உபதேசம்
ஒரு சமயம் தேவர்கள், மானுடர்கள், அசுரர்கள் ஆகிய மூன்று இனத்தாரும் பிரஜாபதி (பிரம்மா)இடம் உபதேசம் வேண்டினர். அவர் தமது உபதேசத்தை த – த – த என்ற இடியின் ஒலியாக கூறி அருளினார்.
த என்பதை தேவர்கள், ‘தாம்யத’ என பொருள் கொண்டனர் அப்பதத்துக்கு ‘புலன்களை கட்டுப்படுத்துங்கள்’ என்று அர்த்தம்
தேவர்கள் புலனின்பம் துயிப்பதிலேயே ஈடுபட்டவர்கள். ஆதலால், தங்களுக்கு இந்த உபதேசம் எனக்கொண்டனர்
மானுடரோ த என்பதை ‘தத்த’ என பொருள் கொண்டனர். ‘தத்த’ என்பதற்கு ஈகை உடையவர் ஆக இருங்கள் என அர்த்தம். மானுடர்களுக்கு ஈகை குணம் மிகவும் குறைவாக இருப்பதாலேயே இப்படி உபதேசம். அசுரர்கள் த என்பதை ‘தயத்வம்’ – அதாவது தயையுடன் இருங்கள் – என பொருள் கொண்டனர்.
ஆதி சங்கரர் இதற்கு உரை எழுதுகையில் மானுடரிலேயே தெய்வீக குணமும் அசுர குணமும் உடையவர்கள் இருப்பதால் இம்மூன்று உபதேசங்களுமே மானுடர்களுக்கானவை என தெளிவு செய்துள்ளார்.
நன்றி – கல்கி 09.01.2011 இதழ் ஸ்ரீ ரா. கணபதி அவர்கள்.