காண்பதெல்லாம் நம் சத்குருவாகத் தெரிந்துணர நம் குருநாதரை வேண்டித் தொழுவோம்.
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !
Source;KSR