Announcement

Collapse
No announcement yet.

தரிசன அனுபவங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தரிசன அனுபவங்கள்

    மஹாபெரியவா தரிசன அனுபவங்கள் - ஐந்தாம் பாகம்
    நினைவு கூர்ந்தவர் : எஸ். சீதாராமன், சென்னை - 28.


    ஒரு சமயம் நான் மாடல் ஏரோப்ளேன் செய்வதில் ஈடுபட்டிருந்தேன். பால்ஸா மரப்பலகையை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன்.

    ஓர் ஆர்வத்தில், பால்ஸா மரப்பலகையைக் கொண்டு ஓர் ஆலயம் மாதிரி அமைத்தேன். நடுவில், நான்கு சிஷ்யர்களுடன் ஆதிசங்கரர். வேலை முடிந்ததும், அதை எடுத்துக் கொண்டு போய், பெரியவாளிடம் சமர்ப்பித்தேன்.

    பெரியவாள் அதை நன்றாக உற்றுப் பார்த்தார்கள்.

    “எப்படிப் பண்ணினே?”

    “நான் இப்போது மாடல் ஏரோப்ளேன் செய்து கொண்டிருக்கேன். பால்ஸா மரப்பலகை அதற்குத் தேவை. அதே பால்ஸா பலகையினால்தான் இந்தக் கோயிலையும் செய்தேன்.”

    “போஜராஜன் எழுதின ஸமராங்கண சாஸ்திரம் படித்திருக்கிறாயோ?”

    “இல்லை…”

    “அந்தப் புத்தகத்தில் ஏரோப்ளேன் செய்வது எப்படின்னு போஜன் சொல்லியிருக்கார். அதை நான் இஞ்சினீயர்களிடம் விளக்கிச் சொன்னேன். அவர்கள், Joist Fan Principle – ல் தயாரிக்கப்படும் விமானம் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது; இது நன்றாக வேலை செய்யும் என்று சொன்னார்கள்.”

    பெரியவாளுக்கு ஆகாயவிமானம் பற்றிய இவ்வளவு நுட்பமான விஷயங்களெல்லாம் எப்படி ஞாபகத்தில் இருக்கின்றன என்று எண்ணி நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்.

    “ஆனால், அதிலுள்ள முக்கியமான பாகங்களைப் பற்றி போஜன் சொல்லவில்லை! வேண்டுமென்றேதான் சொல்லவில்லை. அதாவது, தான் சொல்லாமல் விட்டதற்கான காரணத்தைக் கூறியிருக்கிறார். பிற்காலத்தில், மனிதர்கள் விமானத்தை மனிதகுல அழிவுக்குப் பயன் படுத்துவார்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது, இப்போது சரியாகத்தானே இருக்கு!”

    “ஆமாம். தரையில் உள்ளவர்கள் மீது குண்டு போட்டு அழிப்பதற்கு ஆகாய விமானங்களையே பயன்படுத்துகிறார்கள். அதைவிடப் பரிதாபம் – விமானம் கீழே விழுந்து, விமானத்தில் இருந்தவர்கள், கீழே இருப்பவர்கள் என்று எல்லோரும் அழிந்து போகிறார்கள்.”

    பெரியவா உடனே மெளனமாகிவிட்டார்கள்.

    குண்டுமழையினால் உயிரிழந்தவர்களுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்களோ?

    ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

Working...
X