வேதம் - ரிக்-யஜுஸ்-ஸாமம்-அதர்வம் – Part 4
அத்வைதிகள் விஷயத்திலும் யஜுர் வேதத்துக்கு ஒரு விசேஷம் இருக்கிறது. எந்த ஸித்தாந்தமானாலும் அதற்கு ஸ¨த்ரம், பாஷ்யம், வார்த்திகம் என்ற மூன்று இருக்கவேண்டுமென்பது வித்வான்கள் சொல்வார்கள். ஸ¨த்ரம் என்பது ஸித்தாந்ததத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது.
பாஷ்யம் என்பது அதற்கு விரிவுரை. இந்த விரிவுரையையும் ஸாங்கோபாங்கமாக விஸ்தரித்து விளக்குவதுதான் வார்த்திகம். அத்வைத ஸித்தாந்தத்தில் " வார்த்திககாரர் " என்றால் ஸுரேச்வராச்சார்யாள் என்பவரையே குறிக்கும். அவர் எந்த பாஷ்யத்துக்கு வார்த்திகம் செய்தார் ? உபநிஷத்துக்களை ஸ¨த்தரத்தின் ஸ்தானத்தில் வைத்தால், ஆசார்யாள் (சங்கரர்) அந்த உபநிஷத்துக்களுக்கு பாஷ்யம் பண்ணினார். பிரம்ம ஸ¨த்ரம் என்பதற்கும் பாஷ்யம் செய்தார்.
இந்த பாஷ்யங்களை மேலும் விளக்கியே ஆசார்யாளின் நேர் சிஷ்யரான ஸுரேச்வரர் வார்த்திகம் எழுதினார். அப்படி எழுதும்போது, அப்படி எழுதும்போது, ஆசார்யாள் செய்த பத்து உபநிஷத பாஷ்யங்களையும் எடுத்துக் கொள்ளாமல், அவற்றில் இரண்டை மட்டுமே எடுத்துக் கொண்டு, அவற்றுக்கு வார்த்திகம் எழுதினார். அந்த இரண்டு, தைத்ரீய உபநிஷத்தும், பிருஹதாரண்ய உபநிஷத்தும் ஆகும். இவற்றில் தைத்திரீய உபநிஷத்தும், பிருஹதாரண்ய உபநிஷத்தும் ஆகும். இவற்றில் தைத்திரீயம் கிருஷ்ண யஜுஸைச் சேர்ந்தது ; பிருஹதாரண்யகம் சுக்ல யஜுஸைச் சேரந்தது. ஆக இரண்டுமே யஜுர் வேதம்தான்.
தசோபநிஷத்துக்கள் என்கிற முக்கியமான பத்து உபநிஷத்துக்களில் முதலாவதான ' ஈசாவாஸ்யம் ', முடிவான ' ப்ருஹதாரண்யகம் ' சுக்ல யஜுஸைச் சேர்ந்தது. ஆக இரண்டுமே யஜுர் வேதம்தான்.
தசோபநிஷத்துக்கள்தான் என்கிற முக்கியமான பத்து உபநிஷத்துக்களில் முதலாவதான ' ஈசாவாஸயம் ' முடிவான ' ப்ருஹதாரண்யகம் ' இரண்டுமே சுக்ல யஜுர் வேதத்தில் உள்ளவையே என்பதும் இந்த வேதத்துக்கு ஒரு பெருமை.
ஸாமம் என்றால் மனஸை சாந்தப்படுவது, சந்தோஷப் படுத்துவது என்று அர்த்தம். ஸாம-தான-பேத-தண்டம் என்கிறபோது, முதலில் எதிரியைக்கூட அன்பினாலே ஸ்நேஹிதமாக்கிக் கொள்வதற்கு ' ஸாமம் ' என்று பெயர் இருக்கிறது. இப்படி தேவ சக்திகளையும் பரமாத்மாவையும் நமக்கு அந்நியோந்நியமாகப் பண்ணித்தருவது ஸாம வேதம். ஒருத்தரை சந்தோஷப்படுத்த என்ன வழி ?
