வேதம் – தசோபநிஷத்துக்கள்-Part 4
அவனால் தான் இவற்றுக்கெல்லாம் பிரகாசமாதலால், இவற்றால் அவனை விளக்கிக் காட்டமுடியாது என்ற அர்த்தம். நம் அறிவெல்லாம் அந்தப் பிரகாசமாதலால், இவற்றால் அவனை விளக்கிக் காட்டமுடியாது என்று அர்த்தம்.
நம் அறிவெல்லாம் அந்தப் பேரறிவிலிருந்தே உண்டானதால், இந்த நம் சிற்றறிவால் அவனை விளக்க முடியாது) ;பிற்பாடு கீதையிலும் பகவான் சொல்லும் ஸம்ஸாரம் என்ற தலைகீழ் அச்வத்த விருட்சத்தைப் பற்றிய பிரஸ்தாவம்;ஹ்ருதயத்தில் குடிகொண்டுள்ள ஆசைகளை எல்லாம் ஒழித்துவிட்டால், இங்கேயே மனிதன் அமிருதமாகி பிரம்மத்தை அநுபவிக்கிறான் என்ன விஷயம் - இப்படி அநேக சமாசாரங்கள் இன்று quote பண்ணப்படுவதெல்லாம் கடோபநிஷத்துக்கு அப்புறம் வரும் ப்ரச்னோபநிஷத் முண்டகோபநிஷத், மாண்டூக்யோபநிஷத் ஆகிய மூன்றும் அதர்வ வேதத்தைச் சேர்ந்தவை.
ப்ரச்னம் என்றால் கேள்வி. பிரஜைகள் உறபத்தியானது எப்படி?அவர்களை ரக்ஷிக்கிற தேவர்கள் யார்?பிராணன் எப்படி சரீரத்தில் வந்து இயங்குகிறது?விழிப்பு, தூக்கம், ஸ்வப்னம் என்கிற நிலைகளைப் பற்றின உண்மை என்ன?ஒங்கார உபாஸனையின் பிரயோஜனம் என்ன?பரம புருஷனுக்கும்ஜீவனுக்கும் என்ன சம்பந்தம்?- என்கிற ஆறு பிரச்னங்களுக்கு விடை சொல்வதால் இந்த உபநிஷத்துக்கு இப்படிப் பெயர் ஏற்பட்டிருக்கிறது.
முண்டகம் என்றால் தலையை மொட்டை அடித்துக் கொள்வது. ஸந்நியாஸிகள் மாதிரியான பரம பக்குவமான வைராக்யசாலிகளே அப்யஸிப்பதற்கு அதிகாரம் பெற்ற உபநிஷத்துக்கு முண்டகோபநிஷத் என்ற பெயர் இருக்கிறது. அக்ஷர பிரம்மத்தைப் பற்றிச் சொல்கிற உபநிஷத் இது. அழிவில்லாதது எதுவோ அதுவே அக்ஷரம். அக்ஷரம் என்றால் ஒலி என்ற அர்த்தமும் இருக்கிறது.
பஞ்சாக்ஷரம், அஷ்டாக்ஷரம் என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா?இந்த ஒலிகளுக்கெல்லாம் மூலமான அக்ஷரம்தான் பிரணவம் என்னும் ஒம்காரம். அக்ஷரப் பிரம்மம் என்ற லக்ஷ்யத்தில் சேர்வதற்கு அக்ஷரமான பிரணவம் விசேஷ ஸாதனமாக இருக்கிறது. ஒம்கார வில்லில் ஆத்மா என்ற அம்பைப் பூட்டிக் கொஞ்சங்கூட கலக்கமில்லாமல் பிரம்மம் என்ற குறியில் அடித்து ஒன்றாக்கி விடவேண்டும் என்று இந்த உபநிஷத் சொல்கிறது.
ஜீவாத்மா, பரமாத்மா இரண்டையும் சரீரம் என்கிற ஒரே பிப்பில மரத்திலிருக்கிற இரண்டு பக்ஷிகளாகவும், அவற்றில் ஜீவாத்ம பக்ஷி மட்டும் பழத்தை (கர்ம பலத்தை) ச் சாப்பிடுவதாகவும், பரமாத்ம பக்ஷி சாக்ஷி மந்திரமாகப் பார்த்துக் கொண்டு மாத்திரம் இருப்பதாகவும் இந்த உபநிஷத்தில்தான் வருகிறது. இதுவே பைபிளில் ஆதம் (ஆத்மா) ஆப்பிள் (பிப்பில) பழத்தைச் சாப்பிடாமலிருந்ததாகவும், ஈவ் (ஜீவன்) அதைச் சாப்பிட்டதாகவும் கதையாயிற்று. இப்போது குடியரசு சர்க்காரில் ஸத்யமேவ ஜயதே என்ற Motto (லக்ஷ்ய வாசகம்) வைத்துக்கொண்டிருக்கிறார்களே, அது முண்டகோபநிஷத் மந்திரம்தான். இந்த லோகத்திலேயே ஜீவன் முக்தர்களாக இருந்து, சரீரம் போனபின் விதேஹ முக்தர்களாக இருந்து, சரீரம் போனபின் விதேஹ முக்தர்களாக ஸந்நியாஸிகளைப்பற்றியும் இதில் ஒரு மந்திரம் இருக்கிறது.
