ஜீவஹிம்ஸை செய்யலாமா?
யாகம் என்பது மந்த்ரம், தேவதை, ஹவிஸ் என்ற மூன்று ஸ்வரூபமாக உள்ளது. அவைகளுல் மந்த்ரம் என்பது வாயால் சொல்லப்பட வேண்டும். தேவதையை மனஸால் தியானம் செய்ய வேண்டும். ஹோமம் செய்வதற்கு முக்கியமாக வேண்டிய திரவியமே ஹவிஸ். அது காரியத்தில் ஆஹதியாக அக்னியில் செலுத்தப்பட வேண்டியது. இவ்வாறு மனோ-வாக்-காயம் என்ற மூன்றும் ஒருமுகப்படுத்தப் பெறுகின்றன.
ஹவிஸ்ஸில் நெய் முக்கியம். வெறும் நெய்யே ஹோமம் செய்யப்படுவது மட்டுமின்றி, வேறு எதை ஹோமம் செய்தாலும், அதை நெய்யால் சுத்தி செய்தே ஆஹதி பண்ண வேண்டும்.
பல யாகங்களில் ஆஹதியாகப் பிராணிகளின் வபையைக் கொடுக்கச் சொல்லியிருக்கிறது. யக்ஞம் பண்ணுவது பாபமா? புண்ணியமா? மிச்ரமா (இரண்டும் கலந்ததா)? மத்வாசாரியர், பசுவைக் கொன்று யாகம் பண்ணக்கூடாது. மாவால் பசுவின் வபையைப் போல் பண்ணி ஆஹதி பண்ண வேண்டும் என்று கருணையால் ஏற்பாடு பண்ணினார். (பசு என்றால் மாடு என்று அர்த்தமில்லை; எந்தப் பிராணிக்கும் ஸம்ஸ்கிருதத்தில் பசு என்றே பெயர்) .
வியாஸர் " பிரம்ம ஸ¨த்திரம் செய்தார். அதில் ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி வேதத்தின் ஞானகாண்டத்திலுள்ள உபநிஷத் சொல்வதன் தாத்பர்யத்தைச் சொல்லியிருக்கிறார். யக்ஞப் பிரயோகம் வேதத்தின் கர்மகாண்டமான பூர்வ மீமாம்ஸையில் இருக்கிறது. அதனுடைய பிரயோஜனம் வேதத்தின் ஞானகாண்டமான உத்தர மீமாம்ஸையில் இருக்கிறது. அதாவது யாகம் என்ற கர்மா செய்வதால் ஏற்படும் சித்த சுத்தியே ஒருவனை ஞானமார்க்கத்தில் சேர்க்கிறது.
"அசுத்தமிதி சேந்ந சப்தாத்" என்று அந்த பிரம்ம ஸ¨த்ரம் சொல்கிறது. ஆத்ம ஞான அங்கமாக ஸாக்ஷத் வேதமே விதித்தது யக்ஞம். இது அசுத்தமான கர்மாவாக எப்படி ஆகும்? அசுத்தம் என்று நாம் தீர்மானம் பண்ணுவதும், நல்லது கெடுதல் என்று தீர்மானம் பண்ணுவதும், எதனாலே? சாஸ்திரங்களைக் கொண்டு நாம் செய்கிறோம். வேதந்தான் பெரிய சாஸ்திரம்; வேதந்தான் பெரிய பிரமாணம். "யக்ஞம்” ' சப்தம் ' எனப்படும் வேத ப்ரமாணத்திலேயே ஏற்பட்டதாதலால் பாபம் இல்லை", என்று வியாஸர் பிரம்ம ஸ¨த்ரத்திலேயே சொல்கிறார். சுத்தம் அசுத்தம் ஆகியவை வேதம் என்ற சப்தப் பிரமாணத்தால் அறியப்படுகின்றன. கள் குடிக்காதே என்று வேதம் சொன்னால், அது அசுத்தம் என்று தெரிகிறது. வேத அபிப்ராயம் யக்ஞம் அசுத்தம் என்பதாக இருந்தால் வியாஸர் அதை அங்கமாகச் சொல்லமாட்டார்.