ஸ்தோத்திரம் செய்தால் அது சந்தோஷப்படுத்துகிறது. அல்லது பாட்டு பாடினால் சந்தோஷப்படுத்துகிறது. ஸ்தோத்திரத்தையே பாட்டாகவும் கானம் செய்து விட்டால் இரட்டிப்பு ஸந்தோஷம் உண்டாக்கும் அல்லவா ? இம்மாதிரிதான் ரிக் வேதத்தில் ஸ்துதிகளாக இருக்கப்பட்ட மந்திரங்களில் பலவற்றையே ஸாம கானமாக ஆக்கித் தருவது ஸாம வேதம். ரிக் வேத மந்திரமேதான். ஆனால் ரிக்கில் முன்னே சொன்ன உதாத்தம், அநுதாத்தம் முதலான ஸ்வரங்கள் மட்டுமே இருக்க ஸாமத்திலோ கானமாகவோ அவற்றை நீட்டிப் பாட விதிகள் செய்திருக்கிறது. பிற்பாடு உண்டான ஸப்த ஸ்வர ஸங்கீதத்துக்கு மூலம் ஸாம கானம்தான்.
ஸாமகானத்தினால் ஸகல தேவதைகளும் அடைந்து விடுகிறார்கள். யக்ஞங்களில் ஆஹதி தருவது மட்டுமின்றி, உத்காதா என்பவர் ஸாம கானம் பண்ணுவதாலேயே தேவதாநுக்கிரஹம் ஸித்திக்கிறது.
ஸோம யக்ஞங்கள் என்பதாக, ஸோம ரஸத்தைப் பிழிந்து ஆஹ§தி கொடுத்துப் பண்ணுகிற யக்ஞங்களுக்கு ஸாமகானம் ரொம்ப முக்கியமாகும்.
ரிக்வேத மந்திரங்களேதான் என்றாலும், ஆத்ம சிரேயஸையும் தேவதா ப்ரீதியையும் விசேஷமாக அளிக்க வல்ல கானரூபத்தில் அமைந்துவிட்டதால், ஸாம வேதத்துக்குத் தனிச் சிறப்பு சொல்லப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே, கீதையில் " வேதானாம் ஸாமவேதோஸ்மி " என்கிறார். " வேதங்களுக்குள் ஸாமவேதமாக இருக்கிறேன் என்கிறார்.
" வேதங்களுக்குள் ஸாமவேதமாக இருக்கிறேன் என்கிறார். நல்லது, கெட்டது எல்லாமே அவர்தான். இருந்தாலும் தன்னுடைய தெய்வீகம் விசேஷமாகப் பிரகாசிக்கிற இடங்களை அர்ஜுனனுக்குச் சொல்லிக் கொண்டு வரும் போது, ஸாம வேதத்தையே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். அம்பாளுக்கு " ஸாம கான ப்ரியா " என்றே லலிதா ஸஹஸ்ர நாமத்தில் ஒரு பேர் வருகிறது. ' ரிக்வேத ப்ரியா ' ' யஜுர்வேத ப்ரியா ' என்று இல்லை. சியாம சாஸ்திரிகளும் ' ஸாம கான விநோதினி " என்று மீனாக்ஷியைப் பாடியிருக்கிறார்.
சிவ அஷ்டோத்திரத்தை எடுத்துக் கொண்டால், அங்கேயும் " ஸாம ப்ரியாய நம :" என்று வருகிறது. ' சந்தேக சாமம் ஒதும் வாயான் ' என்று தேவாரமும் போற்றுகிறது. ஈச்வரன், அம்பாள், விஷ்ணு என்ர மூன்று பேரையும் ரத்ன த்ரயம் என்பதாக, தேவதைகளின் உச்சஸ்தானத்தில் இருக்கப்பட்டவர்களென்று அப்பய தீக்ஷிதர் நிர்த்தாரணம் பண்ணியிருக்கிறார் (நிலை நாட்டியிருக்கிறார்) .
Contd…..5…..
Source: subadra