இப்போது ஸந்நியாஸிகளுக்குப் பூர்ண கும்பம் கொடுக்கும்போது சொல்கிற மந்திரங்களில் இந்த மந்திரமும் வருகிறது. வெவ்வேறு பெயரில், வெவ்வேறு ரூபத்தில் ஒடுகிற நதிகள் யாவும் ஸமுத்திரத்தில் தங்கள் பெயரையும் உருவத்தையும் இழந்து ஸமுத்திரமாகவே ஆகிவிடுவதுபோல, ஞானி நாம ரூபங்களை இழந்து பராத்பரனான புருஷனில் இரண்டறக் கலந்துவிடுகிறான் என்று இந்த உபநிஷத் சொல்கிறது.
'மாண்டூக்யோபநிஷத்து'அடுத்தது. மாண்டூக்யம் என்றால் தவளை. தவளை உபநிஷத்து என்று ஏன் பேர்?ஒரு காரணம் தோன்றுகிறது. தவளை ஒவ்வொரு படியாக ஏற வேண்டும் என்பதில்லை. அப்படியே தாவி முதல் படியிலிருந்து நாலாம் படிக்கு எகிறிக் குதித்து வரும். இந்த உபநிஷத்திலே ஜாக்ரம் (விழிப்பு நிலை) , ஸ்வப்னம் (கனவு நிலை) , ஸுஷ§ப்தி (தூக்க நிலை) இவற்றைத் தாண்டி ஆத்மவெளியான துரீயத்தில் (நாலாம் நிலையில்) சேருவதற்கு வழி சொல்லியிருக்கிறது.
ஒம் என்ற அக்ஷர உபாஸனையாலேயே இப்படி ஒரே தாவாகத் துரீயத்துக்குத் துள்ளிக் குதிப்பதைச் சொல்லியிருக்கிறது. அதனால்தான் தவளை உபநிஷத்து என்று பேர் வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ரிஸர்ச் செய்பவர்கள், ஆதிகால ஜனங்களில் ஒவ்வொரு கோஷ்டியும் ஒவ்வொரு பிராணி வர்க்கத்தின் பேரில் totem என்று அடையாளம் வைத்துக் கொண்டு, தனி தனிப்பிரிவுகளாகச் சேர்ந்திருந்தார்கள் என்றும், இதிலே தவளை அடையாளம் வைத்துக் கொண்ட மாண்டூக்யர்களிடம் ¤ருந்த உபநிஷத்தே இது என்றும் சொல்கிறார்கள். இந்த உபநிஷத்தின் KS மண்டூக ரூபியான வருண பகவான் என்று சொல்லப்படுகிறது.
உபநிஷத்துக்களுக்குள் ரொம்பச் சின்னது இதுதான். மொத்தம் பன்னிரண்டே மந்திரங்கள்தான். ஆனால் கீர்த்தியிலும், சக்தியிலும் இந்த உபநிஷத் விசேஷமான இடம் பெற்றிருக்கிறது. பிரணவத்தின் நாலு பாதங்களைக் காட்டி ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் ஒன்றே என்ற இது நிர்த்தாரணம் செய்கிறது. கடைசியில் பிரபஞ்சமெல்லாம் ஒடுங்கிப் போகிற துரீய அநுபவத்தை " சாந்தம்-சிவம்-அத்வைதம் " என்று இந்த உபநிஷத் வர்ணிப்பது பிரஸித்தமாக இருக்கிறது.
ஸ்ரீ சங்கர பகவத் பாதாளின் குருவுக்கு குருவான ஸ்ரீ கௌட பாதாச்சார்யாள் 'மாண்டூக்யோப நிஷத் காரிகை'என்று இந்த உபநிஷத்தின் தத்துவத்தை விளக்கி எழுதியிருக்கிறார். அதற்கு பகவத்பாதாள் பாஷ்யம் செய்திருக்கிறார். தசோபநிஷத்துக்களின் பேரச்சொல்லும் ச்லோகத்தில் அடுத்தாற்போல் தித்திரி என்று வருவதுதான், தைத்ரீய உபநிஷத்.
Contd…5…Source: subadra