Announcement

Collapse
No announcement yet.

ஜபம் செய்வதன் மகிமை!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஜபம் செய்வதன் மகிமை!

    ஜபம் செய்வதன் மகிமை!

    By காஞ்சி ஸ்ரீமகாபெரியவர்

    09 May 2013 DINAMANI வெள்ளிமணி

    ஜபத்தின் மகிமையை நன்கு அறிந்தவர் வசிஷ்டர். ராமாயணத்தில் "வஸிஷ்டம் ஜபதாம் வரம்' என்று "ஜபம் செய்கிறவர்களில் சிறந்தவர் அவரே' என்றிருக்கிறது. மகாபாரதத்தில் "ஜபம் செய்கிறவர்களின் கதி என்ன?' என்று யுதிஷ்டிரர் கேட்க, பீஷ்மர் சொல்கிறார்- "ஆசமனம் பிராணாயாமம் அங்கந்யாஸம் முதலிய அங்கங்கள் இன்றி ஜபம் செய்கிறவன், சிரத்தை-மகிழ்ச்சி இல்லாமல் ஜபிக்கிறவன், அகங்காரம் உடையவன் இவர்கள் நரகம் செல்வர். எந்த விஷயத்தில் அவனின் ஆசை நிலை கொள்கிறதோ அவன் அதில் பிறப்பான். சஞ்சல புத்தியுடன் செய்பவன் சஞ்சல கதி அடைவான். ஹடத்தால் ஜபிப்பவனும் நல்ல கதி அடைய மாட்டான், நரகத்தையே அடைவான். காமகாமியாக இருந்து பிரணவத்தை ஜபம் செய்தவனும் நரகத்துக்கே போவான்' என்கிறார்.

    நரகம் என்றால் என்ன என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்கிறார்- "தேவர்களுடைய நிலைகள், திவ்ய விமானங்கள், தேவ சபைகள், தேவலோக உத்தியானங்கள், விளையாட்டு இடங்கள், தாமரை ஓடைகள், இந்திரன், ப்ருகஸ்பதி, மருத், விச்வதேவர், ஸôத்யர், வஸý, ருத்ர ஆதித்யர் இவர்களுடைய உலகமும் நரகம்தான். பரமாத்மாவின் நிலை, அதாவது ஸ்வரூபம் ஒன்றே பயமற்றது. அவித்யாதி க்லேசம் அற்றது. ப்ரியம், அப்ரியம் முக்குணங்கள் அற்றது. லிங்க சரீரம் அற்றது. அறிபவன், அறிவு, அறியப்படுவது என்ற மூன்றும் அற்றது சுக துக்கம் அற்றது. அதுவே நித்ய சுகம். அதைப் பின்பற்றி தேவ லோகங்கள் நரகமாகும். ஆகவே சாத்திரப்படி ஜபம் செய்பவனுக்கு மோட்சமும், விதிக்கு மாறுபாடாகியோ, பலனை விரும்பியோ ஜபம் செய்பவனுக்கு தேவாதி லோகப் பிராப்தியும் கிடைக்கும்.

    பின் தருமர், காலம், யமன், மிருத்யு இவர்களின் ஜபம் தொடர்பான உரையாடலைப் பற்றி அவர் கேட்க, பீஷ்மர் சொல்கிறார்:

    "இக்ஷ்வாகு, பிராமணன், காலம், யமன் இவர்களின் வரலாற்றைச் சொல்கிறேன் கேள். ஒரு காலத்தில் வேத வேதாங்கங்களை அறிந்த புத்திசாலி பிராமணன் ஒருவன் இருந்தான். அவன் தவம் புரிந்துகொண்டு ஆயிரம் வருடங்கள் வேத மாதாவான காயத்ரீயை ஜபம் செய்தான். கடைசியில் காயத்ரீ தேவி அவன் முன் தோன்றினாள். அவனோ ஜபத்தையே செய்துகொண்டு தேவியிடம் ஒன்றும் பேசவில்லை. தேவி அவனிடம் கருணை கொண்டாள். அவன் ஜபத்தை முடித்துக்கொண்டு தேவியின் காலில் விழுந்தான். தேவி வேண்டிய வரத்தைக் கேட்குமாறு கூறினாள். பிராமணன், எனக்கு ஜபத்தில் ஆசை வளரட்டும் மனம் எப்போதும் சமாதியில் லயிக்கட்டும் என்று வேண்டினான். அப்படியே ஆகட்டும். ஒருபோதும் நரகம் அடையமாட்டாய். பிரம்மாவின் ஸ்தானத்தையே அடைவாய்' என்று கூறி மறைந்தாள்.

    பிராமணன் அற வடிவினனாய் மறுபடியும் நூறு வருடம் தவம் செய்தான். அதன் பின்னர் தர்மதேவதை அவன் முன் தோன்றியது. "நான் தர்மதேவதை. இந்த ஜபத்தின் பயனாக சத்ய லோகத்தை நீ அடைந்திருக்கிறாய். உடனே உன் உயிரையும் உடலையும் விட்டு அந்த லோகங்களை அடைவாய்' என்றது.

