Announcement

Collapse
No announcement yet.

வேதம் -தேவகுல - மனிதகுல பரஸ்பர சகாயம் –Part 2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதம் -தேவகுல - மனிதகுல பரஸ்பர சகாயம் –Part 2

    வேதம் -தேவகுல - மனிதகுல பரஸ்பர சகாயம் –Part 2

    யக்ஞம் வரையில் போக வேண்டும் என்பதில்லை. இந்தக் காலத்திலும் டின்னர்,பீஸ்ட் நடத்துகிறார்கள். வெள்ளைக்கார நாகிரிகப்படி நடத்தினால் அதில் இன்னொருத்தனின் ஸெளக்கியத்துக்காகசாப்பிடுவதாகச் சொல்லிக் கொண்டு ' டோஸ்ட் ப்ரபோஸ் ' பண்ணகிறார்கள். சாப்பிடுவது இவர்கள்; அதன் பலன் இன்னொருவனுக்கு என்கிறார்கள்! ஒருத்தன் சாப்பிட்டால் அது அவனுக்குத் தானே புஷ்டி தரும்? இன்னொருத்தனைப் பார்த்து ' உன் புஷ்டிக்காக நான் சாப்பிடுகிறேன்' என்று இவன் டோஸ்ட் சொன்னால், எப்படி அது அந்த இன்னொரு ஆசாமிக்குப் போய்ச் சேரும்? இந்த மாதிரி கேட்பது தப்பு. இதெல்லாம் ஒருவகையான நல்ல மனோபாவம். மனஸார இப்படி நினைத்து நல்லதைப் பண்ணினாலே, எண்ணத்தின் சக்தியால் ( thought - power- ஆல்) மற்றவனுக்கு அது க்ஷேமம் தரும் என்று தான் இப்படிப் பண்ணுகிறார்கள்.

    ஸாக்ஷத் பரமாத்மாவின் சக்தியே எண்ண அலைகளாகி, அவையே சப்த அலைகளாகி மந்திரம் என்று நமக்கு வந்திருக்கிற போது, அவை வாஸ்தவமாகவே மிகுந்த க்ஷேமசக்தி நிரம்பியதாகத்தான் இருக்கும். இப்படி மந்திர பூர்வமாகத் தரும் ஆஹ§தி தேவர்களின் சக்தியை விருத்தி பண்ணுகின்றன. மநுஷ்யர்களைவிட தேவர்கள் ஜாஸ்தி சக்தி பெற்றவர்களென்றாலு அவர்களும் பூரண சக்தர்களல்ல. நிறைந்த நிறைவாக நிரம்பி விட்டவர்களல்ல. அவர்களுக்கும் ஆசைகள் உண்டு. தேவைகள் உண்டு. அவற்றை இந்த யக்ஞங்களே பூர்த்தி செய்கின்றன. லோக வாழ்க்கையை நமக்கு அவர்கள் அநுகூலமாகித் தருகிறார்கள் என்றால், நாமும் அவர்களுடைய சக்தியை விருத்தி செய்து, அவர்களுடைய இஷ்டங்களை நிறைவேற்றித் தருகிற உபகாரத்தை யக்ஞத்தின் மூலம் பண்ணவேண்டும். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற மனோபாவத்தோடு நாம் யக்ஞங்களைப் பண்ணினால், தேவர்களும் அப்படியே நாம் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று பாவித்து நமக்கு அநுக்ரஹம் செய்வார்கள். இப்படி பகவான் கீதையில்
    ( III.1.1) சொல்லியிருக்கிறார

    '' தேவான் பாவயதாநேந தே தேவா பாவயத்து வ:|
    பரஸ்பரம் பாவயந்த : ச்ரேய : பரமவாப்யஸ்த||''

    இப்படி நம்முடைய மதத்தில் பல யக்ஞங்கள் செய்து தேவர்களைப் ப்ரீதி செய்வித்து ஈச்வராநுக்கிரஹத்தற்குப் பாத்திரராவதைச் சொல்லியிருக்கிறது.