மத்வாசாரியார் சொல்கிறபடி மாவினால் பசு பண்ணினாலும், அதில் பிராண பிரதிஷ்டை பண்ணுகிறோம். மந்திர பூர்வமாகப் பிராணப் பிரதிஷ்டை பண்ணிவிட்டால், அதுவும் உயிருள்ள பிராணிக்கு ஸமம்தானே? எனவே, அப்பொழுதும் அதற்கு ஹிம்ஸை உண்டாகிறது என்றுதானே ஆகும்?....
அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று
என்று திருக்குறளில் ஒரு செய்யுள் இருக்கிறது. ஹவிஸை அக்கினியில் ஆஹதி பண்ணி ஆயிரம் யக்ஞம் பண்ணுவதைக் காட்டிலும், ஒரு பிராணியையும் வதைத்து உண்ணாமல் இருக்கிறது நல்லதென்பது இதன் அர்த்தம். இப்படிச் சொன்னதால், திருவள்ளுவர் யக்ஞத்தை நிந்திக்கிறார் என்று அர்த்தமாகாது.
தர்மத்துக்காகச் செய்யவேண்டியது, எப்படியிருந்தாலும் பண்ணவேண்டும்; ஹிம்ஸையென்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ருவதம் பணணுவதை ஸகல ராஜ நீதிப் புஸ்தகங்களும் ஒப்புக்கொள்ளவில்லையா?
கொலைகாரனுக்குத் தூக்குத்தண்டனையை சட்ட புஸ்தகமே விதிக்கிறதல்லவா? அப்படி, லோகத்தில் பல பேருக்குப் பெரிய க்ஷேமத்தை தேவர்கள் செய்யவேண்டுமென்ற உசந்த நோக்கத்தில் அவர்களுக்கு பசு ஹோமம் பண்ணுவதிலும் தப்பேயில்லை.
ஆயிரம் யக்ஞத்தைக் காட்டிலும், ஒரு பிராணியை ஹிம்ஸை பண்ணாமல் இருப்பது நல்லது என்பதால் யாகத்தைத் திருவள்ளுவர் நிந்தித்திருக்கிறார் என்று சொல்லுகிறார்கள். மற்ற யக்ஞங்கள் ஆயிரத்தைவிட, ஒரு அச்வமேத யாகம் செய்வது உயர்ந்தது என்ற மனுவே ஒரிடத்தில் சொல்லியிருக்கிறார். ஆயிரம் பாபத்தைக் காட்டிலும் ஒரு புண்ணியம் உத்கிருஷ்டமானது (உயர்வானது) என்று சொல்லுகிறார்களா? 100 ஏகாதசி உபவாஸத்தைவிட ஒரு சிவராத்திரி உபவாஸம் உத்கிருஷ்டமானது என்று சொல்லலாம். 100 கசாப்புக் கடைகள் வைப்பதைக் காட்டிலும், ஒரு சிவராத்திரி உபவாஸம் உத்கிருஷ்டம் என்று சொல்லுவார்களா? புண்ணிய கர்மாக்களுள்தான் இதைவிட இது உத்கிருஷ்டமானது என்று சொல்லுவார்கள்.
சாந்தோக்யோபநிஷத்தின் முடிவில், அஹிம்ஸையைச் சிறப்பிக்கும் போதுகூட,
" அன்யத்ர தீர்த்தேப்ய :"
என்ற விதிவிலக்குச் சொல்லியிருக்கிறது. அதாவது, வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, வேதத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களைத் தவிர, மற்ற இடங்களில் அஹிம்ஸையை அநுஷ்டிக்க வேண்டும் என்று அர்த்தம்.
Contd……..Part 2……….
source:subadra