Announcement

Collapse
No announcement yet.

கஷ்டகாலத்தில் உதவி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கஷ்டகாலத்தில் உதவி

    கஷ்டகாலத்தில் உதவி



    ஒரு குடியானவக் குடும்பம். செல்வச் செழிப்புடன் இருந்த காலம் போய், ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

    அந்தக் குடும்பத்தில் ஒரு மூதாட்டி இறந்து போய் விட்டார். அவருடைய கடைசிப் பயணத்துக்கும் தகனக்கிரியைக்கும் தேவையான பணம் இல்லை. மிகவும் ஆடம்பரமாக – பந்தல், மேளம், தாரை, தப்பட்டை, பூப்பல்லக்கு, சங்கு ஒலி – இறுதி யாத்திரையை சம்பிரதாயமாக நடத்தி வரும் பரம்பரை. பிறரிடம் கடன் கேட்பதும் கௌரவக்குறைவு. குடும்பத்தினர் செய்வதறியாது தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.

    ஸ்ரீமடத்தினிடம் அபார பக்தியுடைய குடும்பமாதலால், எல்லோருக்கும் தெரிந்த மனிதர்கள்.

    மடத்தின் பாராக்காரன், இன்னொரு பாராக்காரனிடம் வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தான்; “ரொம்ப கஷ்டப்படறாங்க அண்ணே; எவ்வளவு செல்வாக்கா இருந்த குடும்பம்! இப்போ, கிழவி பொணத்தை எடுக்கக்கூட முடியல்லே…!”

    பக்கத்து அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பெரியவா செவிகளில் பாராக்காரனின் சொற்கள் விழுந்தன.

    உடனே, கார்வார் ராமமூர்த்தி அய்யரைக் கூப்பிட்டு, கிழவி மறைந்து போன வீட்டுக்குச் சென்று, துக்கம் விசாரித்துவிட்டு, இரண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டு வரச் சொன்னார்கள்.

    கிழவியின் பையனுக்குக் கண்களில் வெள்ளமாய் கண்ணீர் பெருகிற்று – அன்னை மறைந்ததால் அல்ல; ஆசார்யரின் பெருங்கருணையை எண்ணிப் பார்த்ததால்!அந்தக் காலத்து இரண்டாயிரம் ரூபாய் என்பது இந்தக் காலத்து அரை லட்சத்துக்குச் சமம்.

    பெரியவாளுக்கு லட்சியம் முக்கியம்; லட்சங்கள் அல்ல.

    ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

Working...
X