    அதற்கு அவன், "தர்மமே, எனக்கு லோகம் எதற்கு? சுக துக்க தொடர்புள்ள உடலை மறுபடி அடைய மாட்டேன். நேராக மோட்சம் செல்வேன்' என்றான்.

    ஆனால் "நீ அவசியம் உடலை விட வேண்டும். எனவே சுவர்க்கம் போ' என்றது தர்ம தேவதை.

    "இந்த உடல் இல்லாமல் நான் சுவர்கத்தை விரும்பவில்லை. எனவே எனக்கு சுவர்க்கம் வேண்டாம்' என்றான்.

    "நீ உடலில் ஆசையை விட்டுவிட்டு ரஜஸ் இல்லாத லோகம் செல்' என்றது. அவன் அதற்கு மறுத்தான்.

    "உனக்கு உடலை விட விருப்பம் இல்லாவிடின், இதோ காலன், ம்ருத்யு, யமன் மூவரும் உன்னிடம் வருகிறார்கள்' என்று சொல்லி தர்மம் மறைந்தது.

    அவ்வாறே ஆயுளை நிர்ணயிக்கும் காலதேவதையும் உயிரைக் கொண்டு போகும் ம்ருத்யுவும் பாப புண்ணியங்களுக்கு பலனைக் கொடுக்கும் யமதேவதையும் அங்கே வந்தனர்.

    அவன் அவர்களுக்கு வரவேற்பளித்தான். அப்போது தீர்த்த யாத்திரை செய்துகொண்டிருந்த இக்ஷ்வாகு அரசனும் வந்தான். பிராமணன் இக்ஷ்வாகுவையும் பூஜித்து, "அரசரே, நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?' என்றான்.

    அரசனோ, "நான் அரசன், நீர் பிராமணர். உமக்குவேண்டிய பணம் கொடுக்கிறேன்' என்றான். பிராமணன் தனக்கு பணம் வேண்டாம் என்றும், தன் தவத்தால் அரசனுக்கு வேண்டியதை அளிப்பதாகவும் கூறினான்.

    அரசன், "நான் யாசிப்பதில்லை. ஆனால், நீர் உறுதியாக இருப்பதால் உம்முடைய ஜப பலனைக் கொடுங்கள்' என்றான்.

    பிராமணன் அப்படியே தான் செய்த ஜப பலத்தை அரசனிடம் அர்ப்பணம் செய்தான்.

    அரசன், "உன் ஜபத்திற்குப் பலன் என்னவென்று தெரியாதபடியால் அதைச் சொல்' என்று வினவ, பிராமணன், "நான் ஜபத்திற்குப் பலனை உத்தேசிக்கவில்லை. ஆனால் எனக்குத் தெரியாது. நீர் பலனைக் கேட்டபடியால் கொடுத்துவிட்டேன். அசத்தியம் மிகவும் கொடியது. சத்தியம் தவங்களைக் காட்டிலும் பெரிய தவம். ஆதலால் நான் தவறமாட்டேன்' என்றான்.

    ராஜா, "அறிவதும் உலகைக் காப்பதும் எங்கள் தர்மம், க்ஷத்திரியர்கள் கொடையாளிகள் வாங்குப

    வரல்லர்' என்றான்.

    பிராமணன் "அரசே நான் தங்கள் வீடு தேடி வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என்று நிர்பந்திக்கவில்லை. "நீர் இவ்விடம் வந்து கேட்டபின் கொடுத்தேன். நீங்கள் வேண்டாம் என்பது எவ்வாறு?' என்றான்.

    அந்நேரம் தர்மதேவதை தோன்றி, பிராமணனுக்குத் தான பலனும், அரசனுக்கு சத்திய பலனும் கிடைக்கட்டும் என்றது. இப்படி இருவரும் நிர்பந்திக்க, இருவரின் கோபமும் விரூபன், விகிருதன் என்ற பெயருடன் உருக் கொண்டு விவாதித்தன. இறுதியில், கடனாளி கொடுக்க வேண்டிய கடனைக் கொடுத்தால் பெற்றுக் கொள்வது அவசியம் என்று முடிவானது. அதன்படி, அரசன், பிராமணன் கொடுத்த புண்ய தானத்தை துக்கத்துடன் பெற்றுக் கொண்டான். பின்னர் அவனிடம் எல்லாவற்றையும் திருப்பி அளித்தான். இருவரும் சமமாகவே பிரம்ம லோகம் சென்றனர். எனவே ஜபத்தின் முடிவான பலன் மோட்சமே என்று பீஷ்மர் தர்ம புத்திரருக்கு உபதேசித்தார்.

    SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
    Source: radha
Working...
X