    ' தேவர்கள்தான் லோகத்தில் மழை பெய்விக்கிறார்கள். மநுஷ்யர்களுக்கு தன தான்யங்களை, ஆரோக்ய ஐச்வரியங்களைத் தருகிறார்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு மநுஷ்யர்கள் யாகம் பண்ணி, ஆஹதி கொடுத்து ஆஹாரம் போடவேண்டும் என்று சொன்னால், " நம்மையெல்லாம் அன்ன வஸ்திரம் தந்து ரக்ஷிக்கிற அத்தனை சக்தி படைத்த தேவர்களுக்கு நாம் எதற்குச் சாப்பாடு போட வேண்டும் ? அவர்களே தங்கள் ஆஹாரத்தைக் கவனித்துக் கொள்ள மாட்டார்களா ? என்று தோன்றுகிறது. எதற்காக பரஸ்பரம் பாவயந்த : என்று பகவான் சொன்னார் ? அவர்களைப் பெரியவர்களாக வைத்து நாம் பூஜிக்கவேண்டும் என்றால் சரி. அவர்களை நமஸ்காரம் பண்ணுவோம் ; பிரார்த்தனை பம்ணுவோம். அதிலேயே அவர்கள் அடைந்து அநுக்ரஹம் செய்யட்டுமே ! இப்படியில்லாமல், நம்மையும் கொஞ்சம் அவர்களுக்கு ஸமதையாகவே உயர்த்துகிற மாதிரி, equal footing கொடுத்த மாதிரி, " நீங்கள் அவர்களை பாவியுங்கள் ; அவர்கள் உங்களை பாவிக்கட்டும் - நீங்கள் அவர்களுக்கு (யாகத்தால்) சாப்பாடு போடுங்கள் ; அவர்கள் உங்களுக்கு (மழையால்) சாப்பாடு போடட்டும் " என்று சொன்னால் எப்படி ? - இப்படிக் கேள்விகள் தோன்றுகின்றன.

    இதைப்பற்றி நினைக்கிறபோது, எனக்கு, தேவலோகம் இங்கிலாந்து மாதிரி, தேவர்கள் இங்கிலீஷ்காரர்கள் மாதிரி என்று தோன்றுகிறது. இங்கிலீஷ் தேசத்தில் வயல் உண்டா? கிடையாது? பின்னே அவர்கள் லோகத்திலேயே கொடிகட்டிப் பறந்தார்களே! எங்கள் ராஜ்யத்தில் சூரியனே அஸ்தமிப்பதில்லை என்கிறார்களே ! இத்தனை ஆதிக்கம் அவர்களுக்கு எப்படி வந்தது?

    இங்கிலாந்து தேசத்திலே சாப்பாட்டு வசதியில்லை. சரி, அங்கே வேறே என்ன இருக்கிறது என்று பாரத்தால், ஒரே நிலக்கரியும், சாக்குக் கட்டியும்தான். கன்னங்கரேல் என்று நிலக்கரி, வெள்ளை வெளேரென்று சாக்குக் கட்டி -இந்த இரண்டுந்தான் அந்தத் தேசத்தில் முக்கியமாக இருக்கின்றன. இவற்றை அவர்கள் சாப்பிட முடியாது. சாப்பிடக்கூடிய தானியங்களை நிறைய விளைவிக்கிற தேசங்களிலே, பெரிய மெஷின்களை வைத்து பாக்டரிகளை ஏற்படுத்த வேண்டுமானால், அதற்கு நிலக்கரியும் சாக்குக் கட்டியும்தான் வேண்டியிருக்கிறது. நிலக்கரி இன்டஸ்ரிகளுக்கு அவசியம் என்பது எல்லோருக்கும் தெரியும். (பிற்பாடுதான் பெட்ரோல், எலெக்ட்ரிக் பவர் ; இப்போது ' அடாமிக் பவர் ' முதலியன வந்திருக்கின்றன.) நிலக்கரியின் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஸிமென்ட் முதலான பல தொழில்களுக்குச் சாக்குக்கட்டி தேவைப்படுகிறது.

    Contd….Part 3……

    source:subadra
Working...
X