Announcement

Collapse
No announcement yet.

வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 2

    வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 2

    முதலில் வேத கர்மாநுஷ்டானங்களைப் பண்ண மாட்டேன் என்பதும் தப்பு. அப்புறம், அதை ஒருநாளும் விடமாட்டேன் என்பதும் தப்பு. இந்தக் காலத்தில் எல்லோரும் முதலிலேயே, யக்ஞமாவது?அத்யயனமாவது?இதெல்லாம் வேண்டவே வேண்டாம், நேரே உபநிஷத்துக்குப் போகிறோம் என்கிறார்கள். இதனால் புத்தி பூர்வமாக ( intellectual ) உபநிஷத்தைப் பற்றி நிறையப் பேசுகிற ஸ்திதிதான் வந்திருக்கிறதே தவிர, அநுபவத்தில் சாந்தர்களாக, வைராக்யசாலிகளுக்கு, ஆத்ம ஞானிகளாக யாரும் வரக்காணோம்!ஆரம்பகாலத்திலேயே அதற்கான ஸாதனைகளான கர்மாநுஷ்டானங்களை விட்டுவிட்டதன் கோளாறுதான் இதற்கு காரணம். இதுஒரு விதத்தில் தப்பு என்றால் ஞானத்துக்கே வரமாட்டேன் என்று கர்மடர்களாகவே நின்று விடுவது, இன்னொரு விதத்தில் தப்பாக இருக்கிறது.

    முதல் கிளாஸ், இரண்டாம் கிளாஸ் என்று ஒவ்வொன்றாகப் படித்துதான் பி.ஏ.வுக்குப் போக வேண்டும். எடுத்தவுடனேயே பி.ஏ.போவேன் என்றாலும் தப்பு;ஆரம்ப க்ளாஸ்களிலேயே பெயிலாகிக் கொண்டு அப்படியே இருப்பேன், மேல் கிளாஸுக்குப் போக மாட்டேன் என்றால் அதுவும் தப்பு.

    ஆதிகாலத்தில் பிந்திய கோஷ்டி நிறைய இருந்தது;இப்போது முன்னால் சொன்ன மாதிரியானவர்கள் அதிகம் இருக்கிறார்கள். கிருஷ்ணபகவான் காலத்தில், கர்மாநுஷ்டானத்தைவிட்டு ஞானத்துக்கு வராதவர்கள் அதிகம் இருந்தார்கள். அவர்களைத்தான் அவர் திட்டினார். வேதத்தை அவர் திட்டியதாகத் தோன்றுவதெல்லாம், வாஸ்தவத்தில் வேத தாத்பர்யத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல், வேத கர்மாவோடு நின்று விட்டவர்களைக் குறித்து அவர் திட்டியதுதான். உள்ளபடி வேதத்தை அவர் ஒரு நாளும் திட்டமாட்டார்.

    வேதங்களை ரக்ஷித்துக் கொடுப்பதற்காகவே தான், அவர் திரும்பத் திரும்ப அவதாரம் பண்ணினது. அவருடைய காலத்தை ஒட்டி, கிருஷ்ண பரமாத்மா இப்படி கர்ம மார்க்கக்காரர்களைத் திட்டினார். இப்போது அவர் புதிதாக கீதை சொன்னால், இன்றைக்கு வேத கர்மாவே வேண்டாம் என்று நேராக உபநிஷத்துக்களுக்குப் போகிறவர்களைத்தான் திட்டியிருப்பார். கீதையிலே கர்மடர்களைத் திட்டுவதைவிட இன்னம் கடுமையாகத் திட்டியிருப்பார் என்றுகூடத் தோன்றுகிறது. ஏனென்றால் அதைவிட இதுதான் பெரிய தப்பு. முதல் கிளாஸ், இரண்டாம் கிளாஸ் எப்படியும் படித்துத்தான்

    ஆக வேண்டும். அவனுக்கு நன்றாகச் சொல்லிக் கொடுத்து மேல் கிளாஸுக்கு படித்துத் தள்ளிவிடலாம். ஆனால் முதலிலேயே பி.ஏ.போகிறேன் என்பவன் ஒரு வழிக்கும் வரவில்லை;அவனை ஒரு வழிக்கும் கொண்டு வரவும் முடியாது. ஆரம்ப கிளாஸில் படிக்கிறவன் கொஞ்சமாவது விஷயம் தெரிந்து கொள்கிறான். இவனோ ஒன்றும் தெரிந்து கொள்ளமுடியாது.

