வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 6
தைத்திரீய உபநிஷத்திலும் (ll.8) பிருஹதாரண்யக உபநிஷத்திலும் (1v.3.33) மநுஷ்ய லோக ஆனந்தம், பித்ரு லோக ஆனந்தம், தேவலோக ஆனந்தம், அந்த தேவர்களுக்குள்ளேயே இந்திரனின் ஆனந்தம், பிருஹஸ்பதியின் ஆனந்தம், பிரஜாபதியின் ஆனந்தம் என்று ஒன்றைவிட ஒன்று நூறு மடங்கானது என்று ஒரு பெருக்கல் வாய்ப்பாடு சொல்லிக்கொண்டே போய், கடைசியில்தான் பிரம்மானந்தம் என்ற ஞானியின் ஆனந்தத்தைச் சொல்லியிருக்கிறது. ஆதலால், தேவர்களும் குறையுள்ளவர்கள்தான்.
அதோடுகூட, எல்லாக் குறையையும் பூர்த்தி செய்கிற ஞானத்துக்காக அவர்கள் பாடுபடுவதும் இல்லை. தங்களுக்கு மநுஷ்யர்களால் உண்டாகிற லாபங்களை எதிர்பார்த்துக் கொண்டு, நாம் செய்கிற யக்ஞம் முதலான உபாஸனைகளை எதிர்பார்த்துக் கொண்டுதான் அவர்கள் இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மநுஷ்யர்கள் ஞானியாகி விடுவதும் பிடிக்கவில்லை. ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் இப்படி வியக்தமாகச் சொல்லியிருக்கிறது. 'மனிதர்கள் ஆத்மாவை அறிந்து கொள்வது தேவர்களுக்குப் பிரியமாக இல்லை'என்று அந்த உபநிஷத்தில் (l.4.10) சொல்லியிருக்கிறது. காரணம் என்ன?ஆத்ம ஞானியாக ஆகிவிட்டால் அப்புறம் ஒருவன் தேவர்களைத் திருப்திப் படுத்துகிற யக்ஞாதி கர்மங்களைப் பண்ணமாட்டான்.
நம்முடைய வீட்டு வேலைக்காரன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு ஸ்வல்ப சம்பளம் கொடுத்து வருகிறோம். வேறு புது வேலைக்கான் வந்தால் அதிகச் சம்பளம் கொடுத்து வருகிறோம். வேறு புது வேலைக்காரன் வந்தால் அதிகச் சம்பளம் கொடுக்க வேண்டும். நமது வேலைக்காரன் மேலே பரீ¬க்ஷகளில் பாஸ் பண்ணி வேறு வேலைக்குப் போய் விருத்தியாக எண்ணுகிறான். பரீ¬க்ஷக்குப் போகிறான். நாம் அவன் பரீ¬க்ஷயில் தேறவேண்டுமென்று நினைப்போமா?மாட்டோம்.
தேறக் கூடாதென்றுதான் நினைப்போம். தேறிவிட்டால் அவனுக்குக் கௌரவம் வந்துவிடும்;வேறு வேலைக்குப் போய் விடுவான். அவன் போய்விட்டால் அவனைப் போல் ஸ்வல்ப சம்பளத்தில் ஒரு வேலைக்காரனும் நமக்குக் கிடைக்க மாட்டான். இதைப் போலத்தான் இங்கேயும் இருக்கிறது. மநுஷ்யன் ஞானியாக உயர்ந்து, தங்கள் உபாஸனையை விட்டுவிடுவது தேவர்களுக்குப் பிடித்தமில்லை.
ஞானி தேவர்களுக்குப் பிரியமில்லாதவன் என்றால் ஞானியாக இல்லாதவன்தான் அவர்களுக்குப் பிரியன் என்றாகி விடுகிறது. ஆகையால் தேவர்களுக்குப் பிரியமானவன் அஞ்ஞானி, அறியாதவன் என்றாகிறது. அதனால்தான் மூர்க்கன் என்பதற்கே தேவனாம் ப்ரியன், அதாவது தேவர்களுக்குப் பிரியமானவன் என்று வியாகரணத்தில் இன்னொரு பெயர் கொடுத்திருக்கிறது. இந்த பெயருக்கு உபநிஷத்தில் மூலம் இருக்கிறது.
சங்கர பகவத்பாதாள் பிரம்ம ஸ¨த்ர பாஷ்யத்தில் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று என்றால் ஜீவாத்மாவின் கஷ்ட ஸுகங்கள் பரமாத்மாவுக்கும் உண்டாகும் என்று நினைக்கிறவனுக்கு பதில் சொல்லும்போது, c என்ன ரொம்ப அசடாயிருக்கிறாயே என்ற அர்த்தத்தில் தேவானாம் ப்ரியனாக இருக்கிறாய் என்கிறார்.
இதம் தாவத் தேவானாம் ப்ரிய ப்ரஷ்டவ்ய :
தேவர்களுக்குப் பிரியமானவன் - "தேவானாம் பிரியன்" - என்ற பெயரைக் கேட்டால், இதோ பெரிய டைட்டில் மாதிரித் தோன்றுகிறது. ஆனால், அதற்கு நிஜ அர்த்தத்தை பார்த்தால் அசடு என்று இருக்கிறது.
அசோக சக்ரவர்த்தியின் கல் வெட்டுத் தூண்களில் அவரை "தேவானாம் ப்ரிய"என்றே சொல்லியிருக்கிறது. அசோகர் காலத்துக்கு முந்தியே, பாணினி தமது வியாகரண புஸ்தகத்தில் தேவானாம் ப்ரியன் என்றால் மூர்க்கன் என்று எழுதி வைத்திருக்கிறார். ஆகையால், பௌத்தனான அசோகனை மட்டம் தட்டவே பிற்காலத்து வைதிகர்கள் அவன் சாஸனத்தில் போட்டுக் கொண்டிருக்கிற டைட்டிலுக்கு அசடு என்று அர்த்தம் பண்ணிக் களங்கம் உண்டாக்கிவிட்டார்கள் என்று நினைப்பது தப்பு.
வேத தாத்பரியம் தெரியாதவனைத்தானே நம் ஆசாரியாள் ஸ¨த்ர பாஷ்யத்தில் தேவானாம் ப்ரியன் என்கிறார்?அசடு என்ற அபிப்ராயத்தில் இப்படிச் சொன்னார். ஆனால் அந்த அபிப்ராயத்தை விட்டுவிட்டு வேதத்தை ஆட்சேபிக்கிறவன் எப்படிப்பட்டவனானாலும் அவனுக்கு இந்தப் பெயரைக் கொடுத்து விடலாம் என்ற எண்ணத்தில், அவைதிக மதமான பௌத்தத்தைச் சேர்ந்த அசோக சக்ரவர்த்திக்கு தேவானாம் ப்ரிய என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
Contd…Part 7…….