ரிக்-யஜுஸ்-ஸாமம்-அதர்வம் – Part 3
இதைப்பற்றி ஒரு பெரிய கதை உண்டு. சுருக்கமாகச் சொன்னால், யாக்ஞவல்கியருக்கு முன்னால் யஜுர் வேதம் ஒன்றாகத்தான் லோகத்துக்கு வளி வந்திருந்தது. அந்த யஜுர் வேதத்தை வைசம்பாயனரிடமிருந்து யாக்ஞவல்கியர் கற்றுக்கொண்டார். அப்புறம் வைசம்பாயனருக்கும் யாக்ஞவல்கியருக்கும் மனஸ்தாபம் உண்டான போது, குருவானவர் சிஷ்யரிடம், " நான் கற்றுக் கொடுத்ததை எல்லாம் திரும்ப கக்கி விடு " என்றார். அவர் சொல்வது நியாயம்தான் என்று அப்படியே யாக்ஞவல்கியர் கக்கிவிட்டு, சூரியனை குருவாக ஏற்றுக்கொண்டு சரணாகதி செய்தார். அனந்தமான வேதங்களில் அதுவரை லோகத்துக்கு வராதிருந்த இன்னொரு வித யஜுர் வேதத்தை சூரிய பகவான் அவருக்கு உபதேசித்தார். அது வாஜஸநேயி என்றும், சுக்ல யஜுஸ் என்றும் பேர் அடைந்தது. இது ' சுக்லம் ' என்பதால், ஏற்கெனவே வைசம்பாயனர் உபதேசித்தது, இதற்கு மாறாக ' கிருஷ்ண ' யஜுர்வேதம் என்று பெயர் பெற்றது.
கிருஷ்ண யஜுர் வேதத்தில் ஸம்ஹிதை, பிராம்மணம் என்று முழுக்கத் தனித்தனியாகப் பிரிக்காமல், ஸம்ஹிதா மந்திரங்களுக்கு அங்கங்கேயே ப்ராம்மண பாகங்களைச் சேர்த்திருக்கிறது. கலந்து போனதை ' கிருஷ்ண ' என்று சொல்வது வழக்கமாதலாலேயே இந்த வேதத்திற்கு அப்படிச் பெயர் வந்ததாகவும், கலக்காமல் தனித்தனியே ஸ்வச்சமாயிருப்பதை ' சுக்லம் ' என்று சொல்லும் வழக்கப்படி மற்றது அந்தப் பேர் பெற்றதாகவும் சொல்கிறார்கள்.
அத்தனை தேவதைகளுக்குமான ஸ்தோத்திர மயமாக இருப்பது ரிக்வேதத்தின் பெருமை. அதோடு சமூக வாழ்க்கை முறைகளையும் அதுவே நன்றாக எடுத்துச் சொல்கிறது என்று அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக ஸ¨ரியனுடைய புத்திரியின் கல்யாணத்தைப்பற்றி அது சொல்லியிருப்பதை அனுஸரித்துத்தான் விவாஹச் சடங்கே உருவாகியிருக்கிறது. புரூவரஸ்- ஊர்வசி ஸம்வாதம் ( உரையாடல்) போன்ற பல நாடக விசேஷமுள்ள பகுதிகளும் ரிக்வேதத்தில் உண்டு. பிற்காலத்தில் காளிதாஸாதிகள் இவற்றை விஸ்தரித்து எழுதியிருக்கிறார்கள். உஷஸ் (விடியற்காலையின் அதிதேவதை) பற்றிய வர்ணனை போன்ற ரிக் வேதப் பகுதிகளை, மிக உத்தமமான கவிதை என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
வேதங்களில் முதலாவதாக ரிக் வேதத்தை வைத்ததாலேயே, அதற்கு ஒரு ஏற்றம் இருக்கத்தானே வேண்டும் ? யஜுர் வேதத்தில் உள்ள கர்மா, ஸாம வேதத்தில் பண்ணப்பட வேண்டிய (ஸாம கானம் இவற்றிற்கும் தாய்ச்சரக்கு ரிக்வேத ரிக்குகள்தான்.
கர்மயோகத்தை நன்றாக அமைத்துக் கொடுத்திருப்பது யஜுர் வேதத்தின் பெருமை, தர்ச பூர்ண மாஸம், ஸோம யாகம், வாஜபேயம், ராஜஸ¨யம், அச்வமேதம் முதலான அநேத யக்ஞங்களைப் பற்றியும், பலவிதமான ஸத்ர யாகங்களைப் பற்றியும் விரிவாக நமக்குத் தெரிவிப்பது கிருஷ்ண யஜுஸில் உள்ள தைத்ரீய ஸம்ஹிதைதான். அதோடுகூட மந்திரங்களும் இதில்தான் வருகின்றன. உதாரணமாக, இப்போது பெரும்பாலும் வழக்கில் சொல்லப்படும் ' ஸ்ரீ ருத்ரம் ' யஜுர் வேதத்திலிருந்து எடுத்ததுதான். ரிக் வேதத்திலும் பஞ்சருத்ரம் என்று ஐந்து ஸ¨க்தங்களை எடுத்திருந்தாலும் இன்று ' ஸ்ரீ ருத்ரம் ' என்ற மாத்திரத்தில் யஜுர் வேதத்தில் வருவதைத்தான் குறிப்பிடுவதாயிருக்கிறது. இதனால்தான் பரம சாம்பவரான அப்பய தீக்ஷிதர் தாம் யஜுர் வேதத்தில் பிறக்காமல் போனதற்காக விசனப்படுகிறார். அவர் ஸாம வேதி.
இன்றைக்கு அதிகம் பேர் அநுஸரிப்பது யஜுர் வேதத்தைத்தான். யஜுர் வேதிகள் தான் மெஜாரிட்டி. வடக்கே இருப்பவர்களில் பெரும்பாலோர் சுக்ல யஜுர் வேதிகளாகவும், தெற்கத்திக்காரர்களில் பெரும்பாலோர் கிருஷ்ண யஜுர் வேதிகளாகவும் இருக்கிறார்கள். உபாகர்மா (ஆவணி அவிட்டம்) என்று கவர்மென்டில் லீவ் விடுவதானால்கூட ரிக்வேதிகளுக்கோ, ஸாம வேதிகளுக்கோ என்றைக்கு உபாகர்மமோ அன்றைக்கு விடுவதில்லை ; யஜுர் உபாகர்மாவுக்குத்தான் லீவ் விடுகிறார்கள். யஜுர்வேதிகள் மெஜாரிட்டியாக இருப்பதாலேயே இப்படியாயிருக்கிறது.
ரிக் வேதத்திலுள்ள ' புருஷ ஸ¨க்தத் ' திலேயே சில மாறுதல்களோடு யஜுர் வேதத்திலும் வருகிறது. இன்று புருஷ ஸ¨க்தம் என்றால் பொதுவாக யாஜுஷமானது (யஜுர் வேதத்திலுள்ளது) தான் என்றாயிருக்கிறது.

Comment