    வேதத்துக்கும் வேதாந்தத்துக்கும் முரண்பாடே இல்லை. வேதாந்தத்துக்குப் பக்குவப்படுத்துவதற்காகவே வேதம் (கர்மகாண்டம்) இருக்கிறது. அது லோக ஸம்பந்தமானதுதான், பல தேவதைகளின் ஸம்பந்தமானதுதான். ஆனாலும் லோகத்தைவிட்டு, தேவதையும் உபாஸனையும் வேறில்லை என்று குணம் கடந்த நிலைக்கு போவதற்குப் பூர்வாங்கமாகவே அது அப்படியிருக்கிறது என்று புரிந்துகொண்டு, அதை அநுஷ்டித்தால் அது தானாக ஞானகாண்டத்தில் கொண்டு சேர்த்து விடும்.
    "ஸ்வய நன்மை மட்டுமில்லாமல், லோகத்திலுள்ள ஸமஸ்த பிராணிகளுக்கும் வேத சப்தமும், யக்ஞமும் க்ஷேமம் கொடுப்பதாயிற்றே! இவன் லோகம் பொய் என்று ஞானியாக போய்விட்டால், லோக க்ஷேமம் என்ன ஆவது?"இப்படித் தோன்றுகிறது. அவனுக்கு லோகம் பொய்யாக போய்விட்டாலும் நமக்கு அது நிஜம் மாதிரித்தானே இருந்து கொண்டு உபத்ரவப்படுத்துகிறது?இந்த உபத்ரவம் தீருவதற்கு யக்ஞம் மாதிரியான அநுஷ்டானம் எதுவும் ஞானி பண்ணவில்லையே என்று தோன்றுகிறது. ஆனால் ஞானி இருக்கப்பட்ட உத்தமமான ஸ்திதியைப் பார்த்தால், அவன் யக்ஞம் என்ற ஒன்று பண்ணித்தான் லோக க்ஷேமத்தை உண்டுபண்ணவேண்டும் என்றே இல்லை. அவன் வாழ்க்கை முழுக்கவே யக்ஞமாகத்தான் இருக்கிறது. அவன் லோகத்தை அடியோடு பொய்யென்று நினைத்தாலும் சரி, அல்லது இந்த லோகம் பகவானின் லீலை என்று நினைத்தாலும் சரி, அவன் மூலமாக இந்த லோகத்துக்குப் பகவானின் அநுக்ரஹம் ஒயாமல் வெளிப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. ஞானிகளிடம் ஜனங்கள் கூட்டங் கூட்டமாகப் போவதற்குக் காரணம் என்ன?அவர்கள் ஜனங்களை விட்டுப் போனாலும் கூட, இவர்கள் போய் அவர்களுடைய காலில் விழுவதற்கு காரணம் என்ன? அவர்கள் செய்கிற அநுக்ரஹந்தான் காரணம். அவர்கள் செய்கிற அநுக்ரஹந்தான் காரணம்.

    அவர்கள் உத்தேசித்துச் செய்கிறார்களோ இல்லையோ, அவர்கள் மூலமாக ஈச்வராநுக்ரஹம் லோகத்துக்குப் பாய்கிறது. அவர்களது சந்நிதானத்திலேயே ஜனங்களுக்கு ஒரு தாப சாந்தி கிடைக்கிறது. லோக ரீதியான வேண்டுதல்கள்கூட நிறைவேறுகின்றன. தனக்கு அன்னியமாக தேவதை இல்லை என்ற ஞானத்தை அடைந்துவிட்ட ஞானியே தேவதைகளுக்கெல்லாம் மேலே பெரிய அநுக்ரஹத்தைப் பண்ணி விடுகிறான். அதனால், அவன் யக்ஞம் செயய்வில்லையே, லோக க்ஷேமத்துக்கு எதுவும் செய்யவில்லையே என்று நினைப்பது தப்பு.

    Contd…Part 3…….

    Source; Subadra
Working...
X